அழகிய பூங்கா, கோதுமை மணி

Home

முந்திய பகுதி....தாய்க்கோழியின் உவமானம்

அழகிய பூங்கா, கோதுமை மணி, சிவந்த சிறுபறவை உதாரணங்கள்

தனது பூத்தோட்டத்திற்குள் பொருள்கூறுபவர் அழைத்துச்சென்று, அழகிய பூக்களைக் காண்பித்து ஒவ்வொரு பூவின் மகத்துவத்தையும் காண்பிக்கிறார். "சில மலர்கள் மற்ற மலர்களை விட அழகில் வித்தியாசமாகவும் வேறுபட்டும் இருக்கிறது. மணத்திலும் வாசனத்திலும் வித்தியாசம் இருக்கிறது அந்த பூக்கள் தங்களுக்குள் எந்த போட்டி மனப்பன்பை இல்லாமல் தோட்டக்காரர் எந்த இடங்களில் வைத்திருக்கிறாரோ அங்கேதான் இருக்கிறது," என்கிறார். பின்பு கோதுமையைக் களஞ்சியத்தை காண்பித்து, கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்த்தபின், பதரை என்ன செய்யவேண்டும் என்று கிறிஸ்டியானாவிடம் கேட்கிறார். அவளோ அவைகளை அக்கினியினால் சுட்டெரிக்கவேண்டும் என்கிறாள். பதிலாக, அவர் உன் வாயாலே உன்னை ஆக்கினைக்கு உள்ளாக்காமல் காத்துக்கொள்ளவேண்டும் என்று பொருள்கூறுபவர் கூறுகிறார். நமது ஆவிக்குரிய வாழ்க்கை, கோதுமை மணியை போல பரலோக தோட்டக்காரருக்கு பிரயோஜனமாக இருக்கவேண்டும் என்கிறார். "தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார், பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்," என்கிறார். அப்போது அங்கே ஒரு மார்வு சிவந்த சிறுபறவை (Robin) தன் வாயில் ஒரு சிலந்தி பூச்சைப் பிடித்து கொண்டு அங்கே வந்தது. "இந்த அழகான பறவை வெளித்தோற்றத்தில் ஒரு நல்ல படித்த பேராயரை (Professor) போலாகும். வெளித்தோற்றத்தில் பக்தி உள்ளவர்கள் போலவும் மற்றவர்களை நேசிப்பது போல வெளியில் காண்பித்துக்கொள்கிறார்கள். நல்ல ஆகாரம் உண்ணும் மார்வு சிவந்த சிறுபறவை போல காணப்படுகிறார்கள். ஆனால், சமயம் வாய்க்கும்போது சிலந்திகளை போன்ற அழுக்கான ஜந்துக்களையும் உண்கின்றார்கள்; தங்களது வாழ்க்கையில் பாவத்தை பிடித்து உட்கொள்கிறார்கள்," என்கிறார்.

இதே போல இன்னும் அநேக உவமானங்களால் வீட்டிலுள்ள எல்லாருக்கும் பொருள்கூறுபவர் கற்பித்தார்.

கற்றுக்கொள்ளும் பாடம்

இன்று நமது பிரசங்கங்கள் உப்பும் சப்பும் இல்லாமலிருக்கிறது. நாம் இதுபோல பறவைகளை வைத்தோ, விலங்குகளை வைத்தோ, ஒரு செய்திகூட கொடுப்பது இல்லை. நமக்கு தெரிந்த வேத வசனங்களை கொட்டிக்குவிக்கிறோம். இந்த வீட்டில் பொருள்கூறுபவர் எல்லா தத்துவங்களையும் நடைமுறையில், புரிந்துகொள்ளும்படி போதிக்கிறார். இந்த பொருள்கூறுபவரின் வீடானது புதிய விசுவாசிகளுக்குப் போதிக்கும் ஒரு உள்ளூர் சபைக்கு ஒத்தாகும். நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரும்போது, அதற்க்கென்று போதிக்கும் சபையைக் (Palace Beautiful) குறித்தும், வேறு இரண்டு, சிறப்புள்ள, தேவ ஊழியர்களின் வீடுகளைப் (Gaius & Mnason) பற்றியும், பின்பு படிக்கலாம்.

தொடர்ந்து படிக்க.....அழகிய குமாரத்தியின் பணிகள்