#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
அந்தாதூன் படத்தை பார்த்தவர்களுக்கு படத்தின் கதை மற்றும் கிளைமேக்ஸ் சஸ்பென்ஸ் என எல்லாமே தெரிந்து இருக்கும். ஆனால், படத்தை பார்க்காத தமிழ் ரசிகர்களுக்கு ஸ்பாய்லர் இல்லாத கதையாக அந்தகன் கதையை சொல்ல வேண்டும் என்றால், கண் தெரியாதவர் போல நடிக்கும் கிரிஷ் (பிரசாந்த்) நவரச நடிகர் கார்த்திக்கை அவரது இரண்டாவது மனைவியாக இருக்கும் சிம்ரன் கொலை செய்வதை பார்த்து விட அதற்கு மேல் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து பிரசாந்த் தப்பித்தாரா? இல்லையா? அவருடைய லட்சியத்தை அடைந்தாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை........பிரசாந்த்துக்கு இணையாக சிம்ரன், கார்த்தி, சமுத்திரகனி, பிரியா ஆனந்த், வனிதா விஜயகுமார், ஊர்வசி, கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு என நடிகர்களை படத்தில் கொண்டு வந்த இடத்திலேயே இயக்குநர் தியாகராஜன் பாதி வேலையை முடித்து விட்டார் என்று சொல்லலாம். ஏற்கனவே அந்தாதூன் கதை இருக்கிறது. இந்த நடிகர்களை வைத்து அதை சரியாக படம் பிடித்தாலே படம் நல்லா வந்து விடும் என்கிற நம்பிக்கையில் எடுத்த முயற்சி நல்லாவே வொர்க்கவுட் ஆகியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்..........கண் தெரியாத நபராக நடித்து அனுதாபத்தை பெற்று எப்படியாவது லண்டனுக்கு சென்று பியானோ கலைஞராக மாற வேண்டும் என நினைக்கும் பிரசாந்துக்கு ஒரு விபத்து மூலம் பிரியா ஆனந்த் தோழியாக மாறுகிறார். அவருடைய பாரில் பிரசாந்த் பியானோ வாசிக்க நவரச நாயகனாகவே படத்தில் வரும் நடிகர் கார்த்திக் தனது திருமண நாளை முன்னிட்டு மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க பிரசாந்தை இசையமைக்க வீட்டுக்கு வரச் சொல்கிறார். கார்த்திக்கின் வீட்டுக்குச் செல்லும் பிரசாந்துக்கு அங்கே சிம்ரன் மற்றும் போலீஸ் அதிகாரியான சமுத்திரகனியால் கார்த்திக் கொல்லப் பட்டுக் கிடப்பதை பார்த்து ஷாக் ஆகிறார்...........இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்க நினைத்து காவல் நிலையம் செல்ல அங்கே இன்ஸ்பெக்டராக சமுத்திரகனி இருக்க பிரசாந்துக்கு பிரச்சனை ஆரம்பிக்கிறது. பிரசாந்துக்கு கண் தெரியுமா? தெரியாதா? என சமுத்திரகனியும் சிம்ரனும் சோதனை செய்கின்றனர். பிரசாந்துக்கு உண்மையிலேயே கண் தெரியாமல் போகும் வேலையை சிம்ரன் பார்த்து விடுகிறார். கண் தெரியாமல் போகும் பிரசாந்த் கிட்னி திருடும் கும்பலாக வரும் கே.எஸ். ரவிக்குமார், ஊர்வசி மற்றும் யோகி பாபுவிடம் மாட்டிக் கொள்ள கடைசியில் அந்த கும்பலிடம் எப்படி தப்பித்தார். சிம்ரனை பழி வாங்கினாரா? லண்டனுக்கு சென்றாரா? அவருக்கு மீண்டும் பார்வை கிடைத்ததா? என ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளுடன் படம் பரபரப்பாக உள்ளது.