மோட்சப்பயணத்தின் மறைப்பொருள் விளக்கம் 

John Bunyan

பரிசுத்தாவியானவரின் வழிநடத்துதலின்படி ஜான் பணியன் எழுதிய மோட்சப் பயணத்தை (Pilgrim's Progress) தமிழில் வியாக்கியானம் செய்து நவீன கிறிஸ்துவர்களுக்கு பொருந்தும் படி எழுதியிருக்கிறேன். நான் இந்த விளக்கவுரை எழுதும்போது பரிசுத்தாவியானவர் எனக்கு ஒரு தரிசனம் கொடுத்தார். ஒரு சிறிய பையன் ஒரு முதிர்ந்த நபருக்கு குடை பிடித்துக்கொண்டு இருவரும் ஒன்றாக நடந்து போகிறார்கள். இதனுடைய அர்த்தம் என்னவென்றால், 17 ம் நூற்றாண்டில்  இந்த அருமையான புத்தகத்தை எழுதிய முதியவருடன், இந்த 21ம் நூற்றாண்டில்  விளக்கவுரை எழுதிய நான், ஒரு சிறுவனாக, ஜான் பணியனோடு சேர்ந்து நடக்கிறேன். நான் அவருக்கு குடை பிடிப்பது அவரை கௌரப்படுத்துவதற்கு அர்த்தமேயாகும்.

ஒரு பகுதியில் ஜான் பணியன் ஒரு இரும்புக்கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் ஒரு மனிதனை குறிப்பிடுகிறார். நான் அவர் கூண்டிலிட்ட மனிதனை கூட்டிலிருந்து இந்த நூற்றாண்டில் விடுதலை ஆக்கிவிட்டேன்.

நான் ஆங்கிலத்தில் எழுதிய முழு புத்தகத்தின் விளக்கவுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இதில் இரண்டாம் பகுதியான கிறிஸ்டியானாவும் அவளது பிள்ளைகளும் Mercy என்ற பெண்ணும் எவ்வாறு மோட்ச பட்டணத்தை அடைந்தனர் என்பதற்கு விளக்கவுரை எழுதியிருக்கின்றேன். 

மோட்சப்பயணத்தின் மறைப்பொருள் விளக்கம் என்ற புத்தகத்தை வாங்க கீழேயுள்ள லிங்கை அழுத்தவும்.

https://notionpress.com/read/pilgrim-s-progress-unveiled


யோபு அன்பழகன் 

Email: jobanbalagan@gmail.com

அர்ப்பணிப்பு/

அணிந்துரை/விளக்கவுரை எழுதிய ஆசிரியரின் கருத்து/

மோட்ச பயணத்தின் அருமை பெருமைகள்

முதலாம் அதிகாரம் 

கவலைப்படும் கிறிஸ்தியான் மனம் திரும்புதல் 

இரண்டம் அதிகாரம் 

கிறிஸ்தியானும் இளகிய நெஞ்சனும்/குட்டையில் விழுந்தார்கள்/உலக ஞானியைச் சந்தித்தல்/நற்செய்தியாளருடன் இரண்டாம் சந்திப்பு

மூன்றாம் அதிகாரம்

இடுக்கமான வாசல் கோட்டையில் கிறிஸ்தியான்/பொருள்கூறுபவரின் வீட்டை அடைதல்/தூசு படிந்த அறை/ஒரு சிறிய அறையினுள் இரணடு சிறுவர்கள்/சுவற்றின் ஓரமாக நெருப்பு எரியும் ஒரு அறை/கவசம் தரித்த நான்கு பலவான்கள்/இரும்புக் கூண்டுக்குள் ஒருவன்/கூண்டிலிருந்து விடுதலை/ ஒரு பயங்கரமான கனவு 

நான்காம் அதிகாரம்

சிலுவையைத் தரிசித்தல்/மூன்று உறங்கும் மனிதர்கள்/சுவற்றில் ஏறிக்குதித்து வரும் சம்பிரதாயன், வெளிவேசக்காரன் என்ற இருவர் /கடினமலையை அடைதல்/இளைப்பாறும் ஸ்தலம்/சுருளைக் காணோம்/அலங்கார மாளிகை/அழகிய அரண்மனையின் கதவு திறப்பு/கிறிஸ்தியான் ஆயுதம் தரித்தல் 

ஐந்தாம் அதிகாரம்

அப்பொல்லியோனோடு சண்டை/மரண இருளின் பள்ளத்தாக்கில் கிறிஸ்தியான்/உண்மையானவனின் அனுபவங்கள்/வாயடியைச் சந்தித்தல் /மாயாபுரியில் பயணிகள்/உண்மையானவின் ரத்த சாட்சி

ஆறாம் அதிகாரம் 

கிறிஸ்டியானும் நம்பிக்கையும் முடிவை விரும்புவன் என்ற பயணியுடன்/கிறிஸ்தவமும் உலகஆதாயமும்/சந்தேகக் கோட்டையில் பயணிகள்/நம்பிக்கையற்றவன் என்ற அரக்கனின் கையில்/மூன்று விதமான அரக்கர்கள்/மகிழ்ச்சி மலையில் பயணிகள்/நரகத்திற்குப் போகும் ஒரு குறுக்கு வழி/கிறிஸ்டியானும் நம்பிக்கையும் அறியாமை என்ற பயணியுடன்/போக்கரிகளின் கைகளில் பலவீன விசுவாசம் என்ற பயணி/முகத்துதியைச் சந்தித்தல்/எப்சிபா பியூலா தேசத்திற்குள் பிரவேசித்தல்/மரண நதியை கடப்பது/மோட்சத்தை அடைந்தனர்

இரண்டாம் பகுதி

கிறிஸ்டினாவின் வாழ்க்கை சரித்திரம்

கிறிஸ்டினாவின் பயணம்/கிறிஸ்டினா நுழைவு வாசலில்/நுழைவு வாசலில் பிரவேசிப்பு/இரண்டு கெட்ட மனிதர்கள்/இளைப்பாறும் வீடு/குப்பைவாரியுடன் ஒரு மனிதன்/தாய்க்கோழியின் உவமானம்/அழகிய பூங்கா, கோதுமை மணி/அழகிய குமாரத்தியின் பணிகள்/பெரிய இருதயம் (கிரேட் ஹார்ட்)/இளைப்பாறும் ஸ்தலம் (Arbor)/பயம் விளைவிக்கும் கடுமையான அரக்கன்/அழகிய மாளிகையை அடைதல்/அழகிய மாளிகையில் நடக்கும் பணிகள்/அழகிய மாளிகையில் கருணை ஊழியக்காரி/அழகிய மாளிகையிலிருந்து விடை பெருதல்/பக்தி, விவேகம் ஊழியர்களின் கடைசி பணிகள்/அவமானத்தின் பள்ளத்தாக்கு/உண்மையான மேய்ப்பனும் தேவனுடைய வீடும்/மரண இருளின்பள்ளத்தாக்கில்/மரண இருளின் பள்ளத்தாக்கில் எனது சாட்சி/மேகமும், இருளும் மூடும் பாதை/யார் இந்த கிரேட் ஹார்ட் (பெரிய இருதயம்)?/கண்ணியைகளும், பயம் விளைவிக்கும் கடுமையான” அரக்கனும்/ நேர்மை என்ற பழைய பயணி/பயந்தான்கொள்ளி மனிதன்/காயுவின் வீட்டின் (House of Gaius) சிறப்புகள்/நல்லவர்களை அழிக்கும் அரக்கனின் அரக்கனின் கையில்/மாயாபுரியின்சந்தையில் மினாசோனின் சிறப்பு வீடும், ஊழியங்களும்/ மூன்று கொள்ளையர்களுடன் சத்தியத்திற்கான யுத்தம்/ வசியம் நிறைந்த பூமி (Inchanted Ground) /யேசபேல் (Madam Bubble) என்ற கள்ள தீர்க்கதரிசி/ எப்சிபா பியூலா தேசத்திற்குள் பிரவேசித்தல் /மோட்சப்பட்டணத்தை அடைதல்