#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விமல் நாயகனாக நடிக்க, எல்சன் எல்தோஸ் மற்றும் இரட்டை இயக்குநர்கள் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினராக உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு, முழுமையாக நிறைவடைந்துள்ளது.
சமீபத்தில் காரைக்குடியில் பிரம்மாண்ட பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், படத்தை ஆரம்பித்த வேகத்தில் 45 நாட்களில் ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளது படக்குழு.
மலையாளத் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற “ககனச்சாரி, பொன்மேன்” படங்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் நிறுவனம், இந்த புதிய படம் மூலம், தமிழ் திரையுலகில் கால்பதித்துள்ளனர். தயாரிப்பாளர் விநாயகா அஜித் இப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் கதாநாயகனாக விமல் மற்றும் கதாநாயகியாக முல்லை அரசி நடிக்க, விடுதலை சேத்தன், பருத்திவீரன் சரவணன் உட்பட மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து, நடித்துள்ளனர்.
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, குடும்பங்களோடு அனைவரும் கொண்டாடும் வகையில், ஒரு அசத்தலான காமெடி எண்டர்டெயினராக இப்படத்தை, அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கி வருகின்றனர்.
எழுத்தாளர் பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்கள். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்துள்ளார். பார்க்கிங் வெற்றிப்பட ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரான்சிஸ் நெல்சன் சேவியர் மற்றும் மருது பெரியசாமி வசனம் எழுதியுள்ளனர். எடிட்டிங் மதன், கலை இயக்கம் ராஜ்கமல், ஸ்டண்ட் தினேஷ் காசி, எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் ரஞ்சித் கருணாகரன் ஆகியோர், தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.