நேர்மை என்ற பழைய பயணி

Home

முந்திய பகுதி... கண்ணியைகளும், பயம் விளைவிக்கும் கடுமையான” அரக்கனும்

நேர்மை என்ற பழைய பயணி

பயணிகள், சிறு தொலைவில். கிறிஸ்டியான் உண்மையுள்ளவனோடு சந்தித்த இடத்தை அடைகிறார்கள். போகும் வழியில் கிரேட் ஹார்டுடன், கிறிஸ்டியானா, மகன் மாத்தியூ, எப்படி கிரேட் ஹார்ட் அரக்கனோடு அப்போது யுத்தம் பண்ணி, அவருக்கு அடைந்த காயத்தைப் பற்றிய உரையாடல் நடக்கிறது. ஆண்டவருக்காக அடைந்த இந்த காயம் ஆண்டவரை நேசிக்கும் ஒரு அடையாளமாக இருக்கட்டும் என்று கிரேட் ஹார்ட் திருவுளம்பற்றினார். பின்பு, போகும் வழியில், ஒரு முதிர்வாய்ந்த, பார்ப்பதற்கு ஒரு பழைய பயணி போல இருக்கும் ஒரு மனிதன், Mr Honest (நேர்மை) என்ற பெயருடன், உறங்கிக்கொண்டிருப்பதை கண்டு, அவரை கிரேட் ஹார்ட் எழுப்புகிறார்; அவர் ஒரு பழைய, தனக்கு அறிமுகமான பயணி என்றும், அவரின் பெயர் "பழைய நேர்மையானவன்" (Old Honesty) என்று அறிந்து கொள்கிறார். தான் ஒரு முட்டாள்களின் ஊரிலிருந்து வருவதாகவும், அந்த ஊர் அழியும் நகரத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதாகவும், அவரின் பெயர் "நேர்மை" என்றும், "நேர்மையுள்ளவன்" (Honesty) அல்ல என்றும் நேர்மை (Honest) அறிவிக்கிறார். நேர்மை, பயணிகளோடு சேர்ந்து கொண்டு, தனது பயணத்தை மேற்க்கொள்கிறார். நேர்மை, கிறிஸ்டியானையும் அவனது மோட்சப்பயணத்தையும் அறிந்ததாக கூறி, கிறிஸ்டியானாவையும் அவள் பிள்ளைகளையும், மேர்சியையும், அவர்களின் பெயர்களை சொல்லி, அந்த பெயர்களின் அர்த்தங்களை விளக்கி தேவ நாமத்தில் வாழ்த்துகிறார்.

கற்றுக்கொள்ளும் பாடம்

Mr. Honest ஐ, போல அநேக கிறிஸ்தவர்கள் அழிந்துபோகும் நரகத்திற்கு அருகேயுள்ள முட்டாள்களின் ஊரிலிருந்து வந்தவர்களாகயிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சபைகளில் மோட்சப்பட்டணம் போவதற்காகத் தங்களை தயாராக்கிக் கொள்ளாமல், உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். கிரேட் ஹார்ட் போன்ற ஊழியர்கள் அந்த மக்களை தட்டி எழுப்பவேண்டும். இவர்கள் பழைய பயணிகள். அநேக ஆண்டுகளாக மோட்சப்பயணத்தின் பாதையில் வழி தெரியாமல் சென்றுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நேர்மை உடையவர்கள். ஆனால் கள்ள போதகத்தால் வஞ்சிக்கப்பட்டு, தங்கள் சபைகள் தான் அவர்களின் சேரும் இடம் (Destination) என்று அங்கேயே தங்கி, உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு, தாங்கள் பரதேசிகள் (PILGRIMs) என்றும், அழிந்து போகும் நகரத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களின் சபைகளில் போதிக்கப்படவில்லை. தாங்கள் பரிசுத்தாவினவரின் அபிஷேகம் கிடைத்து, ஆண்டவரின் வருகைக்காக காத்திருப்பதாகவும் ஒரு தப்பான தத்துவம் அவர்களுக்குப் போதிக்கப்படுகிறது.

நமது பிள்ளைகளுக்கு, அர்த்தங்களை அறிந்து, கிறிஸ்தவ பெயர்களைச் சூடவேண்டும். நாம் மற்றவர்களை வாழ்த்தும்போது, தேவ வசனங்களை தீர்க்கதரிசனமாக கூறி அவர்களின் ஆசிர்வத்திற்காக, ஜெபிக்கவேண்டும். தேவ வசனங்கள் தான் ஆசிர்வதிக்கும் தீர்க்கதரிசனங்கள்.

தொடர்ந்து படிக்க... பயந்தான்கொள்ளி மனிதன்