#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
புஷ்பாவின் வரலாறு காணாத அளவிலான சந்தனக் கடத்தல் எப்படி காவல்துறையைக் கடந்து சாத்தியமாகிறது என்பதில் புதிய உத்திகள் எதுவும் இல்லாதது சிறிய ஏமாற்றம். அது மிகப்பெரிய திட்டம் என்பது பின்னணி இசையில் மட்டுமே தெரிகிறது. அதிலும் ஹீரோவுக்கு மற்ற கதாப்பாத்திரங்கள் ஏற்றும் பில்டப்புகள், நினைத்த அளவுக்கு பெரிதாக உதவாதது அடுத்த ஏமாற்றம்!! “எல்லாரும் சூனாப் பானா ஆயிர முடியுமாடா” என கேஜிஎப் ரசிகர்கள் சிலிர்த்துக்கொள்கிறார்கள்.
முக்கியமாக அல்லு அர்ஜூன் - ராஷ்மிகா இடையேயான காதல்காட்சிகளில் சில இடங்களே ரசிக்கும்படியாக உள்ளன. ஃபகத் பாசில் தனது கதாப்பாத்திரத்திற்கு ஆழம் கொடுக்கும் வகையில் நன்றாக நடித்துள்ளார். இடைவேளைக் காட்சியில் அவரது வசனங்களுக்கு சிரிப்பலைகள் அரங்கை நிறைக்கின்றன. இருந்தாலும் அவரது கதாப்பாத்திரத்தை இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என அனைவருக்கும் தோன்றியிருக்கும். சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் கதைக்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கின்றனர். சுனிலுக்கு முதல் பாகத்தைவிட இதில் நேரமும் முக்கியத்துவமும் குறைவுபோல் தெரிந்தாலும் அவரது சில காட்சிகளும் அழுத்தமாக உள்ளன. .........
ஆனால் இரண்டாம் பாதியில் கதை சட்டென முடிந்துவிடுகிறது. இடைவேளையில் போடப்பட்ட கேள்விக்கு கொஞ்ச நேரத்திலேயே விடை கிடைத்துவிட, மீத நேரத்தை என்ன செய்வதெனத் தெரியாமல் “போடு ஒரு பாச ஊசிய” எனக் குடும்பக்கதை பக்கம் சட்டென சாய்ந்துவிடுகிறார் புஷ்பா. அதிலும் சென்ட்டிமென்ட்டாக சேலை கட்டி அவ்வளவு நேரம் நடனமாடிக்கொண்டே இருக்க "அவன யாராச்சும் நிறுத்துங்கடா” என திரையரங்கிற்குள்ளேயே கமெண்ட் அடித்து சிரிக்கிறார்கள் ரசிகர்கள்.
அந்தச் சேலை கட்டி ஆடும் காட்சிகளின் நோக்கம் செல்லுபடியாகும் நோக்கமாக இருந்தாலும், அதற்கான மீட்டரில், சரியான அளவில் அதைக் காட்டாமல் சாமி வந்து ஆடுவதுபோல் காட்டி, நடுவில் இரண்டு Western Stepகளும் போட்டு குளறுபடியாகக் காட்டப்பட்டது பார்வையாளர்களை ஒன்றவிடாமல் தடுக்கிறது. இதில் மட்டுமல்லாமல் பல காட்சிகளில் இப்படித்தான் மீட்டரை மிஞ்சி மிரள வைத்துள்ளார் இயக்குநர் சுகுமார்
ஆனால் முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயமாக சில வசனங்களும், காட்சிகளும் சுகுமாரின் எழுத்தில் இருப்பது பாராட்டுதலுக்குரியது. தந்தை இல்லாத புஷ்பா குடும்பப் பெயருக்காக ஏங்குவதும், மனிதனை மதிக்காத ஒரு குடும்பத்தின் பெயர் உனக்கு வேண்டாமென ராஷ்மிகா பேசுமிடங்களும் தனியாகத் தெரிகின்றன.
மற்ற டப்பிங் படங்களில் கதாப்பாத்திரங்களோட ஒட்டாமல் அந்நியமாகத் தெரியும் குரல்கள்போல் இந்தப் படத்தில் தெரியாததற்கு தமிழில் வசனமெழுதியுள்ள மதன் கார்க்கியை பாராட்டியே ஆகவேண்டும். அவரது இயல்பான வசனங்கள் இதை ஆல்மோஸ்ட் தமிழ் படமாகவே காட்டுகின்றன.
இந்தப் படத்திற்கு ஆரம்பத்தில் லேசாக பலம் சேர்த்த பின்னணி இசை, போகப் போக சற்றுத் தடுமாறியது எளிதில் கண்ணில் படும்படியாக இருக்கிறது.
இரண்டாம் பாதியே கதை இல்லாமல் திணறுகிறதே என நாம் தப்புக்கணக்குப் போடும்போதுதான் வருகிறது மிகப்பெரிய டுவிஸ்ட் "புஷ்பா - 3 தி ராம்பேஜ்”