#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
Dawn Pictures மற்றும் Wunderbar Films தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், இயக்கி நடித்து வரும் “இட்லி கடை” படம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில்…
Wunderbar Films சார்பில் ஷ்ரேயாஸ் பேசியதாவது:
தனுஷ் சார் ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். நானும் ஆகாஷும் சேர்ந்து படம் செய்யலாம் எனப் பேசிக்கொண்டு இருந்தோம். தனுஷ் சார் “இட்லி கடை” கதை செய்யலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆகாஷிடம் சொன்ன போதே, “சார் இயக்குகிறார் என்றால் உடனே ஷூட் போகலாம்” என்றார். முழுமையாக எங்களுக்கான சுதந்திரம் தந்தார். தனுஷ் சாருக்கு இது மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இப்படத்தில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பிரசன்னா, ஜாக்கி உட்பட அனைவருக்கும் நன்றி. இன்றைய விழா நாயகன் ஜீவி பிரகாஷ் குமார். அவரை 2008 முதல் எனக்குத் தெரியும். அவர் தேசிய விருது வரை எல்லாமே சாதித்துவிட்டார், ஆனால் இன்னும் அப்படியே இருக்கிறார். அவர் தந்த அற்புதமான பின்னணி இசைக்கு நன்றி. இப்படத்தின் ஹீரோ டைரக்டர் தனுஷ் சார், என்னுடைய வாழ்க்கையில் என் ஹீரோ டைரக்டர் அவர்தான். அவரைப்பற்றி என்ன சொன்னாலும் குறைவாகத்தான் இருக்கும். சூப்பர் ஸ்டார் சொன்ன மாதிரி, “நல்லவனா இரு… ரொம்ப நல்லவனா இருக்காதே!” என்பதை அவரிடம் சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் ஹாலிவுட் வரை எவ்வளவோ நடித்து விட்டீர்கள், ஆனால் நடிப்பு மட்டும் போதாது, அதைத்தாண்டி சில விஷயங்கள் வேண்டும். “ஒருத்தனை 10 பேர் எதிர்த்தால், அவன் தலைவன்!” நீங்கள் தலைவன். உங்களை வைத்து வளர்ந்தவர்கள், உங்களால் வாழ்ந்தவர்கள் உங்களைப் பற்றிப் பேசுவது அவர்களுக்குத்தான் இழுக்கு. இந்த “இட்லி கடை” ரசிகர்களுக்கும், அனைத்து குடும்பங்களுக்கும் பிடித்த படமாக இருக்கும்.
கலை இயக்குநர் ஜாக்கி பேசியதாவது:
என் இயக்குநருடன் இது மூன்றாவது படம். இட்லி கடை ஆரம்பித்த போது, “செட் ஒன்றை போடலாம்” என்று அவர் சொன்னார். அத்தனை டீட்டெயிலாக கூறினார். அவர் கூறியதை மனதில் நன்கு வைத்து பார்த்து தான் செட்டுக்கு வருகிறார். அதனால் அவருடன் வேலை செய்யும் போது மிக எளிதாக இருக்கும். அவருடன் மீண்டும் மீண்டும் வேலை செய்ய ஆசைப்படுகிறேன், அனைவருக்கும் நன்றி.

Home
சினிமா செய்திகள்
இட்லி கடை இட்லி சாப்பிட்ட இன்பம் இப்போது இல்லை – தனுஷ் உருக்கம்
சினிமா செய்திகள்தமிழ் செய்திகள்
இட்லி கடை இட்லி சாப்பிட்ட இன்பம் இப்போது இல்லை – தனுஷ் உருக்கம்
by Jai ChandranSeptember 16, 202568

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை” பட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது
Dawn Pictures மற்றும் Wunderbar Films தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், இயக்கி நடித்து வரும் “இட்லி கடை” படம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில்…
Wunderbar Films சார்பில் ஷ்ரேயாஸ் பேசியதாவது:
தனுஷ் சார் ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். நானும் ஆகாஷும் சேர்ந்து படம் செய்யலாம் எனப் பேசிக்கொண்டு இருந்தோம். தனுஷ் சார் “இட்லி கடை” கதை செய்யலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆகாஷிடம் சொன்ன போதே, “சார் இயக்குகிறார் என்றால் உடனே ஷூட் போகலாம்” என்றார். முழுமையாக எங்களுக்கான சுதந்திரம் தந்தார். தனுஷ் சாருக்கு இது மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இப்படத்தில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பிரசன்னா, ஜாக்கி உட்பட அனைவருக்கும் நன்றி. இன்றைய விழா நாயகன் ஜீவி பிரகாஷ் குமார். அவரை 2008 முதல் எனக்குத் தெரியும். அவர் தேசிய விருது வரை எல்லாமே சாதித்துவிட்டார், ஆனால் இன்னும் அப்படியே இருக்கிறார். அவர் தந்த அற்புதமான பின்னணி இசைக்கு நன்றி. இப்படத்தின் ஹீரோ டைரக்டர் தனுஷ் சார், என்னுடைய வாழ்க்கையில் என் ஹீரோ டைரக்டர் அவர்தான். அவரைப்பற்றி என்ன சொன்னாலும் குறைவாகத்தான் இருக்கும். சூப்பர் ஸ்டார் சொன்ன மாதிரி, “நல்லவனா இரு… ரொம்ப நல்லவனா இருக்காதே!” என்பதை அவரிடம் சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் ஹாலிவுட் வரை எவ்வளவோ நடித்து விட்டீர்கள், ஆனால் நடிப்பு மட்டும் போதாது, அதைத்தாண்டி சில விஷயங்கள் வேண்டும். “ஒருத்தனை 10 பேர் எதிர்த்தால், அவன் தலைவன்!” நீங்கள் தலைவன். உங்களை வைத்து வளர்ந்தவர்கள், உங்களால் வாழ்ந்தவர்கள் உங்களைப் பற்றிப் பேசுவது அவர்களுக்குத்தான் இழுக்கு. இந்த “இட்லி கடை” ரசிகர்களுக்கும், அனைத்து குடும்பங்களுக்கும் பிடித்த படமாக இருக்கும்.
கலை இயக்குநர் ஜாக்கி பேசியதாவது:
என் இயக்குநருடன் இது மூன்றாவது படம். இட்லி கடை ஆரம்பித்த போது, “செட் ஒன்றை போடலாம்” என்று அவர் சொன்னார். அத்தனை டீட்டெயிலாக கூறினார். அவர் கூறியதை மனதில் நன்கு வைத்து பார்த்து தான் செட்டுக்கு வருகிறார். அதனால் அவருடன் வேலை செய்யும் போது மிக எளிதாக இருக்கும். அவருடன் மீண்டும் மீண்டும் வேலை செய்ய ஆசைப்படுகிறேன், அனைவருக்கும் நன்றி.

ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் பேசியதாவது:
தனுஷ் பிரதர் இந்த படத்தில் மிக அதிகமான உழைப்பை அளித்துள்ளார். அவருடன் நிறைய முறை வேலை பார்க்க ஆசைப்பட்டேன், இது தான் அந்த வாய்ப்பு கிடைத்த படம். எனக்காக வெயிட் செய்து முழு ஆதரவும் அளித்ததற்கு நன்றி. படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும், நன்றி.
ஒளிப்பதிவாளர் கிரண் பேசியதாவது:
மயக்கம் என்ன படத்திலிருந்து அவருடன் வேலை செய்ய ஆசை பட்டேன், அது இந்த படத்தில் நனவானது. சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் சார்களுடன் வேலை செய்ததில் மகிழ்ச்சி. தனுஷ் சார் உங்களுடன் வேலை செய்ய நான் நிறைய ஆசைப்பட்டேன். எனக்கு இந்த வாய்ப்பு வழங்கியதற்கு மகிழ்ச்சி.
எடிட்டர் பிரசன்னா GK பேசியதாவது:
நான் பல படங்களில் வேலை செய்துள்ளேன், ஆனால் எடிட்டிங் டேபிளில் உட்காராமல் முழுமையாக அங்கு பணியாற்றிய படம் இதுதான். தனுஷ் சார் ஷூட்டிங் நடக்கும் போது அங்கே கூப்பிட்டு எடிட் செய்ய சொன்னார். அங்கேயே மொத்த வேலை முடிந்தது. படம் மிகச்சிறப்பாக உருவாகியுள்ளது. தனுஷ் சாருடன் வேலை செய்தது அற்புதமான அனுபவம். தொடர்ந்து எனக்கு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி.
உடை வடிவமைப்பாளர் காவ்யா ஸ்ரீராம் பேசியதாவது:
இந்த படத்தில் வாய்ப்பு வழங்கியதற்கு மகிழ்ச்சி. தனுஷ் சாருடன் வேலை செய்தது மிகப்பெரிய அனுபவம், அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அனைத்து நடிகர்களுடனும் வேலை செய்யும் சந்தோஷம் கிடைத்தது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன், நன்றி.
நடிகை ஷாலினி பாண்டே பேசியதாவது:
எல்லோருக்கும் நன்றி. சென்னைக்கு வந்து பல காலம் ஆகிவிட்டது. மீண்டும் வீட்டுக்கு வந்தது போல் உணர்ச்சி. இப்பட வாய்ப்பு வழங்கிய ஷ்ரேயாஸ் அவருக்கும், தனுஷ் சாருக்கும் மனமார்ந்த நன்றி. அவருடன் நடித்தது என் கனவு நனவாகியது. அருண் விஜய் சார், சத்யராஜ் சார் உட்பட அனைவருடனும் நடித்ததில் மகிழ்ச்சி. நித்யா மேனனுடன் நடித்திராத போதும், அவரது நடிப்பு எனக்கு மிக பிடிக்கும். நான் நடித்த முதல் தமிழ் படம் ஜீவி உடன் தான், அவருடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.
இயக்குநர், நடிகர் R. பார்த்திபன் பேசியதாவது:
என் இனிய நண்பர் இயக்குநர்-நடிகர் தனுஷ் அவருக்கும், இந்த அரங்கத்தை கோலாகலமாக வைத்திருக்கும் தனுஷ் ரசிகர்களுக்கும் வணக்கம். ஒரு ஊரில் ஒரு ராஜா. அவருக்கு இரண்டு இளவரசர்கள்—ஒருவர் ஆயிரத்தில் ஒருவன், மற்றவர் பத்தாயிரத்தில் ஒருவன். எந்த வாய்ப்பும் கிடைத்தால் அதில் வித்தகனாக இருப்பவர் இந்த இளையவர் தனுஷ் தான். யாத்ரா, லிங்கா படங்களில் இருவருக்கும் எனக்கு பொறாமை. டப்பிங்கில் தனுஷ் சாருடன் பேசும்போது, அவர் வைத்திருந்த போனை பார்த்து “போன் நம்பர் தர முடியுமா?” என்றேன். அவர் சொன்னார், “இது என் பசங்களிடம் மட்டுமே பேசுவதற்கானது.”
படங்களைப் பற்றி பேச வேறு போன் இருக்கும் போலே! தமிழ் திரையுலகில் கமல் சார் திறமை நிறைந்தவர்; அதற்கு இணையான திறமை கொண்டவர் தனுஷ். அவருக்கு என் வாழ்த்துக்கள். ஜீவி திறமைக்கான படம் இது அல்ல; 10 வருடங்களுக்கு முன்பே ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தை செய்துவிட்டார். அவரது திறமை இன்னும் 50 வருடங்கள் கொண்டாடப்படும். பவர் பாண்டி பார்த்து ராஜ்கிரண் சார் மீது பொறாமை வந்தது! நடிப்பு ராட்சசி நித்யா மேனன் ஏற்கனவே தனுஷ் சாருடன் நடித்தார், தேசிய விருது பெற்றவர். இதிலும் வெற்றி பெறுவார். அருண் விஜய் கடுமையாக உழைத்து இந்த நிலை அடைந்தார்; பிரமாதமான ரோல் செய்துள்ளார். இத்தனை நட்சத்திரங்களுடன் நானும் ஒரு சிறிய ரோல் செய்துள்ளேன். ஷ்ரேயாஸ் தான் என்னை அழைத்து நடிக்க வைத்தவர்; நடிகர்களை பொறுப்புடன் பார்த்துக்கொள்கிறார். அவருக்கும், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கும் நன்றி. உங்களைப் போன்ற ரசிகர்களின் ஆதரவோடு இந்த படத்தை பார்த்திட ஆவலோடு காத்திருக்கிறேன், நன்றி.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசியதாவது:
நான் தனுஷ் சாரின் தீவிர ரசிகன். என்னை அழைத்ததற்கு நன்றி. கட்சி சேர பாடலை உருவாக்கும்போது, அவரிடம் கருத்துக்களை கேட்க சென்றபோது, பொறுமையாக பேசினார், நிறைய ஆலோசனைகள் தந்தார். அவருக்கு நான் தீவிர ரசிகன்; அவருடன் வேலை செய்ய ஆவலாக உள்ளேன். இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், நன்றி.
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ் பேசியதாவது…
எனக்காகக் காத்திருக்கின்ற ரசிகர்களுக்கு நன்றி. ராஜ்கிரண் சார் எங்கள் குடும்பமே உங்களுக்குக் கடமைப்பட்டுள்ளது. என் அப்பா படத்தின் முதல் ஹீரோவும் நீங்கள் தான். என் முதல் பட ஹீரோவும் நீங்கள் தான், நன்றி. சத்யராஜ் சார், உங்களோடு நடிக்கவேண்டும் என ரொம்ப நாட்களாக ஆசை. நீங்கள் பெரிய நடிகர். உங்களுக்கு எப்படி நடிக்கச் சொல்ல வேண்டும் என தயக்கம் இருந்தது. ஆனால், அதை உடைத்து, எனக்கு ஆதரவாக இருந்து நடித்ததற்கு நன்றி. அருண் விஜய் சார், நீங்கள் கதை கேட்ட உடனே நடிக்க ஒப்புக்கொண்டீர்கள், நன்றி. எனக்காக மண், புழுதி என உருண்டு புரண்டு நடித்தார். மிகப்பெரிய உழைப்பாளி. பார்த்திபன் சார், நீங்கள் நினைத்தது போல இது சின்ன ரோல் இல்லை. படம் பார்க்கும் போது புரியும்.
ஷாலினி சிறப்பாக நடித்ததற்கு நன்றி. நித்யா மேனன், அவர் நடிப்பதில் பெரிதாக ஈடுபாடு இல்லை என்று சொல்வார், ஆனால் சினிமாவுக்கு அவரை நிறையப் பிடித்துள்ளது. அவர் இன்னும் நிறைய நடிக்க வேண்டும். இப்படத்தில் நடித்த சமுத்திரகனி சார், இளவரசு சார், எல்லோரும் என் குடும்பம் மாதிரி. அனைவருக்கும் நன்றி. ஆகாஷ் பாஸ்கரன், நானே உங்களை சில முறை தான் பார்த்துள்ளேன். என்னை முழுதாக நம்பியதற்கு நன்றி. ஜீவி மாதிரி ஒரு நண்பன் கிடைத்தது ஆசீர்வாதம். அவர் இப்படத்தில் ரீல்சுக்கு மியூசிக் போட மாட்டேன், கதைக்கு உண்மையான மண் சார்ந்த இசை தான் செய்வேன் என முடிவு செய்து இசையமைத்துள்ளார். நன்றி ஜீவி. கிரண், இந்த படத்திற்கு பெரிய சப்போர்ட் நன்றி. பிரசன்னா, என்னுடைய எல்லா படத்திற்கும் அவர் தான் எடிட்டர். என்னுடன் தொடர்ந்து கூட இருப்பது அவர் தான். நன்றி. ஜாக்கி, உங்கள் திறமை தான் உங்கள் எதிரி. நீங்கள் போட்ட செட், செட் மாதிரியே தெரிவதில்லை. அதனால் உங்களைப்பற்றி யாருக்கும் தெரியவில்லை. இந்த படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. உடை வடிவமைப்பாளர் காவ்யா உங்கள் டீமிற்கும் நன்றி. ஷ்ரேயாஸ்-ன் கடும் உழைப்புக்கு நன்றி. அவரை எல்லோரும் பாராட்டுவதைக் கேட்கப் பெருமையாக உள்ளது. நன்றி.
இட்லி கடை என்ன டைட்டில் இது எனக் கேட்டார்கள். பொதுவாக படத்திற்கு ஹீரோ பெயர் தான் வைப்பார்கள், இதில் இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில். ஒரு முறை தனியாக இருக்கும் போது இளையராஜா சார் பாடல் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த பாடல் என் கிராமத்திற்கும், என் பாட்டி வீட்டிற்கும் கூட்டிப்போனது. அங்கு ஒரு பஸ் ஸ்டாண்ட் இருக்கும், ஒரே ஒரு கடை இட்லி கடை இருக்கும். அதிலிருந்து எனக்கு தினமும் இட்லி சாப்பிட வேண்டும். ஆனால் காசு இருக்காது. அப்போது உழைத்து 2 1/2 ரூபாயில் சாப்பிட்ட இட்லியில் கிடைத்த சந்தோசம், நிம்மதி இப்போது இல்லை. அந்த இட்லி கடையை வைத்தே ஏன் ஒரு படம் பண்ணக்கூடாது எனத் தோன்றியது. அந்த கிராமத்தையும், சென்னையில் நான் பார்த்த விசயங்களையும் வைத்து உருவானது தான் “இட்லி கடை”. நாம் நம் வாழ்க்கையில் நம் தந்தை, பாட்டன், முப்பாட்டன் கதைகளை மறந்து போய்விடக்கூடாது. நாம் வந்த வழிகளையும் நம் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும். வந்த வழியையும் வாழ்ந்த வாழ்க்கையையும் என்றைக்கும் மறக்கக் கூடாது. இப்படத்தில் என் பாட்டி ஒரு சீனில் நடித்திருக்கிறார். இது எனக்கு மிகவும் பர்ஸனல் படம். என்னை ரசிகர்களாகிய நீங்கள் உங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டீர்கள், சமீபமாக உங்களை சந்தித்து வருகிறேன். நிறைய பேர் டாக்டராக, இன்ஜினியராக, டீச்சராக இருப்பதாகச் சொன்னீர்கள். அது தான் எனக்கு மிகப்பெரிய கர்வமும் சந்தோஷமும். “இட்லி கடை” படம் உங்களை மகிழ்விக்கும். நன்றி.
இப்படத்தில் தனுஷ் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, நித்யா மேனன், சத்யராஜ், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், சமுத்திரகனி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நட்சத்திர நடிகர் அருண் விஜய் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
முன்னணி நடிகர்களின் நடிப்பில், பெரிய பட்ஜெட்டில், பல புதிய திரைப்படங்களைத் தயாரித்து வரும் Dawn Pictures நிறுவனத்துடன் Wunderbar Films இணைந்து, இப்படத்தினை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. Red Giant Movies நிறுவனம் சார்பாக இன்பன் உதயநிதி இப்படத்தினை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.
இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்ய, GK பிரசன்னா எடிட்டிங் செய்கிறார். நடனத்தைப் பாபா பாஸ்கர் அமைத்துள்ளார். உடை வடிவமைப்பை காவ்யா ஶ்ரீராம் செய்துள்ளார்.