#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
மனிதன் தெய்வமாகலாம்’ படக்குழுவினர் கடும் உழைப்பாளிகள், அவர்களைப் பார்த்து நான் இப்படியும் படம் எடுக்க முடியும் என்பதை கற்றுக் கொண்டேன் என இயக்குநர் செல்வராகவன் பாராட்டியுள்ளார்.
ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் ’மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படத்தில் பிரபல இயக்குநர் செல்வராகவன் முதன்முறையாக நாயகனாக நடித்துள்ளார். டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் இப்படத்தில் குஷி ரவி கதாநாயகியாகவும், மைம் கோபி, கௌசல்யா, ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் முன்னோட்ட நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது ஒய்.ஜி.மகேந்திரன் பேசுகையில், “இந்தப் படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் எப்படி கூறினாரோ அதே போல் படமாக்கியுள்ளார். இது உணர்ச்சிப்பூர்வமான திரைப்படமாகும். எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் எம்.எஸ்.வி அதற்குப் பிறகாக இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.கே.ப்ரியன் இசை எனக்கு பிடித்துள்ளது. மேலும் இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி சொன்னால் நீங்கள் அனைவரும் சிரிப்பீர்கள்.
நான் இதில் ஒரு நல்ல அரசியல்வாதியாக நடித்துள்ளேன். இன்றைய சூழலில் நல்ல அரசியல்வாதியாக இருப்பது மிகவும் சிரமமாகும். வெறும் நான்கு காட்சிகள் நடித்திருந்தாலும், அவை அனைத்துமே கதையில் விருப்பத்தை ஏற்படுத்தக்கூடியவை, படத்தில் என்னுடைய எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மைம் கோபி, அவர் சிறப்பாக நடித்துள்ளார்” எனக் கூறினார்.
நடிகர் மைம் கோபி பேசுகையில், “இயக்குநர் செல்வராகவனை 7G திரைப்படத்திலிருந்து எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக ஒரு காட்சி வரும். கதாநாயகன், உயிரிழந்த கதாநாயகியின் படுக்கை விரிப்பைகளை எடுத்து செல்வான். ஒரு மனிதர் எப்படி யோசிக்க முடியும் இப்படி? நாமெல்லாம் காதலிக்கும் போது காதலியின் தலைமுடி, அவள் சாப்பிட்ட சாக்லேட்டின் கவர் ஆகியவற்றை சேகரித்து வைப்போம். இவைகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம். இருப்பினும் செல்வராகவன் வித்தியாசமாக யோசித்து இருப்பது என்னை வியப்படைய வைத்தது.
அந்த அளவிற்கு சினிமாவை நேசிக்கக் கூடியவர். இந்தப் படத்தில் செல்வராகவனை நான் மிரட்டுவது போன்ற காட்சியை எடுக்க இயக்குநர் திட்டமிட்டிருந்தார். அப்போது செல்வராகவன் கண்களை பார்த்து நான் மிரண்டு விட்டேன், இருந்தபோதிலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமாளித்து விட்டேன்” என்றார்.
தொடர்ந்து இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் பேசுகையில், “இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அசுரத்தனமாக உழைத்தனர். அவர்கள் எப்போது தூங்குவார்கள், சாப்பிடுவார்கள் என்பதுகூட தெரியாத அளவிற்கு கடும் உழைப்பாளிகள், அவர்களைப் பார்த்து நான் இப்படியும் படம் எடுக்க முடியும் என்பதை கற்றுக் கொண்டேன்.