#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
நாங்கள் திரைப்படத்தினை, ‘கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில், ஜிவிஎஸ் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தினை, அவினாஷ் பிரகாஷ் எழுதி இயக்கியிருப்பதோடு, ஒளிப்பதிவினையும், படத்தொகுப்பினையும் செய்துள்ளார்.
‘எஸ் எஸ் ஐ’ புரொடக்ஷன் சார்பில், எஸ் சுப்பையா திரையரங்குகளில் வெளியிடுகிறார். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்ற ‘நாங்கள்’ திரைப்படம் ஏப்ரல் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பயன்படுத்தி வேத் ஷங்கர் சுகவனம் இசையமைத்துள்ளார்.
நாங்கள் படத்தின் கதை 1990களில், ஊட்டியில் நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் வசித்து வரும், ராஜ்குமார் (அப்துல் ரஃபே), பத்மா (பிரார்த்தனா ஶ்ரீகாந்த்) பிரிந்து வாழும் தம்பதியினர். இவர்களின் குழந்தைகளான கார்த்திக் (மிதுன் வி), துருவ் (ரித்திக் எம்), கௌதம் ( நிதின் டி) ஆகிய மூவரும், மிகவும் கண்டிப்பான அப்பாவின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். இவர்களின் தோழனாக கேத்தி (ராக்ஸி) எனும் நாயும் இருந்து வருகிறது. ஊட்டியில் ஒரு பள்ளிக்கூடத்தை நடத்தி வரும், சிறிய அளவில் விவசாயம் செய்து வரும் ராஜ்குமார் கரண்ட் பில் கட்ட முடியாத, ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாத நிலையில் இருந்து வருகிறார். இந்த நிலைக்கு அவர் வர காரணம் என்ன? தம்பதியினர் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? என்பதை மூன்று சிறுவர்களின் உணர்ச்சிப் போராட்டத்தை, உணர்வுபூர்வமாக சொல்வது தான், நாங்கள் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!