#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
மூன்று தலைமுறையிலும் அந்தந்தத் தலைமுறையினர் காதலை எப்படி அணுகுகிறார்கள் என்பதைக் கூறுகிற இப்படம், காலமாற்றத்தில் வெளிப்படும் காதலின் மாறுபட்ட பரிமாணத்தைச் சித்தரிக்கும் வகையில் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ் அக்கா’ என்று பிரபலமான ஆர்னிகா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை இயக்கம், உடை அலங்காரம், இணைத் தயாரிப்பு என்று பல்வேறு பொறுப்புகளை ஏற்றதுடன் கதாநாயகியாகவும் நடித்து இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் தயாரிப்பாளர் சிவகுமார் முக்கியமான வேடம் ஏற்று நடித்துள்ளார்..
நாயகி ஆர்னிகாவுடன் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் கோயம்புத்தூர் மாப்ள, கே என் ஸ்மைலி எனப்படும் கார்த்திகேயன் என இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்..
இப்படத்திற்கு வேதை பா. மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார். அரவிந்த் படத்தொகுப்பு செய்துள்ளார்.
நிர்வாகத் தயாரிப்பாளராக பிரசன்ன குமார் பங்கேற்றுள்ளார் .
மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சிவகுமார் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் ,பொருளாளர் இயக்குநர் பேரரசு ,நடிகை வனிதா விஜயகுமார்,நடிகர் கூல் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்..
ஆடிசனுக்குப் போயிருப்பேன்.
நீங்கள் மூக்கை அறுவை சிகிச்சை செய்து கொண்டு வாருங்கள், அதன் பிறகு ஒரு போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டு வாருங்கள் என்றார்கள். அப்படி நான் அறுவை சிகிச்சை செய்திருந்தால்? ஒரு குறும்படத்திற்குக் கூட நான் இரண்டு ஆண்டுகள் அவர்களைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தேன்.அந்த குறும்பட வாய்ப்பை இரண்டு ஆண்டுகள் தாமதமாக முடிக்காமல் முன்பே கொடுத்திருந்தால்?
ஒரு கண்டன்ட் வீடியோவிற்குச் சின்ன வசனம் பேசுவதற்குக் கூட நான் நாலு மணி நேரம் செலவிடுவேன்.
அவர்கள் நல்லதொரு கண்டன்ட் இருக்கிற மாதிரி ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால்? நான் தேடி அலைந்து கொண்டிருந்த போது ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தால் ? பலமுறை தேடிச் சென்று கொண்டிருந்தபோது ஒரு திரைப்படத்தில் ஒரு துணைநடிகையாக நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்திருந்தால்?
இன்று ‘லவ் 3. ஓ’ என்கிற படத்தில் நான் கதாசிரியராக பாடல் ஆசிரியராக உடையலங்கார நிபுணராக கலை இயக்குநராக இணைத் தயாரிப்பாளராக கதாநாயகியாக இயக்குநராக என்று உருவாகி இருக்க மாட்டேன்.
இவை எல்லாவற்றிற்கும் அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.அன்று நான் வாய்ப்பு தேடி அலைந்த போது வாய்ப்பு கொடுக்காதவர்களுக்கு நன்றி.
நமது வாழ்க்கையில்
எதிர்மறையாக ஒன்று நடக்கிறது என்றால், ஒன்று தாமதமாகிக் கொண்டே இருக்கிறது என்றால் ஒரு நல்ல விஷயத்திற்காகத்தான் அது அப்படிச் செல்கிறது என்று சொல்வார்கள்..
நாம் வாய்ப்பு கேட்டுத்தானே பல படிகள் ஏறிக் கொண்டிருந்தோம், இன்று நான் ஒரு நடிகையாக ஒரு இயக்குநராக ஆகியிருக்கிறோம் என்கிற போது இப்போது நினைத்துப் பார்த்தால் ஒன்று தோன்றுகிறது.
நமக்கு ஒன்று தேவைப்படுகிறது என்றால் நாம் தான் அதைச் செய்ய வேண்டும்..
வேறு யாரும் நமக்கு உதவி செய்ய வர மாட்டார்கள். நாம் ஒன்றை அடைவதற்கு நாம் தான் முயல வேண்டும்; போராட வேண்டும். அப்படி உங்களுக்கு எது வேண்டுமானாலும் நீங்கள் தான் போராட வேண்டும். யாரும் போராட வர மாட்டார்கள்..
இப்படிப் போராடி வந்து நான் நின்று இருக்கும் இந்த மேடையையே ஒரு வெற்றியாகத்தான் நினைக்கிறேன் .கண்டிப்பாக மக்கள் ஆதரவு தருவார்கள். இந்தப் படத்தில் நான் பணியாற்றி இருக்கிறேன் என்றால் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். போகப் போக அதைத் திருத்திக் கொள்கிறோம். அனைவருக்கும் நன்றி. அனைவரும் நன்றாகச் செய்திருக்கிறார்கள். இங்கே இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்து எங்களை வாழ்த்தி இருக்கும் திரை உலகப் பிரமுகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி..
எங்களது ரீல்ஸ் களைப் பார்த்துதான் மக்கள் இவ்வளவு தூரம் எங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதிலும் எங்களுக்கு ஆதரவு கொடுக்காமலா இருப்பார்கள்? கண்டிப்பாகச் செய்வார்கள். எங்களுடைய சிறந்ததைக் கூடுமானவரையில் நாங்கள் செய்திருக்கிறோம். காலத்துக்கு ஏற்ற மாதிரி மக்களை சந்தோஷப்படுத்துவது போல ஒரு விஷயத்தை செய்திருக்கிறோம். அது கண்டிப்பாகப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அனைவரும் ஆதரவு கொடுங்கள்..
எனக்கு எல்லா கதாநாயகர்கள் கதாநாயகிகளையும் பிடிக்கும். இது நாள் வரை கூட்டத்துக்குள் ஒருத்தியாக இருந்து கொண்டு கைதட்டிக் கொண்டிருந்தேன். இப்போது இந்த மேடைக்கு வந்திருக்கிறேன்
எனக்கு ஒரு வெற்றி வாய்ப்பைக் கொடுத்தால் வெளியில் இருக்கும் பல திறமைசாலிகளையும் உள்ளே கொண்டு வருவேன்.
நான் பல இடங்களுக்கு வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறேன்.அதன் வலி எனக்குத் தெரியும். என்னைப் போல் உள்ளவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் எனக்கு ஆதரவு கொடுங்கள். அதற்கு ஒரு சின்ன வாய்ப்பை கொடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்றார் . அவர் பேசும்போது கண்கள் கலங்கின.