#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு அப்படியே இறந்து போகிறார், விஷயம் அதுவில்லை, அவர் இறக்கும் போது சொல்ல முடியாத ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.
அந்த பிரச்சனை முடித்தால் தான் அப்பா இறந்ததையே வெளியே சொல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது வைபவ் அவருடைய அண்ணன் மற்றும் குடும்பத்தினருக்கு.அந்த வெளிய சொல்ல முடியாத பிரச்சனையை தீர்த்தார்களா, அப்பாவிற்கு செய்ய வேண்டிய காரியத்தை ஒழுங்காக செய்தார்களா என்பதே மீதிக்கதை.
பெருசு இப்படி ஒரு கதைக்களம் அதுவும் தமிழில் யோசித்ததே பெரிய விஷயம், அதையும் முடிந்த அளவிற்கு முகம் சுளிக்காத படி ஒரு குடும்பத்தை சுற்றியே சொன்ன விதம் சூப்பர்.
அதோடு தீபா, முனிஷ்காந்த், எல்லாத்தையும் ஒட்டு கேட்கும் பக்கத்துவிட்டு கமலாக்கா என அனைத்து கதாபாத்திரங்களும் செம யாதர்த்தம்.
அப்பாவின் மானம் போகாமல் எப்படியாவது அடக்கம் செய்ய வேண்டும் என போராடும் குடும்பம், அதை சுற்றி பல குழப்பங்களை காமெடியாகவே காட்டிய விதம் இயக்குனர் இளங்கோ ராம் இயக்குனராகவே வெற்றி பெற்றுள்ளார்.
படத்தின் டெக்னிக்கல் டீம் அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர், இத்தனை ப்ளஸ் இருந்தாலும் கான்செப்ட் ஏடாகூடாம இருப்பதால் ஒரு சிலருக்கு கொஞ்சம் தர்மசங்கடமாக இருக்கலாம்
மொத்தத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர் பார்த்து கொண்டாடும் குடும்ப படமாக வந்துள்ளது இந்த பெருசு.