#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் உள்ள உள்ளூர், கிராமங்களுக்கு சேவை செய்யும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள மக்கள் மேடை என்னும் திட்டத்தின் அறிமுக விழா நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கலந்து கொண்டு பாரத் சேவா பாரத் மார்க்கெட் விற்பனை அங்காடிகளையும், மக்கள் மேடை திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் மேடையில் பேசிய லதா ரஜினிகாந்த், ”நூறாண்டுகளுக்கு முன்பு பாரத் சேவாவாக இத்திட்டம் தொடங்கியது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள 42 மாவட்டங்களிலும், 234 தொகுதிகளிலும் ’பாரத் சேவா’ உறுப்பினர்களும், மக்கள் மேடை உறுப்பினர்களும் கிராமப்புற உள்ளூர் நலன்களுக்காக தொண்டு செய்வார்கள்” என்றார்.
234 தொகுதிகளிலும், அரசியல் சார்ந்த பிரச்சாரங்கள் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த லதா ரஜினிகாந்த், ”அரசியல் என்ற வார்த்தையை பலர் தவறாக புரிந்து கொள்கிறார்கள். இந்த அமைப்பில் இருப்பவர்கள் உள்ளூர் சார்ந்த தலைவர்களாக இருப்பார்கள். தலைமை என்பது ஒரு பண்பு” என்று கூறினார்.
60 வயது கடந்தும் ஒரு பெண்ணாக சமூக சேவை செய்வதற்கு குடும்பத்தின் துணை பற்றிய கேள்விக்கு, ”ஒரு வீட்டில் கணவனின் துணை இல்லாமல் ஒரு பெண்ணால் எதையும் செய்ய முடியாது. சகோதரர்கள், குழந்தைகள், பேரக்குழந்தைகள் என அனைவரின் ஒத்துழைப்போடு தான் ஒரு பெண் சாதிக்க முடியும்” என்று தெரிவித்தார்.