#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
கடன் வாங்கி மகனை( சூரியராஜ் வீரபத்தினி ) மெடிக்கல் காலேஜ் படிக்க வைக்கும் பெற்றோர், அவனை ஒரு வில்லங்கமான மெடிக்கல் காலேஜில் சேர்த்து விடுகின்றனர்.கல்லூரியில் இருக்கும் ஒரு கட்டிடத்தில் உள்ள 418 ஆம் எண் கொண்ட ஓர் அறையை பதினைந்து வருடங்களாக பூட்டியே வைத்து இருக்கிறார்கள்.
காரணம் அங்கே இருந்த ஒரு பெண் அமானுஷ்யம் புகுந்து, பெண்களாக பார்த்து கொடூரமாக கொன்று இருக்கிறாள். எனவே அந்த கட்டிடத்துக்குள் பெண்கள் யாரும் போவதே இல்லை .
அதன் பக்கத்தில் உள்ள அறையில் படிக்க வந்த மாணவன் தங்கி இருக்க, அவனையும் அந்த சக்தி கொலை செய்ய முயல்கிறது. தனது நண்பனின் (சரண் லக்கராஜு) உதவியோடு கல்லூரி மனநல மருத்துவரை (ரமேஷ் இந்திரா) சந்திக்கிறான் பாதிக்கப்பட்ட மாணவன்
அவர் அங்கே இருக்கும் அமானுஷ்ய சக்தியின் கதையை கூறுகிறார்.
கன்னட நாட்டுப்புறக் கலைஞரான ஓர் அநாதை இளம்பெண்ணை ( சைத்ரா ஆச்சார்) ஒருவன் காதலிக்கிறான். கல்யாணம் செய்து கொள்கிறான். நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாள்
அவள் கர்ப்பமான நிலையில் அவள் வயிற்றில் குழந்தை தங்காது என்ற நிலை. ஆனால் அவளது உறவுகளுக்கு குழந்தை பிறப்பது அவளை உறுத்துகிறது.
இந்நிலையில் அவளை ஒருவர் ஒரு துர்தேவதையிடம் அழைத்துச் செல்கிறான். அந்த துர்தேவதை ”ஆறு பெண்களை கொன்றால் உனக்கு பெரும் சக்தி கிடைக்கும்” என்கிறார்.
மூன்று பெண்களை கொன்ற நிலையில் அந்த அமானுஷ்ய சக்தி மேலும் சிலரை கொல்ல இருப்பதாகவும் அந்த அமானுஷ்ய சக்தி பொருத்தமான உடலில் புகுந்து விட்டால் அப்புறம் அதை ஒன்றும் செய்ய முடியாது என்றும் மனநல மருத்துவர் கூறுகிறார்.
கல்லூரியில் படிக்கும் சகமாணவி( பிரீத்தி பகதாலா) அந்த அமானுஷ்ய சக்தியிடம் மாட்டிக் கொள்ள , நடந்தது என்ன என்பதே இந்த 418 படம்.
ரொம்ப குழப்பமான எந்த ஒழுங்குக்கும் அடங்காத பித்துக்குளித்தனமான திரைக்கதை.
கே ஜி எப் படங்கள் மூலம் அநீதியை குளோரிஃபை செய்யும் குரூர வன்முறையை பிரபலப்படுத்தி, தென்னிந்திய சினிமாவையே கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய பிரஷாந்த் நீல் , இப்போது பெண்களை வைத்து அதே மாதிரி இன்னொரு மோசமான ரூட்டை கையில் எடுத்து இருக்கிறார்.
சைத்ரா ஆச்சார் சிறப்பாக நடிக்கிறார்.
பெரிய கண்கள், லோ ஹிப் மேல் ஏறி நிற்கும் குறுந் தொப்பை அல்டசியமான நடையுடை பாவனைகள் என்று ஈர்க்கிறார் பிரீத்தி பகதாலா.
ரமேஷ் இந்திரா கவனிக்க வைக்கிறார்.
மற்றபடி நடித்தவர்கள் பலரும் நரம்பு புடைக்க, முடி சிலிர்க்க ஓவர் ஆக்டிங்கில் கத்துகிறார்கள்.
தினேஷ் திவாகரன் ஒளிப்பதிவு , வெங்கியின் இசை , அகுல் அவினாஷ் படத் தொகுப்பு, அனுபம் கொடுத்திருக்கும் ஒலி வடிவமைப்பு இவையே படத்தின் பலம்
ஆனால் ஓவராக குழப்பும் திரைக்கதையால் படத்தின் ஒலி அளவு கடுப்பேற்றுகிறது.
கிளைமாக்ஸ் டுவிஸ்ட் அந்த குழந்தையே நீங்கதான் சார் பாணியில் இருக்கிறது. ஆனால் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. கால அளவும் குழப்புகிறது.
படம் முடியும்போது விட்டால் போதும் என்று இருக்கிறது