#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
TURM புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், S. உமா மகேஸ்வரி வழங்கும் “தாவூத்”, வடசென்னை குற்ற உலகை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சதி–திரில்லர். அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன் கதை, திரைக்கதை, வசனம் அனைத்தையும் தானே எழுதி இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
லிங்கா (தம்பிதுரை) கதாநாயகனாக தீவிரமான, செறிவான நடிப்பால் தன் திறமையை நிரூபிக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் என்றும் சொல்லலாம். தன் கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவருகிறார்.
சாரா ஆச்சர் (டேனி) இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்; அவரின் நெகிழும் முகபாவனைகள், இயல்பான நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது.
திலீபன் (பாய்சன்), ராதாரவி (போலீஸ் கமிஷ்னர்), சாய் தீனா (மூர்த்தி), ஸாரா (மணி), வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக் உள்ளிட்டோரின் சேவையும் படத்துக்கு தகுந்த வலிமை சேர்க்கிறது.
மேலும், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன் ஆகியோரின் பங்கு கதைநேர்த்தியை மேம்படுத்துகிறது.

கதை – கடத்தல் உலகின் சிக்கல்கள்
தமிழகத்தின் பெரிய கடத்தல் மன்னனான தாவூத், தனது கைபவர் மூர்த்தி வழியாக 20 ஆண்டுகளாக நடத்தும் ரகசிய வியாபாரம் ஒரு தவறால் சிக்கலில் விழுகிறது. இதனால் மூர்த்தி–விசாகம் இடையேயான அதிகாரப் போர், போலீஸின் துரத்தல், நடுவே உயிர்பலி எடுக்கும் பழி–ஓட்டை—இவை அனைத்தும் சேர்ந்து ஒரு திகில் நிறைந்த திரைக்கதை உருவாகிறது.
இயக்குநர் பிரசாந்த் ராமன், கள்ளக்காதல்–ரவுடிசம்–வடசென்னை மண்ணின் கருப்புச் சூழலை சரியான அளவில்
கலந்து, படத்தை உணர்வு குலைக்கும் வகையில் வடித்துள்ளார்.
தொழில்நுட்ப அணியின் பங்களிப்பு
ஒளிப்பதிவு – சரத் வளையாபதி & பிரேண்டன் சுஷாந்த்
வடசென்னையின் நெருக்கமான தெருக்கள் முதல் சண்டைக் காட்சிகள் வரை அனைத்தையும் உணர்வோடு பதிவு செய்துள்ளனர்.
இசை – ராக்கேஷ் அம்பிகாபதி
பின்புல இசை காட்சியின் தீவிரத்தையும் வலிமையையும் உயர்த்துகிறது.
‘என்னடா வாழ்க்கை’ பாடல் G.V. பிரகாஷ் குமாரின் குரலில் நேரடியாக மனதில் பதிகிறது.
எடிட்டிங் – R.K. ஸ்ரீநாத்
வேகமும், காட்சித் தொடர்ச்சியும் கையில் தக்கவைத்துள்ளார்.
மொத்தத்தில் தாவூத்” ஒரு செறிவான, சீரான, தீவிரமான கிரைம்–டிராமா என்று சொல்லலாம்.