#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
புட்டபர்த்தியில் வாழ்ந்த ஆன்மிக குருவான சத்யசாய் பாபாவின் அற்புதங்களைச் சொல்லும் கதை.
அவரது இறுதிக் காலத்தில் தான் ஆத்ம பக்தர்களாக ஐவரை இந்தியாவெங்கிருந்தும் அழைக்கிறார். அந்தப் பணியை நிழல்கள் ரவி செய்து முடிக்க, அந்த அழைப்பின் பேரில் மும்பை தொழிலதிபர் ஜெகபதி பாபு,, பாலக்காட்டைச் சேர்ந்த ஒய்.ஜி.மகேந்திரா, சுகாசினி மணிரத்னம், சென்னையைச் சேர்ந்த அபிராமி வெங்கடாச்சலம் ஆகிய ஐவரும் புட்டபர்த்தி வருகிறார்கள்.
வந்து தங்கள் வாழ்க்கையில் சத்ய சாய் செய்த அற்புதங்களைப் பகிர்ந்து கொள்வதுதான் கதை.
அதன்படி மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையில் பாபா நடத்திய அற்புதங்களை ஜெகபதி பாபு சொல்ல, தான் 30 வயது திருமண நாளில் தான் மனைவி இறந்து போக, தான் காரணத்தை புட்டபர்த்தி சென்று கண்டுகொண்டதை ஒய் ஜி மகேந்திரா சொல்கிறார்.
தொடர்ந்து ஒவ்வொருவராக அப்படி பாபாவின் அற்புதங்களை அவர்கள் செல்வதைக் கேட்டு. …
வழக்கமாக படங்களில் வில்லனாக குற்றச் செயல்கள் புரியும் ஜெகபதி பாபு இதில் நல்லவராகவும், பக்தி மானாகவும் வந்து கொள்ளையர்களை நல்வழிப் படுத்துவதே அற்புதமான ஆச்சரியம்தான்.
ஒய். ஜி மகேந்திராவின் பாலக்காட்டு நடிப்பு பற்றி ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. அவரது மனைவி ஶ்ரீ ரஞ்சனியில் நெகிழ்ச்சியான நடிப்பும் நன்று.
தேவாவின் இசை பாடல்களிலும், பின்னணியிலும் பக்தி மணம் பரப்புகிறது.
அண்ணாமலை, பாட்ஷா படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவா இந்த பக்திப் படத்தை இயக்கியது என்பதும் இன்னொரு ஆச்சரியம்.
இப்படிப் பல ஆச்சரியங்களை உள்ளடக்கி சாதி சாயின் அற்புதங்களைச் சொல்லி முடிகிறது படம்.