#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
படத்தின் நாயகன் டிராவிட் செல்வம்,ஒரு நாயகி அஞ்சலி நாயர்,நடிகர் தீபக் ஆகிய மூவரும் கல்லூரி மாணவர்கள்.அவர்கள் கல்லூரியில் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.அதனால் பிளாக் ஹோல் எனப்படும் ஓர் அறிவியல் ஆய்வுக்கூடத்தில் தங்குகின்றனர். அங்கிருந்து வெளியே செல்ல முடியாத நிலை.அதேசமயம்,ஆளில்லா வான்வழி வாகனம் (ட்ரோன்) மூலம் வெளியுலகத்தைப் பார்க்கிறார்கள்.அதன்விளைவாக நாயகி சித்தி இத்னானி மீது காதல் கொள்கிறார் டிராவிட்செல்வம்.இந்தக் காதலை நாயகியின் பாட்டி தேவதர்ஷினி எதிர்க்கிறார்.அவர் சூனியக்காரி.அதனால்,நாயகன் உள்ளிட்ட நண்பர்களை ஒரு மாயக்கோட்டைக்குள் அடைத்து வைக்கிறார்.
இதற்கிடையே நகரத்தில் மர்மக்கொலைகள் நடக்கின்றன.அதை ஒரு சைக்கோ செய்வதாகச் சொல்லப்படுகிறது.அதுகுறித்து துப்பறிகிறது காவல்துறை.சூனியக் கிழவியிடம் சிக்கிய நண்பர்கள், சைக்கோ கொலைகாரன் ஆகியோரின் கதி என்ன? என்கிற கேள்விக்கான விடைதாம் படம்.
நாயகனாக நடித்திருக்கும் டிராவிட்செல்வம்,ஆட்டம் பாட்டம் என கதாபாத்திரத்திற்குத் தேவையான அனைத்தையும் நன்றாகச் செய்திருக்கிறார்.இந்தக்கதையை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து சொல்லவேண்டும் என்கிற இயக்குநரின் எண்ணத்தைச் செயலாக்க டிராவிட்செல்வம் பொருத்தமாக இருக்கிறார்.
தேவதையாக நடித்திருக்கும் சித்தி இத்னானி,தேவதையாகவே தோன்றுகிறார்.நடிப்பில் அரக்கியாக இருக்கிறார்.
அஞ்சலிநாயர்,தீபக் உள்ளிட்டோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.தேவதர்சினி சூனியக்கிழவியாகவே மாறிவிட்டார்.காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் சினிமாவாலா சதீஷ்,அந்த வேடத்துக்குத் தக்க நடித்து வரவேற்புப் பெறுகிறார்.குரேஷி சிரிக்க வைக்கிறார்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் ஜெயந்த் சேதுமாதவனுக்கு குறுகிய களம்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.அதற்குள்ளாகவே நிறைவான காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்.
ஹரி எஸ்.ஆர்.இசையமைத்திருக்கிறார்.இந்தக்கதைக் களத்துக்கு பின்னணி இசை முக்கியம் என உணர்ந்து உழைத்திருக்கிறார்.
படத்தொகுப்பு செய்திருக்கும் சதீஷ் சூர்யா,படத்தை வேகமாக்க முயன்றிருக்கிறார்.
இந்தக்கதைக்குப் பலம் சேர்க்க காட்சிகளில் நிறைய புதுவிதமான பொருட்களை வடிவமைத்து இரசிக்க வைத்திருக்கிறார் கலை இயக்குநர் ஆர்.கிஷோர்.