#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
ஏழ்மையில் வாடுகிற ஒரு குடும்பம். தாயில்லாமல் தவிக்கிற அந்த குடும்பத்தைத் தாங்கிப் பிடித்து வருகிறார் தந்தை. அவருக்கு ஒரு மகன், ஒரு மகள். Padai Thalaivan Movie Review
இவர்களோடு ஒரு யானையையும் பிள்ளையாகக் கருதி வளர்த்து வருகிறார் அந்த தந்தை. உண்மையைச் சொன்னால், குட்டியாக இருக்கும்போதே அதனை வளர்த்தவர் அவரது மனைவிதான். Padai Thalaivan Movie Review
ஒருநாள் வாங்கிய கடனுக்கான வட்டியைத் திருப்பிச் செலுத்தாததால், வீட்டு வாசலில் அந்த தந்தையை நிற்க வைக்கிறார் கடன் கொடுத்தவர். நிற்பது என்றால் உணவு, நீர் எதுவுமின்றி ஒரே இடத்திலேயே இருப்பது. Padai Thalaivan Movie Review
இருவரும் உறவினர்கள் தான். ஆனாலும், ‘கடன் அன்பை முறிக்கும்’ என்ற கொள்கையைக் கொண்டவர் எதிராளி. அதனால், அந்த தந்தை அக்கஷ்டத்தைத் தாங்கிக் கொள்கிறார்.
அந்த அவமானத்தைக் காணச் சகிக்காமல், தனக்குத் தெரிந்தவர்கள் அனைவரிடமும் கடன் கேட்கிறார் மகன். ஒருவழியாகப் பணத்தைத் திரட்டிக்கொண்டு வந்து, கடனைத் திருப்பிச் செலுத்தி, தந்தையை அழைத்துப் போகிறார்.
அதன் தொடர்ச்சியாக, ’நம்ம யானையை சினிமா ஷுட்டிங் அனுப்பிச்சா நல்லாவே பணம் வரும்ல’ என்று ஐடியா தருகிறார் அந்த மகனின் நண்பர்களில் ஒருவர்.
தந்தைக்கு அதில் இஷ்டமே இல்லை. ஆனாலும், ஒருமனதாகச் சம்மதிக்கிறார். ஆனால், படப்பிடிப்புக்கு யானை வேண்டும் என்று சொல்லி அலைந்து கொண்டிருந்த நபரோ, ‘உங்க யானைக்கு ட்ரெய்னிங் கொடுத்தா தான் தேறும். அதுவரைக்கும் கல்யாணம், திருவிழாவுக்கு வேணும்னா கூட்டிட்டு போகலாம்’ என்கிறார்.
அவர் சொன்னதை அசை போடும் அந்த மகன், ஒரு கல்யாண வைபவத்திற்கு யானையை அழைத்துச் செல்கிறார். ஆனால், அதற்குள் கடன் கொடுத்த நபர் ‘சூதுவாது’டன் சில காரியங்களைச் செய்கிறார். அதனால், யானைக்கு மதம் பிடிக்கிறது. அந்த விஷயம் வீடியோவில் பதிவாகி நாடெங்கும் ‘வைரல்’ ஆகிறது.
அதன்பிறகு என்ன ஆனது? அந்த யானையைத் தொடர்ந்து வளர்ப்பதில் அந்த தந்தையும் மகனும் சிக்கலை எதிர்கொண்டார்களா என்று விவரிக்கிறது ‘படைத் தலைவன்’ படத்தின் மீதி. மொத்தப் படமும் நமக்கு ‘கும்கி’யை நினைவூட்டுகிறது.
பிரபு சாலமோன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகம் ஆன ‘கும்கி’க்கும் ‘படைத்தலைவன்’ படத்திற்கும் பெரிதாகச் சம்பந்தம் இல்லை தான். நாயகனுக்கும் அவர் வளர்க்கிற யானைக்குமான பந்தம் பிரதானமாகக் காட்டப்பட்டுள்ளது உட்பட ஒரு சில ஒற்றுமைகள் இரண்டிலும் உண்டு.