கன்னி - திரைப்பட விமர்சனம் - 3.5/5

காட்டுப்பகுதிகளை தாண்டி மலை உச்சியில் உள்ள  தாத்தா வீட்டுக்கு செல்கிறார் செம்பியம்மா ( அஸ்வினி). அவரை தேடிக் கொண்டு ஒரு கூலிப்படை மலை உச்சிக்கு வருகிறது. செம்பியின் பாட்டி சித்த வைத்தியத்தில் மகத்துவம் பெற்றவர். தன்னிடம் வைத்திருக்கும் கூடையில் சில மந்திரங்களை சொல்லி உயிருக்கு  ஆபத்தான நிலையில் வரும் ஒருவரை பிழைக்க வைப்பதுடன் அவருக்கு இருந்த தீராத நோயையும் குணப்படுத் துகிறார். இதை கேள்விப்பட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் பாட்டியிடம் இருக்கும் அந்த மர்மக் கூடையை கைப்பற்ற கூலிப் படையை ஏவுகிறது. அந்த கூடையை பேத்தி சேம்பியிடம் கொடுத்துவிட்டு பாட்டி இறந்து போகிறார். அந்தக் கூடையை சேம்பியிடமிருந்து  கைப்பற்ற தான் கூலிப்படை அவரை தேடி வருகிறது. இதன் முடிவு என்ன ? சேம்பி கூலிப்படையிடமிருந்து உயிர் பிடித்தாரா என்பதற்கு கன்னி படம அமானுஷ்யத்துடன் கூடிய  ஆக்ரோஷ பதில் அளிக்கிறது.

இன்னமும் பல மலை கிராமங் களில் சித்த வைத்தியம், குலதெய்வ வழிபாடு, அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் போன்றவற்றை அவ்வப்போது கேள்விப்படுகிறோம். இந்த கருவை மையமாக வைத்து தான் கன்னி திரைப்படம் உருவாகி இருக்கிறது.

இந்த கதையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது படம் பார்த்தால் தான் அதை அனுபவபூர்வமாக உணர முடியும் என்பது மட்டும் நிஜம். படத்தில் நடித்திருக்கும் அத்தனை கதாபாத்திரங்களும் அந்த கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவர்களோ என்று என்ன தோன்றும் அளவுக்கு பாத்திரத் தோடு ஒன்றி பொய் நடித்திருக் கிறார்கள்

.கதாநாயகி அஸ்வினி பார்க்க அழகாக இருக்கிறார். இரண்டு இனிமையான பாடல்களை பாடி விட்டு காணாமல் போய்விடுவார் என்று வழக்கமான கதாநாயகிகள் போல் நினைத்தால் அது முற்றிலும் பொய்யாகிவிடும் ஏனென்றால் கன்னி படத்தின் ஆணிவேரே இவர் தான்.

எதார்த்தமான அவரது பேச்சும் பார்வையும் உடை அலங்காரமும்  நிஜ கிராமத்து பெண்ணாகவே அஸ்வினியை மாற்றி இருக்கும் நிலையில் கிளைமாக்சில் கூலிப்படையுடன் அவர் மோதும் காட்சிகள் எதிர்பார்க்காத ஷாக். பத்ரகாளி உடம்பிற்குள் புகுந்து விட்டாரோ என்று எண்ணும் அளவுக்கு  கூலிப்படையுடன் ஒற்றை ஆளாக மோதும் காட்சி பதற விடுகிறது.

கூலிப்படை ரவுடியாக வரும் ராம்பரதன் தமிழுக்கு புது வில்லனாக கிடைத்திருக்கிறார். இதன்பிறகு இவரை தமிழில் அதிகம் பார்க்கலாம்.

தீராத நோயை குணப்படுத்தும் சித்த வைத்திய பாட்டியாக வரும் மாதம்மா உண்மையிலேயே சித்த வைத்தியம் தெரிந்த பாட்டியோ என்று எண்ணும் அளவுக்கு பொறுமையான அவரது நடிப்பு பாத்திரத்தை வலுவாக்குகிறது.

பாட்டியின் மகனாக வரும் மணிமாறன் ஏற்கனவே பல படங்களில் தலை காட்டி இருந்தாலும் இப்படத்தில் அவருக்கு ஒரு அழுத்தமான பாத்திரம் கிடைத்திருக்கிறது அதை தவறவிடாமல் செய்து மனதில் இடம் பிடிக்கிறார் அவரது மனைவியாக வரும் தாரா சோடை போகவில்லை.

மேலும் ஜான்வி , சரிகா செல்வராஜ், பேபி தன்விகா நடித்திருக்கின்றனர்.

இயற்கை பின்னணியில் சித்த வைத்திய மகத்துவத்தை மையமாக வைத்து உருவாகும் ஒரு படத்தை தயாரிக்க முன்வந்த எம் செல்வராஜிக்கு எதிர்பார்க்காத பாராட்டும் ஏன் விருதுகள் கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதேபோல் இப்படத்தை இயக்கியி ருக்கும் மாயோன் சிவா தொரப்பாடி எந்த இடத்திலும் ஒரு கமர்சியல் காட்சி எட்டிப் பார்த்து விடக்கூடாது என்பதில் திடமாக இருந்து கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே இயக்கி  யார் இந்த புது இயக்குனர் என்று பேச வைத்திருப்பதுடன் ஒரு முக்கிய காட்சியும் நடித்திருக் கிறார்.

செபாஸ்டின் சதீஷ் இசை, ராஜ்குமார் பெரியசாமி ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கு பக்க பலம்

கன்னி – விருதுக்குரியவள்.

- பிரேம்

TwitterFacebookInstagramLinkLinkLink