#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் தயாராகி எதிர்வரும் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தின் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நானி, கயாடு லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் தோன்றி, ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
சி. ஹெச். சாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரித்திருக்கிறார். ஐவிஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் இஷான் சக்சேனா படத்தின் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது..
எதிர்வரும் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரத்யேக நிகழ்வு நடைபெற்றது..
இதில் படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா- படத்தின் நாயகன் நடிகர் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – திங்க் ஸ்டுடியோஸ் ஸ்வரூப் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்..
*இந்நிகழ்வில் ‘திங்க் ஸ்டுடியோஸ்’ ஸ்வரூப் ரெட்டி பேசுகையில்,*
” நவராத்திரி திருவிழாவின் போது நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வெளியாகிறது. நானி நடித்திருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. நாங்கள் நானி படத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம். இந்தப் படத்திற்கும் ரசிகர்களின் பேராதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்..
*இயக்குநர் ஸ்ரீகாந்த் வோடேலா பேசுகையில்,*
” எனக்கு தமிழ் தெரியாது. அடுத்த படத்தில் தமிழை கற்றுக்கொண்டு பேசுகிறேன். இந்த திரைப்படம் தாயை பற்றியும்… புரட்சியைப் பற்றியும்… பேசும் திரைப்படம். இந்த வகையிலான திரைப்படம் ரசிகர்களுடன் அதிகமாக எளிதில் தொடர்பு கொள்ளும் என நம்புகிறோம்” என்றார்..
*நடிகர் நானி பேசுகையில்,*
” தி பாரடைஸ் திரைப்படம் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நான் நல்ல நடிகரா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு ஒரு விசயம் மட்டும் தெரியும். நான் உங்களைப் போன்ற ஒரு நல்லதொரு பார்வையாளன்.
ஒரு பார்வையாளராக மாஸான திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அது போன்றதொரு திரைப்படங்கள் வெளியாவது குறைவு. அப்படி ஒரு பிரம்மாண்டமான மாஸான திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என ஆவலுடன் காத்திருக்கிறேன். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் திரைப்படம் தான் ‘தி பாரடைஸ்’.
ஒவ்வொரு ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இது போன்றதொரு மாஸான திரைப்படம் அவசியம் தேவை. இந்தப் படம் அப்படிப்பட்டதொரு திரைப்படம். இதை நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன். இதனை நீங்கள் 24 ஆம் தேதி திரையரங்குகளுக்கு வந்து, இந்த படத்தை பார்த்த பிறகு சொல்வீர்கள்.
இந்த படத்தில் அழுத்தமான எமோஷன்களை பற்றி பேசி இருக்கிறோம். அதே தருணத்தில் திரையரங்குகளில் பார்த்து ரசிக்கும் அற்புதமான அனுபவங்களையும் வழங்கி இருக்கிறோம்.