#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
ஜீட்டா எனும் சிறுவன் அதீத மூளை ஆற்றல் கொண்டவனாக இருக்கிறான். ஆனால், அது ஏன்? அவன் யார்? அவனை வில்லன் ஏன் துரத்துகிறார் என எதையுமே சொல்லாமல் கதைக்குள் சிவா நம்மை அழைத்துச் செல்கிறார். கோவாவில் பவுண்ட்டி ஹண்டர் என சூர்யாவையும் அவருக்கும் அவரது எக்ஸ் லவ்வர் திஷா பதானிக்கும் இடையே சண்டை நடப்பது போன்ற காமெடிகள் அரங்கேறுகின்றன. ஆரம்பத்தில் வரும் அந்த காட்சிகள் படத்தில் ஒட்டாமல் இருப்பதே கங்குவாவை காட்டும் போது பெரிதாக ரசிகர்களுக்கு இம்பேக்ட் க்ரியேட் ஆகாமல் குறைந்து விட்டது..............
ஜீட்டா சிறுவனை காப்பாற்ற சூர்யா போராடுகிறார். அதே நேரத்தில் அவனுக்கும் சூர்யாவுக்கும் இடையேயான தொடர்பை 1070 எனும் காலக்கட்டத்தில் காட்டுகின்றனர். ரோமானிய அரசர் ஐந்தீவில் பெருமாச்சி எனும் கங்குவாவின் இடத்தை பிடிக்க முற்படுகிறார். அவருக்கு எட்டப்பனாக இருந்து நட்டி நட்ராஜ் உதவுகிறார். 100க்கணக்கான பெருமாச்சி வீரர்களை கப்பல் கட்டும் வேலைக்கு அழைத்துச் செல்கிறேன் என அழைத்துக் கொண்டு கொன்று குவிக்கிறார் நட்டி நட்ராஜ். அவர் செய்த துரோகம் கருணாஸ் மூலமாக கங்குவாவுக்கு தெரிய வர கட்டி வச்சு கட்டைகளை அடுக்கி எரித்து விடுகிறார்.
நட்டி நட்ராஜின் மகனையும் கொல்ல வேண்டும் என ஊர் மக்கள் சொல்ல, இவன் என் மகன் என குழந்தையை காப்பாற்றத் துடிக்கும் கங்குவாவுக்கு அந்த சிறுவனால் தனது ஊரையே இழக்கும் சூழல் உருவாகிறது. மீண்டும் தனது மண்ணை காப்பாற்ற அவர் என்ன செய்கிறார். அந்த சிறுவனை ஏன் அவரால் காப்பாற்ற முடியாமல் போகிறது. நிகழ்காலத்தில் மீண்டும் அந்த சிறுவனை பார்த்தவுடன் அவனை காப்பாற்ற போராடும் பிரான்சிஸ் கடைசியில் சிறுவனை காப்பாற்ற என்ன செய்கிறார். அந்த சிறுவனுக்குள் இருக்கும் சக்தி என்ன? என்கிற விதத்தில் படம் நிலவை மையமாகக் கொண்டு இரண்டு காலக்கட்டத்துக்கும் பயணிக்கிறது.