#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
படத்தின் கதையை பொறுத்தவரையில், சென்னையில் ஒரு பெண்ணை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, குப்பைத் தொட்டியில் வீசப்படுகிறார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் முழுவதும் கருப்பு நிறமாக மாறிவிடுகிறது. ஏற்கனவே மும்பையில் தனது மகளை யாரோ இதேபோல் கொலை செய்ததையும், தன்னையும் அதேபோல் கொலை செய்ய முயற்சித்ததால், காவல் அதிகாரியாக உள்ள விஜய் ஆண்டனி இந்த வழக்கை விசாரிக்க சென்னைக்கு வருகிறார்.
வழக்கை விசாரிக்க வந்த விஜய் ஆண்டனி மற்றும் காவல்துறைக்கு அஜய் தீஷன் மீது சந்தேகம் வருகிறது. அவர் தான் குற்றவாளி என நினைத்த போது, கதை வேறு கட்டத்திற்கு நகர்கிறது. அதன் பின்னரும் ஒரு பெண் அதேபோல் கொலை செய்யப்படுகிறார். கொலை செய்வது யார்? அவருக்கு என்ன நோக்கம்? எதனால் இப்படி கொலை செய்கிறார் என்பதுதான் மீதிக்கதை.
படத்தின் திரைக்கதையை பொறுத்தவரை முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி என இரண்டிலும் ஒரே மீட்டரை மெயின்டையின் செய்தது படத்திற்கு பிளஸ். அதேபோல் முதல் பாதி திரைக்கதையில் அஜய் தீஷனின் ப்ளாஷ் - பேக்கிலேயே கொண்டு சென்றது படத்திற்கு கொஞ்சம் தொய்வு தான். அதேபோல், யுவாவின் ஒளிப்பதிவும் லியோ ஜான் பாலின் படத்தொகுப்பும் பரபரப்பை கூட்ட முயற்சிக்கிறது. படத்தை எழுதி இயக்கியது மட்டுமல்லாமல் படத்தொகுப்பு லியோ ஜான் பால் செய்துள்ளதால், படத்தொகுப்பும் கவனிக்க வைக்கிறது. விஜய் ஆண்டனியின் பின்னணி இசை பயத்தையோ பரபரப்பையோ கூட்டும் அளவுக்கு இல்லை என்றாலும், படத்துக்கு ஓரளவுக்கு சப்போர்ட் செய்துள்ளது. நடிப்பு மற்றும் மேக்-அப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்
அதேபோல், அஜய் தீஷன் தனது கற்பனையில் கொலை நடந்த இடத்திற்கும், கொலையாளியை பின் தொடர்ந்து செல்வதையும் பார்க்கும்போது இது டைம் டிராவல் படமா என்ற சந்தேகமே எழுந்துவிட்டது. அதற்கு படத்திலேயே அறிவியல் பூர்வமாக விளக்கம் கொடுத்தது அருமை. படத்தின் கிளைமேக்ஸில் கொலையாளியின் நோக்கம் மட்டுமல்லாது, முந்தைய கொலைகள் எல்லாவற்றையும் கனெக்ட் செய்ததற்காகவே இயக்குநருக்கு தனி பாராட்டுகள். கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ரசிகர்களை திருப்தியுடனே சீட்டில் இருந்து எழுந்து செல்ல வைக்கிறது. மக்கள் கவனம் பெற்றால் மார்கன் விஜய் ஆண்டனி திரை வாழ்க்கையில் நல்ல மார்க் வாங்கிய படமாக மாறும்.