இளைப்பாறும் வீடு

Home

முந்திய பகுதி.....இரண்டு கெட்ட மனிதர்கள்

இளைப்பாறும் வீடு

கிறிஸ்டியானா தனது குழுவோடு ஒரு வீட்டை அடைகிறாள். இந்த வீடு பரதேசிகள் தங்கும்படி, பரலோக அரசன் கட்டி வைத்திருக்கிறார். இங்கே ஒரு பொருள்கூறுபவர் (Interpreter) இருக்கிறார். இங்கே பரதேசிகளின் (Pilgrims) சரித்திரம் வைக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்டியானா கதைவை தட்டினவுடன் கதவு திறக்கப்பட்டு, ஒரு அழகிய குமாரத்தி (Damsel) அவர்களை வரவேற்கிறாள்.

அவர்கள் யாரென்று அறிந்து, அதாவது கிறிஸ்டியானின் மனைவி கிறிஸ்டியானா என்று அறிந்து, அந்த வீட்டிலுள்ளவர்கள் கேட்டு சந்தோஷமடைந்தனர்.

"ஏன் வாசலில் நின்றுகொண்டிருக்கிறாய், ஆபிரகாமின் குமாரத்தியே," என பொருள்கூறுபவர் (Interpreter) அவர்களை உற்சாகமாக அழைக்கிறார். அந்த வீட்டில் ஆனந்த களிப்பும் கொண்டாட்டமுமாயிருக்கிறது, கிறிஸ்டியானா, "எங்களுக்கு இன்று இரவு தங்கும்படி அனுமதி கோருங்கள்," என்றாள்.

வீட்டிலுள்ளவர்கள், விருந்தாளிகளையும், சிறுவர்களையும், அழைத்துச்சென்று உணவு கொடுத்து பணிவிடை செய்கின்றனர்.

அந்த வீட்டிலுள்ள முக்கியமான அறைகளுக்கு அழைத்து சென்று பொருள்கூறுபவர் அங்கே காணப்படுவைகளின் அர்த்தத்தை விளக்கி கூறுகிறார். கிறிஸ்டியானாவின் கணவர் கிறிஸ்டியானை ஏற்கனவே, இந்த அறைகளுக்கு, பொருள்கூறுபவர் எடுத்து சென்றிரிக்கிறார். அங்கே கூண்டில் அடைக்கப்பட்ட மனிதன், கனவு காணும் மனிதன், தனது விரோதிகளை வெட்டி வீழ்த்தி சென்ற ஆயுதம் தரித்த மனிதன், கைகளில் புத்தகம் ஏந்திய முதிர்வாய்ந்த மனிதன் ஆகிய எல்லோரையும் காண்பிக்கிறார். கிறிஸ்டியானுக்கு காண்பிக்காத வேறு முக்கிய அறைகளையும், இந்த பெண்களின் குழுவுக்கு பொருள்கூறுபவர் காண்பிக்கிறார். கற்றுக்கொள்ளும் பாடம் இந்த வீடு ஒரு உள்ளூர் சபையை (local church) குறிக்கிறது. இது ஓர் இரவு தங்கும் சத்திரத்திற்கு ஒப்பாகயிருக்கிறது. இது நிரந்தரமான இடம் கிடையாது. மோட்சப்பட்டணத்தை நோக்கிப்போகும் வழிப்போக்கர்களுக்கு பரலோக ராஜாவால் கட்டப்பட்ட ஒரு மாளிகை! இங்கே மோட்சப்பயணிகளின் சரித்திர புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. பெண்களுக்கென்று ஒரு தனியான ஊழியம் இருக்கிறது. கிறிஸ்டியானுக்கு காண்பிக்காத வேறு முக்கிய அறைகளை இந்த பெண்களின் குழுவுக்கு பொருள்கூறுபவர் காண்பிக்கிறார். சபையின் முக்கிய ஊழியம் பணிவிடை செய்வதுதான். பின்பு வேதத்தின் மகிமைகளையும், புரிந்துகொள்ளமுடியாத பொருட்களுக்கு அர்த்தம் விளக்கி கூறுவதுதான். உவமானங்கள் (Parables) மூலம் மக்கள் புரிந்துகொள்ளும்படி போதனை நடக்கிறது. இங்கே ஒரு பிரசங்க மேடை கிடையாது. இன்றைக்குள்ள சபைகளில் பணிவிடைகளோ, அன்பின் விருந்துக்களோ கிடையாது. சில சபைகளில் மாத்திரம் அன்பின் விருந்துகள் நடைபெறுகிறது. சபையில் தோன்றுவது ஒரு பிரசங்க மேடைதான். சில வீட்டு சபைகளில், உட்கார இடம் இல்லாவிட்டாலும், ஒரு பிரசங்க மேடை காணப்படுகிறது. இன்று நமது சபைகளில் பரிசுத்தவான்களின் சரித்திரங்களை பற்றி உபதேசங்கள் கிடையாது. விசுவாசத்திற்காக தங்கள் உயிர்களைத் துறந்த பரிசுத்தவான்களின் (Martyrs) ஜீவ சரித்திரங்களை சபைகளில் போதிக்கவேண்டும்.

தொடர்ந்து படிக்க..... குப்பைவாரியுடன் ஒரு மனிதன்