#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
அந்தந்த தருணத்தில் ஒவ்வொருவரும் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை ஒரு ரொமாண்டிக் திரில்லர் வடிவில் கொடுத்துள்ளார் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். முதல் பகுதி முழுக்க ஒரு காதல் கதையும் இரண்டாம் பாதி முழுக்க ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தையும் கொடுத்துள்ளார். காதல், சண்டை, எமோஷனல் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் தருணம் படம் அமைந்துள்ளது. முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கிஷன் தாஸ் இந்த படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் அந்த பாடி லாங்குவேஜ் கொண்டுவர சிரமப்பட்டாலும் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து உள்ளார். இன்வெஸ்டிகேஷன் காட்சிகளில் அவரது நடிப்பு நன்றாகவே இருந்தது. இரண்டாம் பாதி முழுக்கவே பரபரப்பான காட்சிகளிலும் எதார்த்தமாக நடித்திருந்தார். ஸ்ம்ருதி வெங்கட்டிற்கு படம் முழுக்க வரும் கதாபாத்திரம், அதனை புரிந்து கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வில்லன் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் ராஜ் ஐயப்பா நன்றாகவே நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் தான் படத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துகிறது. பால சரவணன் வழக்கம்போல தனது ஒன்லைன் பஞ்ச்களில் சிரிக்க வைக்கிறார். இரண்டாம் பாதி முழுக்க ஒரே இடத்தில் நடைபெற்றாலும் பெரிதாக போரடிக்கவில்லை.
அதற்கு முக்கிய காரணம் ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவும், அருள் இளங்கோ சித்தார்த் எடிட்டிங் தான். தர்புகா சிவாவின் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசையில் அசத்தி உள்ளார். அவரது பின்னணி இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. மொத்தமாக பார்ப்பதற்கு ஒரு நல்ல திரில்லர் படத்தின் பீல் கொடுத்தாலும் தருணம் இன்னும் நல்ல ஒரு படமாக அமைந்திருக்கலாம். படத்தின் கேஸ்டிங் முக்கிய பிரச்சினையாக உள்ளது. நடிகர்கள் நன்றாக நடித்திருந்தாலும் அந்தந்த கதாபாத்திரத்திற்கு ஒட்டவில்லை. குறிப்பாக ஹீரோ கிஷன் தாஸ், ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்று சொன்னாலும் நம்பும்படி இல்லை. அதேபோல் இரண்டாம் பாதியில் பல இடங்களில் லாஜிக் மீறல்களும் உள்ளன. இரண்டாம் பாதியில் வரும் விறுவிறுப்பான காட்சிகளை பார்க்க முதல் பாதி முழுக்க பொறுமையாக பார்க்க வேண்டும். சிறு சிறு குறைகள் இருந்தாலும் திரில்லர் பட ரசிகர்கள் தருணம் படத்தை பார்க்கலாம்.