உண்மையானவின் ரத்த சாட்சி

Previous....மாயாபுரியில் பயணிகள்

உண்மையானவின் ரத்த சாட்சி


மாயாபுரியில், முதலில் உண்மையானவனையும் கிறிஸ்தியானையும் பிரம்பினால் அடித்து சங்கிலியால் கட்டுங்கள் என்று மாயாபுரியின் தலைவன் கட்டடையிட்டான். அப்படியே செய்யப்பட்டது!

கிறிஸ்தியானும் உண்மையானவனும் மிகவும் அடக்கத்துடன் அனைத்தையும் சகித்துக் கொள்வதைப் பார்த்தவுடன் அனைத்தையும் சகித்துக் கொள்ளவதைப் பார்த்தவுடன் கூட்டத்தில் சிலர் அவர்கள் மீது இரக்கப்பட்டு அவர்களை விடுதலை செய்யும்படி கோரினார்கள்! இதைக் கண்ட எதிர்த்தரப்பினர் அவர்களைக் கண்டிப்பாக்கக் கொன்றுபோட வேண்டும் என்று கூச்சலிடத் துவங்கிவிட்டார்கள். எனவே தலைவன் அவர்களை நீதிபதியிடம் அனுப்பினான்.நன்மையை வெறுப்பவன் என்பவன்தான் நீதிபதி! இவர்கள் வியாபாரம் செய்வதைத் தடுக்கிறார்கள். அமைதியைக் குலைத்துவிட்டார்கள். நகரத்திலுள்ளவர்களை இரு பிரிவினராகப் பிரித்துவிட்டார்கள். இவை நமது இளவரசரின் சட்டங்களுக்குப் புறம்பானவை என்று அவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டது!

உடனே உண்மையானவன் எழுந்து, நாங்கள் எல்லாவற்றிற்க்கும் மேலான ஆண்டவருடைய சட்டங்களுக்குத்தான் கீழ்படிவோம். நீங்கள் சொல்லும் இளவரசன் சாத்தான். அவன் எங்கள் ஆண்டவருக்கு எதிரியானவன். அவனையும் அவனுடைய பிசாசுக் கூட்டத்தினரையும் நாங்கள் வெறுக்கிறோம் என்று மனத்திடத்தோடு கூறினான். உடனே கூடியிருந்தவர்கள் இன்னும் அதிக ஆத்திரத்தோடு கத்தத் துவங்கிவிட்டார்கள்

பொறாமை, மூடநம்பிக்கை, புகழ்விரும்பி என்ற மூவரும் அவர்களுக்கு விரோதமாகச் சாட்சிகூற எழும்பினார்கள். கிறிஸ்தவ சமயம் இந்தக் கண்காட்சியின் வழக்கத்துக்கு விரோதமானது என்று கூறி தங்கள் விற்பனையைத் தடுத்ததாகக் குற்றம் சாட்டினார்கள்.

உண்மையானவன் எழுந்து ஆண்டவருடைய வார்த்தைக்கு விரோதமானவை அனைத்தும் கிறிஸ்துவுக்கு விரோதமானவை என்றுதான் நான் கூறினேன். சுhத்தானும் அவனுடைய கட்டளைகளும் நரகத்துக்குத் தான் ஏற்றவை. அவை நமக்கு ஏற்றவை அல்ல என்று கூறியவுடன் மீண்டும் பெரிய கூக்குரல் கேட்டது!

அவனுக்குக் கொலைத் தண்டனை அளிக்க வேண்டும் என்று கத்தினார்கள் அநேகர்!

நன்மையை வெறுப்பவன் என்ற நீதிபதி உண்மையானவனுக்கு மரண தண்டனை அளித்துத் தீர்ப்புக் கூறி விட்டான்.

காவலாளிகள் உண்மையானவனைச் சாட்டையினால் அடித்தார்கள்! கூடியிருந்தவர்கள் அவன்மீது கற்களை எறிந்தார்கள்! சிலர் வாளினால் அவன் உடலைத் துளைத்தார்கள்! இவ்வாறு சித்தரவதை செய்தபின்பு ஒரு கம்பத்தில் அவனைக் கட்டி நெருப்பு மூட்டிவிட்டார்கள்! உண்மையானவன் ஆண்டவரைத் துதித்தபடியே உயிரை விட்டான்.

உடன்தானே அவன் ஒரு பறக்கும் இரதத்தில் ஏற்றப்பட்டு நேரடியாக மோட்சத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதை நான் என் கனவில் கண்டேன்.

கிறிஸ்தியான் சிறையில் அடைக்கப்பட்டான்! ஆனால் சில நாட்களுக்குள்ளாக அவன் தப்பிச் செல்வதற்க்கு ஆண்டவர் கிருபை செய்தார்!

கிறிஸ்தியான் மாயாபுரியைவிட்டு வெளியேறும்போது நம்பிக்கை என்ற பெயரையுடைய ஒருவன் அவனுடன் வந்து சேர்ந்துகொண்டான். கிறிஸ்தியான், உண்மையானவன் இவர்களுடைய திட விசுவாசத்தைக் கண்டு மனம் திரும்பியவன் அவன்! இருவருமாக மோட்சத்தை நோக்கித் தங்கள் பயணத்தைக் தொடர்ந்தார்கள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

இன்று உண்மையாக சத்தியத்தை அறிவிக்கும் தேவதாசர்களுக்கு உபத்திரவம் அந்திக்கிறிஸ்துவின் ஆவியிடமிருந்துதான் வருகிறது. விழுந்து போன ஊழியர்களை அந்திக்கிறிஸ்து தன்னண்டை வைத்துக்கொள்கிறான். ஆனால் தேவனின் மகாபெரிய கிருபையினாலும், இரக்கத்தினாலும், அறிந்துகொள்ளமுடியாத தேவ ஞானத்தாலும் சுவிசேஷம் இவர்களின் அமைப்புகளின் மூலம் அறிவிக்கப்படுகிறது. அற்புதங்களினால் மக்கள் தொடப்படுகிறார்கள். இதற்கு காரணம் இந்த அமைப்புகளில் உண்மையாக பணி புரியும் ஆயிரக்கணக்கான, தங்கள் பெயர்கள் வெளிவராமல் தேவ ஊழியம் செய்யும் கிறிஸ்துவின் சரீரத்தில் மறைந்து இருப்பவர்களே! இவர்களை நாம் மறக்கக் கூடாது.

இந்த விழுந்து போன ஊழியர்களுக்கு நாம் பாரத்தோடு ஜெபிப்போமாக! அவர்களை எச்சரிப்பும் செய்வோமாக!

"காவலாளிகள் உண்மையானவனைச் சாட்டையினால் அடித்தார்கள்! கூடியிருந்தவர்கள் அவன்மீது கற்களை எறிந்தார்கள்! சிலர் வாளினால் அவன் உடலைத் துளைத்தார்கள்! இவ்வாறு சித்தரவதை செய்தபின்பு ஒரு கம்பத்தில் அவனைக் கட்டி நெருப்பு மூட்டிவிட்டார்கள்! உண்மையானவன் ஆண்டவரைத் துதித்தபடியே உயிரை விட்டான...."

சரீரப்பிரகாரமாக, இன்றுள்ள உண்மையாவனவர்களுக்கு உபத்திரவம் வராது. ஆனால் அவர்களைப் புரிந்து கொள்ளாமல் வேதத்தை சரியாக படித்து சத்தியத்தை அறிந்து கொள்ளாதவர்கள் கற்களை எறிவார்கள். கற்கள் என்றால் குற்றச்சாட்டுக்கள். இந்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதும் நியாத்தீர்ப்பை அளிப்பதும் ஒரு வெளிரங்கமாக இருக்கும். இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் மனிதர்கள் அப்போஸ்தலர்களோ அல்லது தீர்க்கத்தரசிகளோ அல்ல. இவர்கள் சத்தியத்தை அறியாத போதகர்கள். இவர்கள், எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிற ஆவிக்குரியவர்கள் அல்ல. ஜென்மசுபாவமான மனிதர்கள்!

" ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.

ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். (I கொரிந்தியர் 2 :14-15).

இவர்கள் உபயோகிக்கும் வார்த்தை இதுதான். "Judge Not" . "மற்றவர்களை நியாயம் தீர்க்காதே" என்று சொல்வார்கள். நாம் பகுத்தறிந்து சத்தியத்தை அறிந்துகொள்ள விரும்ப மாட்டார்கள்.

நமக்கு கொடுக்கப்பட்ட அளவுகோலை எடுத்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்து பார்க்கலாம். அந்நிய ஜாதி மக்களை அல்ல, கிறிஸ்தவ சபைகளையும் அங்கே நடக்கும் ஊழியங்களையும், இயேசுவின் நாமத்தில் நடத்தப்படும் எல்லா காரியங்களையும் அளந்து பார்க்கலாம். பலிபீடத்தில் வைக்கும் காணிக்கைகளையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்து பார்க்கலாம் (வெளி. 11 :1-2).

அநேக ஆண்டுகளுக்கு முன்னர் நான் அநேக தீர்க்கதரிசன சொப்பனங்ளை (space)வியாக்கினம் செய்து வெளியிட்டேன். அதில் சில வெளிப்படுத்தல்களின் மூலம், தீர்க்கதரிசன குழந்தைகளை எவ்விதம் அந்திகிறிஸ்து அழிக்கிறான் என்றுகுறிப்பிட்டிருக்கிறேன்.

வேறு ஒரு வெளிப்படுத்தலில் , 2005 ம் ஆண்டில், ஒரு வெளிநாட்டு சகோதரி காணும் தரிசனத்தில் ஒரு பிறந்த ஆண் குழந்தையை பரிசுத்தாவியானவர் காண்பிக்கிறார். அவற்றின் தொப்புள் கொடி அறுக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும்

சுருங்கவில்லை; அந்த குழந்தை ஆரோக்கியத்துடன் பிறந்திருந்தாலும் அதின் தோல் உரிந்துகொண்டிருந்தது. அந்த குழந்தையை அங்கேயுள்ள பெண்கள் கவனம்செலுத்தி பராமரித்தல் செய்யாததால் அந்த குழந்தை மரிக்கும் தருவாயில் வருகிறது. உடனே இந்த தரிசனத்தைக் கண்ட சகோதரி அங்கேயுள்ள ஒரு பெண்ணை அழைத்து இந்த குழந்தையை ஊட்டும்படியாவுகம், அதற்கு ஒரு தொட்டில் உண்டுபண்ணும்படியாவும் கட்டளை இடுகிறார். பின்பு இந்த சகோதரி அந்த குழந்தையை கைகளில் எடுத்து அதன் நாசியில் தன் வாயை வைத்து சுவாசத்தை (space) ஊதி உயிர் கொடுக்கிறாள்.

இதன் அர்த்தம் இவ்வருமாறு. "பெண்கள்" என்பது தாயைப்போல இளம் விசுவாசிகளை ஆத்மீக ஆகாரமும் ஆவிக்குரிய பாலும் கொடுத்து வளர்க்கும்

சபைபோதகர்களாகும். இந்த பிறந்த குழந்தையின் மேல் அக்கறை காட்டாததால், இந்தகுழந்தை மரிக்கும் தருவாயில் வந்தது. இந்த ஆண் குழந்தை, ஒரு தீர்க்கதரிசனகுழந்தையாகும். இந்த தீர்க்கதரிசன குழந்தை வளர்வது ஒரு சபையில்தான். சபையில்தான் அதற்கு ஒரு தொட்டிலும் (bed), ஆவிக்குரிய உணவும் கொடுக்கப்படவேண்டும். தீர்க்கதரிசிகள் நமது குறைகளை உணர்த்தி, வேதத்திற்கு முரணான வாழ்க்கையை கண்டித்து, நம்மை ஆவிக்குரிய வாழ்க்கையில் பூரணராகும்படி வழி நடத்துகிறார்கள். இவர்கள் சபையில் தேவ வசனத்திற்கு மாறாக நடக்கும் காரியங்களை சுட்டிக்காட்டும் போது சபை போதகர்கள் தாழ்மையாக அவர்களது எச்சரிப்பை ஏற்றுக்கொண்டு, அவர்களை உற்சாகப்படுத்தவேண்டும். அந்த குழந்தைகள் வளரும்படி தொட்டில்கள் கொடுக்கப்படவேண்டும். அவர்களை சபை போதகர்கள் அங்கீகரிக்காமல் போனால், அவர்களின் தீர்க்கதரிசன ஆவி அவிந்துபோகும். நாளடைவில் அவர்கள் தங்களின் ஆத்மீக ஊழியத்தில் மரணமடைந்து போவார்கள். இந்த குழந்தைகளுக்கு குறைவுகள் இருக்கலாம். பூரணமானவர்கள் அல்ல. ஆனாலும், அவர்கள் வளர்வதற்கு சபைகளில் சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படவேண்டும். இல்லாவிடில் அவர்கள் சபைகளை விட்டு விலகி தனியாக ஊழியம் செய்வார்கள். இது நல்லதல்ல.

Next....கிறிஸ்டியானும் நம்பிக்கையும் முடிவை விரும்புவன் என்ற பயணியுடன்