#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
சூழ்நிலை காரணமாக குற்றவாளியாகி சிறைக்கு செல்லும் நாயகன் லோகேஷ் கனகராஜின் சாதாரண வாழ்க்கையை சிறைவாசம் அசாதாரணமானதாக மாற்றுகிறது. தொடரும் அவரது குற்ற செயல்களால் காவல்துறை அவரை விரட்டுகிறது. காவல்துறையிடம் இருந்து தப்பித்து ஓடும் பயணத்தில், சஞ்சனா ஏ.கே-வை சந்திக்கிறார். அவருடனான நட்பு அவரது மனநிலையை மாற்றும் நேரத்தில், போலீஸின் துப்பாக்கி சூட்டுக்கு அவர் பலியாகி விடுகிறார். அங்கிருந்து தப்பித்து ஓடும் லோகேஷ் கனகராஜ், தனக்கு பிடிக்காத வாழ்க்கை வாழும் வாமிகா கபியை சந்திக்கிறார். அவரது நரக வாழ்க்கையை புரிந்துக்கொண்டு அதில் இருந்து அவரை காப்பாற்றுகிறார்.
காப்பாற்றப்பட்ட வாமிகா கபி, எங்கு செல்வது என்று தெரியாமல் லோகேஷ் கனகராஜுடன் பயணிப்பதுடன், தன்னை சீரழித்த மருத்துவரை கொலை செய்கிறார். இதனால் போலீஸ் இருவரையும் சேர்த்து துரத்துகிறது. போலீஸிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் இவர்களது பயணத்தை, காவல்துறைக்கும் – குற்றவாளி கும்பலுக்கும் இடையே நடக்கும் மோதலாக சொல்வது தான் ‘டிசி’.
தவறு செய்பவர்களை போலீஸ் தட்டிகேட்பார்கள், ஆனால் அந்த போலீஸே தவறு செய்தால், அவர்களது பாணியில் தட்டிகேட்பவர்களுக்கு ரவுடி மற்றும் குற்றவாளி முத்திரை குத்தப்படும். அப்படிப்பட்ட அடையாளத்துடன் பயணிக்கும் நாயகன், போலீஸால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பழி தீர்க்க களம் இறங்க, இரு தரப்புக்கும் இடையே நடக்கும் மோதலை அதிரடியாக மட்டும் இன்றி ரசிக்கும்படியாகவும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் காட்சி மொழியில் சொல்லியிருக்கிறார்.
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தேவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் அதிரடியாக அறிமுகமாகியிருக்கிறார். கதபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாகவும், அளவான நடிப்பின் மூலமாகவும் கவனம் ஈர்ப்பவர், ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் வாமிகா கபி, தனது நரக வாழ்க்கையை தன் உடல்மொழி மூலமாகவே நேர்த்தியாக பிரதிபலித்திருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் சஞ்சனா.ஏ.கே, அதிகப்படியான ஒப்பனையோடு அறிமுகமாகி சில காட்சிகள் தலைகாட்டினாலும், அவரது முடிவு பார்வையாளர்கள் மனதை கனக்க செய்கிறது.