#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
ஒரு கிரைம் திரில்லர் படத்தைத் தர முயன்றுள்ளனர்
படத்தின் துவக்கத்தில் நாயகி தான்யா ஹோப் கடத்தப்படுகிறார். இதுவொரு கதை. நாயகன் முகைன் இன்னொரு நாயகி ப்ரீத்தி அஸ்ராணி இருவரும் காதலிக்கிறார்கள். இதுவொரு கதை. ஒரு கட்டத்தில் ப்ரீத்தி அஸ்ராணி ஒரு மருத்துவமனையிலுள்ள குற்றங்களை கண்டுபிடிக்கிறார். அதனால் அவருக்கு ஒரு ஆபத்து நேர்கிறது. அதிலிருந்து அவரைக் காப்பாற்றப் போராடுகிறார் ஹீரோ! அதன்பின்னால் நடக்கும் எல்லா கிரைம்களுக்கும் விடை சொல்கிறது மீதி திரைக்கதை
முகைன் இயல்பாக நடித்துள்ளார். காதல் காட்சிகளை இயக்குநர் இன்னும் நன்றாக எழுதியும் எடுத்துமிருந்தால் முகைன் அந்த ஏரியாவில் ஸ்கோர் செய்திருப்பார். நடிகைகளில் ப்ரீத்தி அஸ்ராணி அற்புதமான நடிப்பைக் கொடுத்துள்ளார். தான்யா ஹோப் தனக்கு வழங்கப்பட்ட கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளார். நிதின் சத்யாவின் வில்லத்தனம் பெரிதாக எடுபடவில்லை
இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்ரேட்மார்க் இசையை இப்படத்தில் வழங்கத் தவறியுள்ளார். பாடல்கள் ஓரளவு வொர்க்காகியுள்ளது. ஒளிப்பதிவாளர் நிறைய சிக்கனமான ஷாட்களை கம்போஸ் செய்துள்ளார். எடிட்டர் இன்னும் கூர்மையாக வேலை செய்திருக்கலாம். படமெங்கும் ஜம்ப் கட்ஸ்!
ஒரே நேர்கோட்டில் கதை சொல்லாவிட்டாலும் பல கோடுகளை ஒன்றிணைக்கும் வித்தை திரைக்கதையில் இருந்திருக்க வேண்டும். அதை மிஸ் செய்துள்ளார் இயக்குநர் பலராம் கிருஷ்ணா. ஒரு பரபர நாவலுக்கான கன்டென்ட் இது. ஆனால் சினிமாவிற்கான கன்டென்டாக மாறவில்லை. லாஜிக்காக நமக்கு எழும் எல்லாக் கேள்விகளுக்கும் கன்வின்சிங்கான பதில் படத்திலில்லை