#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
இயக்குநர் கே. சி. குரு இயக்கத்தில் உருவாகி வரும் 'லைட் வெயிட் பேபி ' திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் - ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.. பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். பின்னர் இந்தப் படத்தின் படத்தொகுப்பாளராக ஹரிஷ் கோமே பணியாற்றுகிறார். ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் சாகர் சந்தேஷ் இணைத்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நிலையில்... தற்போது இப்படத்தின் 30 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், சென்னை மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற இரண்டு கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து, மொத்த படப்பிடிப்பில் 60% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.