#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண்கள் என்று முழங்கி அதற்கேற்றவாறு செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். சுதந்திர போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸின் வழியை பின்பற்றியவர் அவர். குறிப்பிட்ட சமுதாயத்தினர் அவரை தெய்வத்துக்கு நிகராக மதித்து கொண்டாடுகிறார்கள். அவரது பிறந்தநாள், இறந்தநாளை முன்னிட்டு பசும்பொன்னுக்கு படையெடுத்து அவரது சமாதிக்கு சென்று குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமின்றி பலரும் சென்று மரியாதை செலுத்துவார்கள்.
இதற்கிடையே அவரது வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து தேசிய தலைவர் என்ற திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதனை சத்யா என்பவர் தயாரித்திருக்கிறார். விஜயகாந்த்தை வைத்து ஊமை விழிகள் படத்தை இயக்கிய அரவிந்த்ராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். முத்துராமலிங்க தேவராக பஷீர் நடித்திருக்கிறார்.