#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
மறைந்த சுரேஷ் சங்கைய்யா இயக்கத்தில் யோகி பாபு லவ்லின் சந்திரசேகர், ஜார்ஜ் மரியான், ரேச்சல் ரெபேக்கா ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் கெணத்த காணோம். இசை நிவாஸ் கே பிரசன்னா.
கதை
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரில் உள்ள கோவிலில் யோகிபாபு பூசாரியாக இருக்கிறார். அந்த ஊரில் தண்ணீர் பிரச்சினையால் மக்கள் அவதிப்படுகிறார்கள். தண்ணீர் பிரச்சினையால் லவ்லின் சந்திரசேகரை அவரது அப்பா யோகிபாபுவுக்கு நர மறுக்கிறார். இநத சூழநிலையில் ஊர் தலைவர் மக்களுடன் சென்று கலெக்டரிடம் தண்ணீர் வேண்டி மனு கொடுக்கிறார். உடனடியாக நடவடிக்கை இல்லாததால் தண்ணீர் பார்க்கும் ஒருவரை அழைத்து வந்து பார்க்கிறார்கள். யோகிபாபு இடததில் தண்ணீர் வருவதாக கண்டுபிடித்து கிணறு தோண்டுகின்றனர். அந்த கிணறில் டைனோசர் எலும்புக்கூடு கிடைக்கிறது. இதனால் அரசாங்கத்தற்கு தெரிந்து அவர்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவருகின்றனர். இந்ந சூழ்நிலையில் யோகிபாபு தந்தை தியாகி கிணறு வெட்டியதால் கோவில் இடிந்து வீடும் இடிந்து அவர் இறக்கிறார். அவரை முன்வழியாகத்தான் கொண்டு செல்வேன் என்று அடம்பிடிக்க அது நடந்ததா? அந்த ஊருக்கு தண்ணீர் கிடைத்ததா? என்பதை உணர்சசி பூர்வமாக கலகலப்பாக சொல்லியிருப்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக யோகிபாபு சிறப்பாக நடித்துள்ளார். யோகிபாபு காதலியாக லவ்லின் சந்திரசேகர் இயல்பாக நடித்துள்ளார். ரேச்சல் ரேபேக்கா, ராமகிருஷ்ணன், ஜார்ஜ் மரியான் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர கதாபாத்திரம் ஊணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா சையில் படல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
ஒளிப்பதிவும் அருமை.