"முடிவை விரும்புவன்" என்ற பயணியுடன்

Previous.....உண்மையானவின் ரத்த சாட்சி

கிறிஸ்டியானும் நம்பிக்கையும் "முடிவை விரும்புவன்" என்ற பயணியுடன்

உண்மையானவன் மரித்தபின்பு, கிறிஸ்டியானும் நம்பிக்கையும் (Hopeful) மாயசந்தையை விட்டு வெளியேறினவுடன் ஒரு மனிதனை சந்திக்கிறார்கள், அவனது பெயர் "முடிவை விரும்புவன்" (By-ends). இந்த மனிதன் கிறிஸ்துவத்தை தன் சொந்த காரியங்களுக்காகவும் சமூகத்தின் மூலமாக வரும் லாபத்திற்காகவும் உபயோகப்படுத்துபவன். தேவனுக்கு சேவை செய்ய, இவன் காற்றிற்காவும் அலைக்காவுக்கும் காத்து இருப்பவன். சமயம் வாய்க்கும்போது தான் தேவனுக்கு ஊழியம் செய்பவன்.இவன் தான் ஒரு நல்ல மயக்கும் பேச்சுக்கள் நிறைந்த ஊரிலிருந்து ( Town of Fair-speech) வந்ததாகவும், இப்போது மோட்சப்பட்டணத்தை நோக்கிப்போவதாகவும் தெரிவிக்கிறான். இந்த மனிதனோடு உரையாடல் நடத்தும்போது இந்த பட்டணமாவது செல்வந்தர்கள் வாழும் இடம் என்று அறியவருகிறது. மேலும் அவனை வழிநடத்தியவர்கள் (Lord Turn – about) பின் திரும்பும் ஆண்டவன், (Lord Time-server) நேர சேவையகத்தின் ஆண்டவன், (Lord Fair-speech) பேச்சு திறமையின் ஆண்டவன் என்பவர்களாகும்.

கிறிஸ்டியானும் நம்பிக்கையும் இந்த மனிதனை (By ends) புறக்கணித்தவுடன் இவனை மூன்று மனிதர்கள் பின்தொடர்ந்து இவனுக்கு மட்டமான கஞ்சியைக்கொடுத்து பரிசளித்தனர். அவர்கள் (Mr.Hold-the-world), “உலகதைப்பிடித்துக்கொள்”, (Mr Money-love) “பண ஆசை”, (Mr Save-all) "எல்லாவற்றையும் சேமிக்கவும்” என்பவர்களாகும். இவன் கிறிஸ்டியானையும், நம்பிக்கையையும் தனக்கு துணையாக ஏற்றுக்கொள்ளாமல், இந்த மூன்று மனிதர்களையும் துணையாக தெரிந்துக்கொண்டான்.

முடிவை விரும்புவனின் (By ends) "கிறிஸ்தவம்" என்னவென்றால் சூரிய வெளிச்சத்தில் தங்க செருப்புக்களை அணிந்து நடக்கும்போது அதை விரும்புவதாகவும், எப்போது அது கந்தல் உடையணிந்து நடக்குகிறதோ அதை வெறுப்பதாகவும் கூறினான். தனது சொத்துக்களையும் தனது ஜீவனையும் காப்பாற்றுவதற்காகத்தான் அவன் கிறிஸ்தவத்தை விரும்புகிறான். தனக்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தை உபயோகித்து பணம் சேமித்து சொத்துக்கள் வாங்குவதோ அவன் வாழ்வின் குறிக்கோள். அதனால்தான் அவனுக்கு முடிவை விரும்புவன்" (By-ends) என்ற புனைப்பெயர் அருளப்பட்டிருக்கிறது.

இவன் ஒரு பாசாங்குக்காரன். உண்மையான சீடன் இல்லை. தனது இருதயத்திலுள்ள சொந்த ஆசைகளைப் பின்பற்றி தனக்கு ஆதாயத்தை தேடுகிறவன். இவனது குறிக்கோளானது கிறிஸ்துவின் ஜீவனை பெறுவது அல்ல. கிறிஸ்துவை தனக்கு ஆதாயமாக உபயோகித்து தனது சொந்த காரியங்களின் முடிவை தேடுவது! இவன் ஒழுங்காக ஆலயத்திற்குப்போனாலும் கிறிஸ்துவின் சிலுவைக்கும் இவனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

பண ஆசையின் குணங்கள்

"பண ஆசை" பணத்தை நேசிப்பவன். பணமே முடிவு என்று கருதுபவன். அவன் இவ்விதமாக எண்ணுகிறான்.அவைகளாவது - "அவன் செல்வந்தனாக இருந்தாலும் தான் மோசமாகவே ஆடையணிந்துக்கொள்கிறான். ஒரு ஊழியன் தேவ அருளால் தனக்கு ஆதாயம் வரும்போது அதை தேடுவது சட்டத்திற்குற்பட்டது. தனது மன சாட்சியைக் கண்டுக்கொள்ளாமல் அதை பெறலாம். இந்த ஆதாயம் அவனை அறிவுத் தாகமுள்ளவனாகவும் ஆர்வமுள்ள பிரசங்கியாகவும் மாற்றுகிறது. அதனால் அவன் தேவனுக்கு ஏற்றபடி ஒரு நல்ல மனிதனாக காட்சியளிக்கிறான். இவ்விதமாக ஊழியத்திற்கு தகுதியுள்ளவனாக காட்சியளிக்கிறான். அந்த ஊழியன் பெரிய ஆதாயத்திற்கு தன்னை சிறிது மாற்றிக்கொள்ளும்போது அவன் பணத்தை இச்சிக்கும் மனிதன் என்று கருதக்கூடாது. தான் தனது கிடைத்த சந்தர்ப்பங்களை வீணாக்காமல் சொந்த திறமையினால் முன்னேறிக்கொள்வதால் அவன் ஒரு நல்ல ஊழியன் என்று போற்றப்படுவான்".“உலகதைப்பிடித்துக்கொள்” என்பதின் குணங்கள் :

சூரியன் கதிர் வீசும்போதே வைக்கோல் உண்டுபண்ணவேண்டும். சர்ப்பதைப்போல வினாவுள்ளதாக இருக்கவேண்டும்; தேனீ குளிர் காலத்தில் சும்மா இருந்துக்கொண்டு சந்தர்ப்பம் வரும் காலங்களில் ஆகாரம் தேடுவதை போல கிறிஸ்துவத்தை உபயோகப்படுத்த வேண்டும். நமக்கு இந்த உலகத்தில் நல்ல ஆசீர்வாதங்களை ஆண்டவர் வைத்திருப்பதால் அவைகளை நாம் அனுபவிக்கவேண்டும். ஆபிரகாம் சாலமோன் செல்வந்தர்களாக வாழ்ந்தார்கள். யோபு கூறினதாவது," தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்து வைப்பீர்" (யோபு 22:24).

இவர்களுக்கு வாத்தியாராக இருந்து எப்படி இச்சித்து பணம், சொத்துக்கள் சம்பாதிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்தது “வலுப்பிடியாக பிடிக்கும் மனிதன்” (Gripeman) என்பவராகும். இவர்கள் கிறிஸ்துவை வைத்து எப்படி ஆதாயம் தேடலாம் என்று இந்த வாத்தியார் இந்த நான்கு மனிதர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறார். இவர்கள் ஆலயங்களில் போய் தேவனை தாழ்மையோடு ஆராதித்து தங்கள் ஜீவனை தேவனுக்கு உகந்த ஜீவ பலியாக செலுத்த கற்றுக்கொடுக்கப்படாமல், கிறிஸ்துவை வைத்து எப்படி தங்கள் சொந்த தேவைகளை பூர்த்தி செய்யலாம் என்று இவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

முடிவை விரும்புவன் (By-ends) தன்னை மோட்சப்பயணி என்று கருதியபோதும் கிறிஸ்டியான், நம்பிக்கை இவர்களிடமிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, தனது புது நண்பர்களோடு உறவு வைத்துக்கொள்கிறான். கிறிஸ்டியான், நம்பிக்கை இருவரையும் சொந்தக்கார்கள் என்றோ, அண்டைவீட்டார்கள் என்றோ, சகோதர்கள் என்றோ அழைக்காமல் தூர தேசத்தார்கள் என்றே அழைக்கிறான். அவன் இவர்களுக்கு விரோதமாக அவனுக்கு அநேக முறையீடுகள் செய்கிறான். தனது சரியான கொள்கைகளை இந்த இருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று இவனுக்கு சிறிய மனவருத்தம். முடிவை விரும்புவனின் புது நண்பர்களோ இவனோடு ஒத்துப்போகிறார்கள்.

எல்லாவற்றையும் சேமிக்கவும் குணங்கள்:

எல்லாவற்றையும் சேமித்து சொத்துக்கள், விலையுயர்ந்த கார்கள், உல்லாசமான பங்களாக்கள், ஊழியத்திற்கென்று அடுக்கடுக்கான கட்டிடங்கள் வாங்கி ஏழை விசுவாசிகளுக்கோ, விதவைகளுக்கோ தங்களின் வருமானத்திலிருந்து கொடுப்பதுமில்லை.

கற்றுக்கொள்ளும் பாடம்

இன்று அநேக கிறிஸ்தவர்கள் முடிவை விரும்புவன் (By Ends) போல தங்களுக்குக் கிறிஸ்துவின் மூலமாக என்ன ஆதாயங்கள் கிடைக்கும் என்று அங்கும் இங்கும் ஓடித்திரிகிறார்கள். முடிவை விரும்புவன் வேதத்தை ஒரு கோணலாக போதிக்கிறான். இன்றும் இதேபோல வேதத்தை ஒரே கோணத்தில் விசுவாசித்து இயேசுவின் சீடர்களாகாமல் அவரின் அற்புதத்திற்காகவும், சுகமளிப்பிற்காகவும் வேதத்தை சரியாக அறியாமல் வெறுமனே தங்களது முடிவை மாத்திரம் விரும்புகிறார்கள்.

இன்று நாம் சமயம் வாய்த்தால் தான் ஊழியம் செய்வோம். காற்று எப்போது அடிக்கிறதோ அப்போது தான் படகை ஓட்டுவோம். அலைகள் எங்கே படகை இழுத்துச்செல்கிறதோ அங்கே தான் போவோம். எந்த ஊழியரிடத்தில் போனால் நமக்கு ஆசிர்வாதங்கள் அல்லது ஆதாயம் கிடைக்கும் என்று கருதி அந்த சபையை நோக்கி ஓடிப்போவோம். வீட்டின் அருகேயுள்ள அறிமுகம் இல்லாத போதகருடன் சபைக்குப்போய் அவருக்கு உதவி செய்து உற்சாகப்படுத்தமாட்டோம். ஒரு ஏழை சபை போதகரின் சபைக்குப் போய் அவருக்கு உதவமாட்டோம். எங்கே போனால் தீர்க்கதரிசனகள் கிடைக்கும் என்று அந்த சபை கூட்டங்களுக்குத் தான் போவோம். "என்னை சுவிசேடகர் பெயர் சொல்லியழைத்து எனக்கு தீர்க்கதரிசனம் கூறமாட்டாரோ" என்று ஏங்கி அந்த கூட்டத்தில் போய் முதல் வரிசையில் சிலர் அமர்கிறார்கள்.

இவர்கள் தேவனுக்காக எந்தவிதமான தியாகமும் செய்ய முற்படாமல் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் தங்களின் வாழ்க்கையும் சொத்தையும் காத்துக்கொள்ள எல்லா உபாயங்களையும் தந்திரங்களையும் கையாளுகிறார்கள்.

உலகத்தின் பொக்கிஷங்கள், வல்லமை, இன்பங்கள், ஆதாயம் என்பவைகளை எவ்விதம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கலையை தங்களின் குருவான கிரைப்மேனிடமிருந்து (Gripeman) கற்றுக்கொள்கிறார்கள். இவைகளை பெற்றுக்கொள்ளும்படி, பொய், முகத்துதி, ஏமாற்றுதல், வன்முறை போன்ற காரியங்களைக் கடைபிடிக்கும்படி கற்றுக்கொள்கிறார்கள். இந்த உலகத்தின் பொக்கிஷங்களைப் பரலோகத்தின் பொக்கிஷங்களைக் காட்டிலும் விரும்பி, இவர்கள் ஆலயங்களுக்கு ஒழுங்காக செல்கிறார்கள். இவர்கள் சபையை மதித்தாலும், இதை ஒரு தாழ்மையுடன் ஆராதிக்கும் இடம் என்றோ ஒரு பலிசெலுத்தும் இடம் என்றோ கருதுவது கிடையாது. சபையை ஒரு ஆதாயம் கிடைக்கப்பண்ணும் இடம் என்று கருதி, மனித தொடர்புகளை இங்கே உண்டுபண்ணிக்கொள்கிறார்கள். சபையில் மனிதர்களின் நம்பிக்கையை பெற விரும்புகிறார்கள். சபையில் தங்களுக்கு உலகத்தில் வாழுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்படி சபையை உபயோகித்துக்கொள்கிறார்கள்.

ஆபிரகாம் சாலமோன் போல செல்வந்தர்களாக ஆக வேண்டுமென்று தப்பான போதனை கேட்டு அந்த சபை கூட்டங்களுக்குப்போவது, எந்தந்த சபைகளில் கூட்டங்களில் போனால் வாக்குத்தத்தங்கள் கிடைக்குமென்று அலைமோதி ஓடுவது!

உலகதைப்பிடித்துக்கொள் (Hold-the-world) தனது கொள்கையை சர்ப்பங்கள் (serpents) தேனீக்கள், சூரியஒளி, குளிர்காலம் போன்ற உதாரணங்களிலிருந்து எடுத்துக்கொள்கிறான். வேதவசனைகளை கூட quote பண்ண (குறிப்பிட) தயங்கமாட்டான். ஆபிரகாம், சாலமோன், யோபு, போன்றவர்களை சம்பந்தமே இல்லாமல் உதாரணங்களாக காண்பிக்கத் தயங்கமாட்டான்.

இவர்கள் ஆலயங்களுக்கு போவதும் ஆதாயத்தைத்தேடித் தான்! கிறிஸ்துவை தனிப்பட்ட முறையில் அறியாமலே, தங்களுக்கு இருதயத்திற்கு ஏற்ற Gripe Man போன்ற போதகர்களையும், சுவிசேடகர்களையும் நாடிச் செல்கிறார்கள். இவர்களின் மூன்று நண்பர்கள் (Mr.Hold-the-world), “உலகதைப்பிடித்துக்கொள்”, (Mr Money-love) “பண ஆசை”, (Mr Save-all)”எல்லாவற்றையும் சேமிக்கவும்” என்பவர்களாகும்.

இவர்கள் ஒரு நல்ல மயக்கும் பேச்சுக்கள் நிறைந்த (Town of Fair-speech) ஊரை சேந்தவர்கள். இப்போது மோட்சப்பட்டணத்தை நோக்கிப்போவதாகவும் கூறுகிறார்கள். இவர்கள் உலக்கையில் கைவைத்து பின்னோக்கிப்பார்ப்பவர்கள். தங்கள் சமயங்களை இம்மைக்காகத்தான் செலவிடுகிறார்கள். இவர்கள், பேச்சுத் திறனுள்ள உபதேசிகளுக்கு (orators) செவிக்கொடுத்து, சத்திய ஆவியானவருக்கு செவிக்கொடுக்க மறுக்கினர்.

தேவமக்களிடமிருந்து காணிக்கைகள் வாங்கி அவைகளை சேமித்து தங்களது ராஜ்ஜியங்களை கட்டி வேத வாசனைகளை ஒரு கோணத்தில் (from one angle) பிரசங்கம் செய்து சொந்த ஆதாயங்களைத் தேடும் எந்த ஊழியனும் முடிவை விரும்புவன் (By Ends) போலானவன்!

Next.... கிறிஸ்தவமும் உலக ஆதாயமும்