#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
காதலை கேட்டோ பார்த்தோ உணர முடியாது! அதை அனுபவித்தே உணர முடியும் என்பதை காதலோடு பேச முயற்சித்துள்ளார் அசோக்குமார் கலைவாணி
தன் தாத்தா YG மகேந்திரனால் மிகவும் கண்டிப்புடன் வளர்க்கப்படுகிறார் ஹீரோ சுதர்சன் கோவிந்த். ஒருபெரிய App டெவலப்பராக முயற்சிக்கும் ஹீரோ காதல் சார்ந்து App ரெடி செய்கிறார். அது வொர்க் ஆகவில்லை. காரணம் அவருக்கு காதல் அனுபவம் இல்லை. இன்னொருபுறம் ஹீரோயின் அர்ச்சனா ரவி இயக்குநராக முயற்சிக்கிறார். அவருக்கு “காதல் கதை கொண்டு வாருங்கள் படம் பண்ணலாம்” என்ற ஆபர் வருகிறது. சோ..வேறுவேறு துருவங்களான ஹீரோவும் ஹீரோயினியும் காதலில் இணைய அந்த தொழில் சார்ந்த காதல் என்ன முடிவை எட்டியது என்பது மீதிக்கதை
ஹீரோ திரையில் பெரிய பரிச்சயம் உள்ளவராக தெரியவில்லை. கூடுமான வரை நன்றாக நடிக்க முயற்சித்துள்ளார். அர்ச்சனா ரவி எமோஷ்னல் காட்சிகளில் நல்ல ஸ்கோர் செய்கிறார். YG மகேந்திரன் தனது அனுபவத்தை நடிப்பில் கொண்டுவந்துள்ளார். ஏனைய கேரக்டர்கள் எல்லோரும் ஒகே ரகம்
ஒளிப்பதிவாளர் வண்ணமயமான ஷாட்களை கம்போஸ் செய்துள்ளார். அஷ்வின் ஹேமந்த் இசையில் பாடல்கள் ரிப்பீட்மோட் இல்லாவிட்டாலும் மோசமில்லை. பின்னணி இசை ஓரளவு ஒகே.