#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
சென்னை, பிப்ரவரி 1, 2026, புகழ்பெற்ற கராத்தே மாஸ்டர் கேரிபாலாவின் வழிகாட்டுதலின் கீழ் சென்செய்ஸ் எஸ். ரோஷன், பி. பிரணவ், பி. பத்மநாபன் தீரஜ் ஆகியோரால் மெய் சிலிர்க்கும் கராத்தே சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
இந்த நிகழ்வு ஒழுக்கமான கலையான, கராத்தே மற்றும் குருவின் மீதான மிகுந்த மரியாதை, நன்றியுணர்வு மற்றும் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் நோக்கதுடன் மறைந்த மாபெரும் குருவான ஷிஹான் ஹுசைனி - ஹு (இந்திய இஷின்ரியு கராத்தேயின் தந்தை) அவர்களின் நினைவாக மற்றும் அவரை பெருமை படுத்தும் விதமாக நடத்தப்பட்டது.
எங்கள் ஜென் இஷின்ரியு கராத்தே மாணவர்கள் - 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சென்செய் பி. பத்மநாபன் தீரஜின் மார்பின் மீது 101 பாராங்கற்கள் உடைக்கப்பட்டன., சென்செய்ஸ் பி. பிரணவ் மற்றும் எஸ். ரோஷன் ஆகியோர் தலா 101 தொகுப்பு ( sets) நெருப்பு ஓடுகளை உடைத்து சாதனை படைத்துள்ளனர்.
சென்னை, மயிலாப்பூரில் உள்ள மான்ட்ஃபோர்ட் அரங்கில் நடைபெற்ற இந்த சாதனை, ஹன்ஷி கேரிபாலா என பிரபலமாக அறியப்படும் புகழ்பெற்ற மாஸ்டர் டி. பாலமுருகனின் வழிகாட்டுதலின் கீழ் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனை நிகழ்வில் நீதிபதி திருமதி வி. செல்லம்மாள், பி.ஏ.பி.எல்., எல்.எல்.எம் அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்த நிகழ்வு தற்காப்புக் கலைகளின் உண்மையான கொண்டாட்டமாக அமைந்தது, எதிர்காலத் தலைவர்களையும் சமூகத்தையும் வயதைத் தாண்டிப் பார்க்கவும், அவர்களின் திறனை ஏற்றுக்கொள்ளவும் தூண்டியது.