பக்தி, விவேகம் ஊழியர்களின் கடைசி பணிகள்

பக்தி, விவேகம் ஊழியர்களின் கடைசி பணிகள்

பயணிகள் புறப்பட்டுப்போகும்போது பக்தி ஊழியக்காரி தான் ஒரு முக்கியமான பொருளை அவர்களுக்கு கொடுக்க மறந்துவிட்டதால் அதை திரும்பிப் போய் எடுத்துகொண்டுவரும்படியாக ஓடுகிறாள். அதை கொண்டுவந்தபின், அந்த பொருள் "ஆர்வமாக படிக்கும் அழகிய மாளிகையில் நடந்ததை பற்றி ஞாபக குறிப்புகள்" என்று விளக்கி பக்தி ஊழியக்காரி கிறிஸ்டியானாவை நோக்கி உரைக்கிறாள். இந்த ஞாபக குறிப்புகள் பயணிகளின் பக்தி விருத்திக்காகவும், ஆறுதலுக்காகவும் பிரயோஜனமாகவும் இருக்கும் என்று மேலும் கூறுகிறாள்.

விவேகம் ஊழியக்காரி கிரிஸ்டியானாவுக்குத் தங்களது தேசத்திலுள்ள வசந்த காலத்தில் பாடும் குருவிகளை குறித்தும், பூக்கள் மலர்வதைப் பற்றியும் கதிரவன் உதிப்பதைக்குறித்தும் அருமையாக சித்திரிக்கிறாள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

சபைகளில் கற்றுக்கொடுத்த பாடங்களை மறக்காமல் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும்படியாக குறிப்புகள் தேவ மக்களுக்கு கொடுக்கப்படவேண்டும். இப்போது நடப்பது என்னவென்றால் தேவ மக்கள் சபைகளில் நோட்டு புத்தகங்களில் குறிப்புகள் எடுத்துக்கொள்கிறார்கள்.

இந்த ஊழியக்காரிகள் தங்களின் தேசத்தை குறித்து சாட்சி கொடுக்கிறார்கள். இவர்கள் இருக்கும் தேசம் சீயோன் என்ற எப்சிபா பியூலா தேசம். இதை குறித்து இனி வரும் கட்டுரையில் படிக்கலாம். கண்காணிப்பும் (Watchful), இந்த எல்லா ஊழியர்களும் இந்த தேசத்தில் ஏற்கனவே பிரவேசித்துவிட்டார்கள். அழகிய மாளிகையில் பணிபுரியும் இவர்கள் இந்த தேசத்தைக் குறித்தும் அதன் மகிமையை குறித்தும் சாட்சி கொடுக்கிறார்கள். விவேகம் ஊழியக்காரி தங்களின் வீட்டைப் பற்றி மேன்மை கூறாமல் இந்த ராஜ்ஜியத்தைக் குறித்தும் அதன் மகிமையைக் குறித்தே சாட்சி கொடுக்கிறாள். ஆனால், இன்று நமது சபையிலோ, கூட்டத்திலோ ஒரு அற்புதம் நடந்துவிட்டால், அதை சாட்சியாய் அறிவிக்கும்படி, அந்த அற்புதம் பெற்ற மனிதர்களை வற்புறுத்துகிறோம்.

இங்கே பணிபுரியும் ஊழியர்களை பெண்கள் என்றே ஜான் பண்ணியன் குறிப்பிடுகிறார். இதனின் அர்த்தம் என்னவென்றால், சபையின் ஊழியங்கள் பெண்கள் பணிவிடை செய்வதுபோல பணிவிடையின் ஊழியங்களாகவே இருக்கவேண்டும். தேவ மந்தையை அரவணைத்து, அவர்களின் ஆத்தும, சரீர பிரகாரமான எல்லாகாரியங்களையும் பணிவிடைகளாகவே செய்யவேண்டும். தேவ மந்தையின் மேல் கண்காணிப்பு செலுத்தும் ஊழியம் இந்த சபையின் போதகராக பணி புரியும் (Watchful, the porter) என்ற ஊழியருக்குக்கே உரித்ததாகும். இங்கே விவேகம் என்ற ஊழியக்காரியின் மூலமாக சத்தியத்தை எப்படி பகுத்தறிந்து, புரிந்துகொள்ளவேண்டும் என்று போதனை அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து படிக்க..அவமானத்தின் பள்ளத்தாக்கு (Valley of Humiliation)