#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
ஒரு நல்ல நடைமுறை வாழ்க்கையைப் பாசத்தோடும் பரிதவிப்போடும் சொல்லியிருக்கிறேன் ” ஆகாயம் ” படம் குறித்து இயக்குனர்
தினந்தோறும் நாகராஜ்.
டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரித்துள்ள புதிய திரைப்படத்திற்கு “ஆகாயம் ” என்று பெயரிட்டுள்ளனர்.
“தினந்தோறும்” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தினந்தோறும் நாகராஜ், அதன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களாலும், திரையுலகினராலும் அந்தப் பெயரிலேயே அன்புடன் அழைக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய “மின்னலே”, “காக்க காக்க” போன்ற வெற்றிப் படங்கள் உட்பட பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.
அவர் தற்போது “ஆகாயம்” திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
“கன்னி மாடம்” திரைப்படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் அனைவரின் கவனம் ஈர்த்த ஸ்ரீராம் கார்த்திக் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஆலிஷா மிராணி அறிமுகமாகிறார்.
மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், “மெய்யழகன்” படத்தில் நடித்த இந்துமதி மணிகண்டன், தீபா, “மகாராஜா” திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற சஞ்சனா நமீதாஸ், ரோசாரி, ரைட்டர் ஹரிஹரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
“சென்னை டு சிங்கப்பூர்”, “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் நல்லமுத்து, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“நீர்ப்பறவை”, “அயோத்தி” உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்க,
பாடல்களை “நூறு சாமிகள் இருந்தாலும்” என்ற பிரபலமான அம்மா பாடலை எழுதிய ஏக்நாத், மற்றும் “காற்றோடு பட்டம் போல”, “நீலோத்தி” உள்ளிட்ட ஹிட் பாடல்களை எழுதிய சாரதி மற்றும் ரமணிகாந்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
“ஒரு நொடி”, “ஜென்ம நட்சத்திரம்” ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்த சூர்யா, இப்படத்தின் எடிட்டிங்கை மேற்கொண்டுள்ளார்.
சண்டைப் பயிற்சியை பையர் கார்த்திக் அமைத்துள்ளார்.
நடன அமைப்பாளராக மணிகண்டன் பணியாற்றுகிறார்.
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்
தயாரிப்பு மேற்பார்வை : பிரசாந்த்
தயாரிப்பு : ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் – தினந்தோறும் நாகராஜ்.
படம் பற்றி இயக்குனர் தினம்தோறும் நாகராஜ் பகிர்ந்தவை…
“கதையாகச் சொன்னால் ‘ஆகாயம்’ குடிக்கு எதிரான படம். ஆனால், அதை உயிர்த்துடிப்பான ஒரு வாழ்க்கையோடு சொல்லியிருக்கிறேன். தவிர இதில் அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து வந்திருக்கின்றன.
படங்கள் அனுபவங்களைத் தந்து, வாழ்க்கைக்குள் நுழைந்து நல் உணர்வுகளைத் தர வேண்டும். அப்படி ஒரு சினிமா செய்வதுதான் நமக்கு கௌரவம். நான் அதைத்தான் செய்திருக்கிறேன்.
‘ஆகாயம்’ அப்படியான படம். ஒரு நல்ல நடைமுறை வாழ்க்கையைப் பாசத்தோடும் பரிதவிப்போடும் சொல்லியிருக்கிறேன் என்றார் இயக்குனர் தினந்தோறும் நாகராஜ்.