#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த துருவ் விக்ரமுக்கு கபடி வீரராக வேண்டும் என்பது ஆசை, துருவ் விக்ரமிற்கு மட்டுமில்லாமல் அவருடைய அப்பாவான பசுபதிக்கும் அந்த ஆசை இருந்தது. ஆனால், அந்த ஊரில் இருக்கும் கபடி வீரர்கள் துருவ் விக்ரமை டீமில் சேர்த்துக்கொள்ளாமல் புறக்கணிக்கின்றனர். ந பள்ளிக்கூடத்தின் துருவ்விக்ரமின் திறமையைப் பார்த்த பி.டி வாத்தியார்,பசுபதியிடம் சென்று நல்ல எதிர்காலம் இருக்கிறது, அவனை எப்படியாவது கபடி வீரராக்க வேண்டும் என்று சொல்கிறார். இதையடுத்து, பிடி வாத்தியாரின் முயற்சியால் துருவிக்ரம், ஒரு கபடி போட்டியில் கலந்து கொண்டு சிறப்பான விளையாடி அந்த ஊருக்கே பெருமை சேர்க்கிறார். துருவ் விக்ரமிற்கு பக்கபலமாக இருந்த அமீர் இறந்துவிட துருவ் விக்ரமிற்கு தொடர்ந்து பிரச்சனைகள் வருகிறது. அந்த பிரச்சனைகளை கடந்து துருவ் விக்ரம் எப்படி கபடி வீரராக மாறினார்.. என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தார் என்பது தான் பைசன் திரைப்படத்தின் கதை.
அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை மையமாக வைத்து 'பைசன்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் துருவ் விக்ரமின் தந்தையாக பசுபதி வழக்கம் போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த படத்தின் கதையை எழுதும் போதே இந்த கதாபாத்திரத்திற்கு பசுபதி தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரின் பெயரையே போட்டே எழுதியதாக மாரிசெல்வராஜ் இசை வெளியீட்டு விழாவில் பேசி இருந்தார். மாரிசெல்வராஜின் நினைத்தது போல பசுபதி ஒவ்வொரு காட்சியிலும் முத்திரைப்பதித்துவிட்டார். அதே போல அமீர் சில காட்சிகளே வந்தாலும் அழுத்தமாக மனதில் பதிந்துவிட்டார். படத்தின் கதாநாயகியாக வரும் அனுபமா பரமேஸ்வரன், துருவ் விக்ரமை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் துருவை காதலிக்கிறார். அவரும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
துருவ் விக்ரம், தனது அப்பாவைப் போலவே சிறப்பாக நடித்து இருக்கிறார். இந்த படம் நிச்சயம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகம் இல்லை. மாரிசெல்வராஜ் தீபாவளிக்கு ஒரு தரமான சரவெடியை கொளுத்திப்போட்டு இருக்கிறார். அது நிச்சயம் சரசரவென வெடிக்கும், கபடி வீரர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்..