இளைப்பாறும் ஸ்தலம்

Home

முந்திய பகுதி......பெரிய இருதயம் (கிரேட் ஹார்ட்)

இளைப்பாறும் ஸ்தலம் (Arbor)

பெரிய இருதயம் (கிரேட் ஹார்ட்) பயணிகளை எந்த இடத்தில் கிறிஸ்டியானின் இளைப்பாறச் சென்று அங்கே உறங்கி சுருளை மறந்துபோனானோ அங்கே அழைத்து சென்று காண்பிக்கிறார். கிரேட் ஹார்ட் பயணிகள் இந்த இடத்தில் உறங்காமல் காத்துக்கொள்ளவேண்டும் என்று எச்சரிக்கிறார். அந்த இளைப்பாறும் ஸ்தலத்தில் கிறிஸ்டியானா எல்லாருக்கும் தன்னிடம் பொருள்கூறுபவர் கொடுத்த உணவுகளை பகிர்ந்துக் கொடுக்கிறாள். மாதுளை பழம், தேன்கூடு, திராட்சை ரசம் போன்ற சத்தூட்டமுள்ள உணவை அவர்கள் உட்கொண்டு சரீர பலம் அடைகிறார்கள். கற்றுக்கொள்ளும் பாடம்

ஒரு தேவ தாயின் கடமையானது தனது குடும்பத்தாருக்கு நல்ல சத்தூட்டமுள்ள உணவுகளை (dietary food) அளிக்கவேண்டும். மாதுளை பழம், தேன்கூடு, திராட்சை ரசம் முதலான உணவுகளைக் கொடுக்கவேண்டும். தேவன் அமைத்த இளைப்பாறும் ஸ்தலத்தில், கண்டிப்பாக மோட்சப் பயணிகள் இளைப்பாற வேண்டும். இளைப்பாறுதல் (Vacation) மிகவும் அவசியம். பரலோக ராஜா இந்த உலகத்தில் அளித்த ஆசீர்வாதங்களை அளவோடு அனுபவிக்க வேண்டும். ஆனால், இந்த இடத்தில் தேவனை மறந்து ஆத்மீக வாழ்க்கையில் உறங்கிவிடக்கூடாது. "நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது..." என்று மணவாட்டி மணவாளனுக்காக ஆத்துமாவில் விழித்திருக்கிறாள் (உன்னதப்பாட்டு 5:3).

தொடர்ந்து படிக்க........பயம் விளைவிக்கும் கடுமையான அரக்கன்