#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
ஒத்த ஓட்டு காரணமாக மிகப்பெரிய அரசியல்வாதியான முத்தையா தேர்தலில் தோல்வியடைய மீண்டும் வரும் தேர்தலில் அவர் வெற்றி பெற என்ன செய்தார் என்பது தான் படத்தின் கதை. கூடவே குடும்ப ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக தனது 3 தங்கைகளுக்கு திருமணம் செய்து வைக்க 3 சகோதரர்களை தேடும் கதையையும் அதற்கு ஒரு வித்தியாசமான லாஜிக்கையும் இயக்குநர் வைத்திருக்கிறார். 85 வயதாகும் கவுண்டமணிக்கு 3 மகள்கள் என்று வைத்திருந்தால் கூட நல்லா இருக்குமே என படத்தை பார்த்த சிலர் தியேட்டரிலேயே கமெண்ட் அடிக்க ஆரம்பித்துவிட்டனர்
நடிகர்கள்: கவுண்டமணி, யோகி பாபு இசை: சித்தார்த் விபின் இயக்கம்: சாய் ராஜகோபால் சென்னை: கடந்த ஆண்டு ராமராஜன், மோகன் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் மீண்டும் ஹீரோவாக நடித்த படங்கள் வெளியாகின. ஆனால், அந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், அதே வரிசையில் இடம்பிடித்துள்ளது காமெடி லெஜண்ட் கவுண்டமணி நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படம். "Fire: பேன்டும் போடல.. பட்டனும் போடல.. பாடல் முழுக்க ஒரே கசமுசா தான்.. ரச்சிதாவிற்கு குவியும் கண்டனம்!" பலருக்கும் இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானதே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த வாரம் சுமார் 7 சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகி உள்ளன என்பது கூடுதல் தகவல். இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ஹிமா பிந்து உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. 10 ஆண்டுகள் கழித்து ஹீரோவாக கம்பேக் கொடுத்துள்ள கவுண்டமணிக்கு இந்த ஒத்த ஓட்டு முத்தையா வொர்த்தா? இல்லையா? என்பதை விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க.. "ராதிகா எனது அம்மா இல்லை.. அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்.. ஓபனாக பேசிய வரலட்சுமி" ஒத்த ஓட்டு முத்தையா கதை: ஒத்த ஓட்டு காரணமாக மிகப்பெரிய அரசியல்வாதியான முத்தையா தேர்தலில் தோல்வியடைய மீண்டும் வரும் தேர்தலில் அவர் வெற்றி பெற என்ன செய்தார் என்பது தான் படத்தின் கதை. கூடவே குடும்ப ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக தனது 3 தங்கைகளுக்கு திருமணம் செய்து வைக்க 3 சகோதரர்களை தேடும் கதையையும் அதற்கு ஒரு வித்தியாசமான லாஜிக்கையும் இயக்குநர் வைத்திருக்கிறார். 85 வயதாகும் கவுண்டமணிக்கு 3 மகள்கள் என்று வைத்திருந்தால் கூட நல்லா இருக்குமே என படத்தை பார்த்த சிலர் தியேட்டரிலேயே கமெண்ட் அடிக்க ஆரம்பித்துவிட்டனர். படம் எப்படி இருக்கு?: சோஷியல் மீடியாவில் அரசியல்வாதிகளை வைத்து வெளியாகும் அனைத்து ட்ரோல் வீடியோக்களையும் ஒரே இடத்தில் பார்த்தது போன்ற அனுபவத்தை கொடுக்கிறது. சமாதியில் தியானம் செய்வது, தரையில் அடித்து சத்தியம் செய்வது, வாய்ப்பில்லை ராஜா என பேசுவது என யோகி பாபு முடிந்தவரை தனது நடிப்பால் படத்தைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார். கவுண்டமணி வரும் காட்சிகளும், அவர் பேசும் வசனங்களும், சண்டை செய்யும் காட்சிகள் எல்லாம் பெரிதாக ஈர்க்கவில்லை. காமெடி ஜாம்பவானை வைத்து ட்ரோல் வீடியோ எடுத்தது போலத்தான் படம் உள்ளது.
கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் அப்பப்போ ரசிகர்களை சிரிக்க வைக்கவும் சிந்திக்க வைக்கவும் எடுத்துக் கொள்ளும் முயற்சி மட்டுமே படத்திற்கு பலமாக உள்ளது. மற்றபடி பெரிதாக எதுவுமே இல்லை.
இன்றைய அரசியல் சூழலை நய்யாண்டி செய்ய வேண்டும் என்கிற சிந்தனையுடன் இயக்குநர் இந்த படத்தின் கதையை சொல்ல அதற்கு ஓகே சொல்லித்தான் கவுண்டமணி பல வருடங்கள் கழித்து நடிக்க ஒத்துக் கொண்டிருப்பார் என தெரிகிறது. ஆனால், படத்தின் மேக்கிங்கில் இயக்குநர் தனது திறமையை சரியாக காட்டாமல் மினி சீரியல் போல காட்சிகளை எடுத்து வெட்டி, ஒட்டி, அடிக்கடி படத்திற்கும் கதைக்கும் ஒட்டவே ஒட்டாத பாடல்களை நிரப்பி சில கிளுகிளுப்பு காட்சிகளை இணைத்து என்னமோ கிண்டி கொடுத்திருக்கிறார். ஒத்த ஓட்டு முத்தையா மொத்தத்தில் கவுண்டமணி எனும் லெஜண்டுக்கு வொர்த்தான படமில்லை.