நுழைவு வாசலில் பிரவேசிப்பு

Home

முந்திய பகுதி - கிறிஸ்டினா நுழைவு வாசலில்

நுழைவு வாசலில் பிரவேசிப்பு

கிறிஸ்டியானா தனது பிள்ளைகளோடும், மேர்சியுடனும் (Mercy), நுழை வாசலில் நுழையும் போது அங்கேயுள்ள காவலாளி (கேட் கீப்பர்) அவர்களை வரவேற்கிறார். அப்போது அங்கே ஒரு நாய் வந்து, அவர்களை பார்த்து குலைக்கிறது. அப்போது காவலாளி அவர்களை நோக்கி, "இந்த நாயின் சொந்தக்காரன் அருகிலுள்ள கோட்டையில் வசிக்கிறான். இந்த நாய் நுழை வாசலின் அருகே மாத்திரம் வரும். பரதேசிகளை பயமுறுத்துவதற்காகவே அது இங்கே வருகிறது" என்று உரைக்கிறான். மேர்சி பயந்துபோய் மயக்கம் போட்டு விழ, காவலாளியிடம் உள்ளே விடும்படி அவளுக்காக கிறிஸ்டியானா வேண்டிக்கொள்கிறாள். உடனே காவலாளி மேர்சியின் கையைப்பிடித்து உள்ளே இழுத்துக்கொள்கிறார். கற்றுக்கொள்ளும் பாடம் பெண்கள் பயந்த சுபாவத்தை உடையவர்கள். அவர்கள் பெலவீன மண்பாண்டங்களாகும். அவர்களை கிறிஸ்துவாகிய நுழைவு வாசலுக்குள் பிரவேசிக்கப்பண்ணும்படி, அவர்களுக்கென்று ஒரு தனியான ஊழியம் உண்டு. ஜான் பண்ணியன் கிறிஸ்டியானாவை, மோட்ச பாதையில் வேறு விதமாக நடத்துகிறார்.

கிறிஸ்டியானா தனது தோழிக்காக பரிந்து பேசுகிறாள். பரிந்துபேசும் ஊழியம் மிகவும் அவசியம்.

இந்த நாயானது சாத்தான் அனுப்பும் ஒரு பொல்லாத ஆவிதான். இது ஒரு பயமுறுத்தும் ஆவி. குலைப்பதை தவிர வேறு ஒன்றும் செய்யாது. இந்த குலைக்கும் நாயை பார்த்து அநேக பெண்கள் பின்வாங்கிப் போயிருக்கிறார்கள். நாம் இந்த ஆவிகளை ஜெபித்து துரத்தவேண்டும்.

தொடர்ந்து படிக்க .... இரண்டு கெட்ட மனிதர்கள்