#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
பெருமாள் வாத்தியாராக விஜய் சேதுபதி தனது நடிப்பால் மிரட்டுகிறார். ஆரம்பத்தில் வரும் கருப்பன் (கென் கருணாஸ்) போர்ஷன் தான் படத்திற்கு பெரிய பலமாக அமைகிறது. பண்ணையார்கள் தங்கள் வயலில் கூலி வேலை செய்யும் பெண்களை படுக்கைக்கு கொண்டு சென்று கெடுப்பதை எதிர்த்து பண்ணையார் ஒருவரை கென் கருணாஸ் வெட்டும் காட்சிகளிலேயே படத்தின் ஃபயர் பற்றிக் கொள்கிறது. ஆனால், கென் கருணாஸ் கொல்லப்படும் இடத்தில், அவரை காப்பாற்ற போராடும் பெருமாள் வாத்தியாரையும் பண்ணையாரான போஸ் வெங்கட் குத்திவிடுகிறார். அதில் இருந்து அவரை தோழராக வரும் ஆடுகளம் கிஷோர் காப்பாற்றுகிறார்.
கரும்பு தொழிற்சாலையில் நடக்கும் பிரச்சனையை சரி செய்ய விஜய் சேதுபதியை அனுப்ப அந்த நிறுவனத்தின் ஓனர் மகளான மஞ்சு வாரியரும் தோழராக புரட்சி பேசி வருகிறார். அவருடன் விஜய் சேதுபதிக்கு காதல் மலர்ந்து திருமணம் செய்துக் கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டு வாழ்கிறார். ஒரு கட்டத்தில் ஆயுதம் எடுத்துசிண்டிகேட் ஆட்களை அழித்தொழிக்கும் புரட்சியில் ஈடுபடும் விஜய் சேதுபதி மக்கள் இயக்கத் தலைவராக மாறுகிறார்.
கோரமான ரயில் விபத்துக்கு குண்டு வைத்தது நாங்கள் தான் என்றும் ஆனால், அதன் பின்னர் இருக்கும் அரசாங்கத்தின் சதியை அவர் சொல்லும் இடங்கள் எல்லாம் மக்களாட்சி என்கிற பெயரில் அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கமும் நடத்தும் வன்முறைகளை தோலுரித்துக்காட்டியிருக்கிறார் வெற்றிமாறன்.
வேல்ராஜின் ஒளிப்பதிவும் இளையராஜாவின் இசையும் படத்துக்கு பெரும் பலமாக உள்ளது. அந்த பனி நிறைந்த காட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் புல்லரிக்குது. ஆக்ஷன் போர்ஷன், மக்களுக்கு ஆரசியல் பாடம் நடத்தும் இடங்கள், விஜய் சேதுபதியின் நடிப்பு, சூரி, ராஜீவ் மேனன், சேத்தன், இயக்குநர் தமிழ் என நடிகர்கள் எல்லாம் அப்படியே வாழ்ந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். பெருமாள் வாத்தியாரின் அரசியல் சித்தாத்தம் குமரேசனை எப்படி மாற்றுகிறது என்கிற இடம் தான் இந்த படத்திற்கு உயிர்நாடி. அதை கச்சிதமாக காட்டி வெற்றிக் கண்டுள்ளார் வெற்றிமாறன். சேத்தன் மலையில் இருந்து விழப்போகும் காட்சி எல்லாம் மிரட்டலின் உச்சம். ஆனால், அதன் பின்னரும் அவருடைய கதாபாத்திரம் செய்யும் செயல்களை பார்த்தால் சில ஜென்மங்கள் எல்லாம் திருந்தவே திருந்தாது என்பதை ஆழமாக பதிய வைத்துள்ளார் இயக்குநர்