#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
இந்திய சினிமாவில் தற்போது எதிர்பார்ப்பு மிகுந்த ஆக்ஷன் திரைப்படமாக வார் 2 உருவாகியுள்ளது. இந்திய சினிமாவில் உள்ள இரண்டு மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் நடிகர்களான ஹ்ரித்திக் ரோஷனும், ஜூனியர் என்டிஆர் என இருவரிடையே உள்ள நடன போட்டியை பெரிய திரையில் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என இன்று யஷ் ராஜ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த பாடலுக்கு 'ஜனாபே ஆலி' என பெயரிட்டுள்ளனர் . இது இந்திய சினிமாவில் இதுவரை யாரும் காணாத அளவிற்கு பிரமாண்டமான, புத்துணர்ச்சியான நடனக் காட்சியாக உருவாகியுள்ளது.
யஷ் ராஜ் நிறுவனம் ஜனாபே ஆலி பாடலின் சிறு க்ளிம்ஸ் வீடியோவை நாளை காலையில் வெளியிடுகின்றனர்.இதன் மூலம், முழு பாடலின் பிரமாண்டத்தை உணர்வதற்கு ஒரு ஆர்வத்தை தூண்டுகின்றனர்.
ஜனாபே ஆலி முழுப் பாடலை திட்டமிட்டு பெரிய திரையில் அனுபவிக்க உருவாக்கப்பட்டது. ரசிகர்கள் அந்த பாடலை காண வேண்டுமெனில், இந்த சுதந்திர தின வார இறுதியில் , திரையரங்குகளுக்கு வர வேண்டும்.
யஷ் ராஜ் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்த பதிவின் படி" ' நடன மேடையிலும் வார் இருக்கும்' .நாளை, ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆர் என இருவரிடையேயான நடன மோதலின் காட்சியை ஒரு சிறு க்ளிம்ஸ் வீடியோவில் காணுங்கள். ஆனால், முழுப்பாடலைப் பார்க்க முடியுமென்றால் அது பெரிய திரையில் மட்டும் தான். "
வார் 2 திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ந் தேதியன்று உலகமெங்கும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.