அழகிய குமாரத்தியின் பணிகள்

அழகிய குமாரத்தியின் பணிகளும் பொருள்கூறுவோரின் பணிகளும்

இரவு நீங்கி காலையானபோது, பொருள்கூறுபவர், அழகிய குமாரத்தியிடம் மோட்ச பயணிகளை தோட்டத்திலுள்ள தண்ணீர் தொட்டியில் கொண்டுபோய், பிரயாணத்தில் அவர்களின் மாசடைந்த சரீரங்களை கழுவும்படியாகவும் அவர்களின் நெற்றிக்களில் ஒரு முத்திரை (Seal) பதிக்கவும் உத்தரவு கொடுக்கிறார். எல்லாரும் தண்ணீரில் மூழ்கி தங்களது பாவங்களை கழுவி அடையாளமாக இந்த முத்திரையை பெற்றுகொண்டனர். இஸ்ரவேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறும்போது சங்காரக்காரனால் அழிக்கப்படாமல் அவர்களது வீட்டின் கதவுகளில் ஆட்டின் இரத்தத்தினால் ஒரு முத்திரை பதிக்கப்பட்டது. அதேபோல, இது ஒரு பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்ட அடையாளத்தின் முத்திரை என்று பொருள்கூறுபவர் கூறுகிறார். இந்த முத்திரை பதித்தபின், பொருள்கூறுபவர் அழகிய குமாரத்தியை அழைத்து ஆடைகளை வைப்பதற்கான அறையில் போய், வெண்ணிற ஆடைகளைக் கொண்டுவந்து, மோட்சப்பரதேசிகளுக்கு அணிவிக்கும்படி கட்டளை இடுகிறார். பின்பு பொருள்கூறுபவர் ஒரு தேவ மனிதனை அழைக்கிறார். இவரது பெயர் பெரிய இருதயம் (Great Heart)! மோட்ச பயணிகளை இவரின் கைகளில் ஒப்படைத்து, பத்திரமாக மோட்சப்பட்டணத்தில் கொண்டுபோய் சேர்க்கும்படி கட்டளை இடுகிறார். பெரிய இருதயத்திற்கு, பட்டயமும் கேடகமும் அணுவித்து, தனது குமாரித்திகளையும் பிள்ளைகளையும், மோட்சப்பாதையின் வழியிலுள்ள, அழகிய மாளிகைக்கு (Palace Beautiful) கொண்டுச்செல்லும்படி கட்டளை இடுகிறார்.

கற்றுக்கொள்ளும் பாடம்

அழகிய குமாரத்தி, ஒரு சபை மேய்ப்பனை குறிக்கிறது. இவரின் ஊழியம் ஒரு பணிவிடை செய்யும் முக்கியமான வேலை. இவருக்கு மேலாக, பொருள்கூறுபவர் என்பவர், பயணிகளுக்கு வேதத்தின் மகத்துவங்களை புரிந்துகொள்ளும்படியாக உவமானங்களினால் போதிக்கும் ஒரு ஆவிக்குரிய அனுபவம் பெற்ற முதிய மேய்ப்பன். ஒரு சபையின் இதுபோல இரண்டு விதமான மேய்ப்பர்கள் இருக்கவேண்டும். அழகிய குமாரத்தி பரிசுத்த அலங்காரத்துடன் தன்னை அலங்காரித்து, அன்போடு பணிவிடை செய்யும் ஒரு மேய்ப்பன். இந்த மேய்ப்பனை வழி நடத்துவது, பொருள்கூறுபவரான மூத்த மேய்ப்பர்! அழகிய குமாரியின் பெயர் "அப்பாவி" (இன்னொசென்ட்) (Innocent the Damsel) என்று ஜான் பண்ணியன் கூறுகிறார். ஒரு மேய்ப்பன் உண்மையாகவே ஒரு அப்பாவியாக இருக்கவேண்டும். நயவஞ்சகம், தந்திரம் போன்ற தரங்கள் இல்லாத ஒரு மனிதனாக இவர் விளங்கவேண்டும். ஒரு உள்ளூர் சபையில் மோட்ச பயணிகளை பாவமன்னிப்புக்கு வழிநடத்தி, தண்ணீர் ஞானஸ்தானம் (Water Baptism) கொடுத்து, ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தின் மூலமாக பரிசுத்த ஆடைகளை அணுவித்து, நெற்றிக்களில் பரிசுத்தாவியானவரின் முத்திரைப் பதிக்கப்பட்டு, பயணிகளை மோட்சப் பாதையில் மேலும் வழி நடத்தும் படி, அழகிய மாளிகையிலுள்ள (Palace Beautiful) மற்ற ஊழியர்களிடம் விசுவாசிகளை அனுப்பி வைக்கவேண்டும். அடுத்த இடத்தில் அவர்களுக்கு வேண்டிய போதனைகளும், பயிற்சியும் அளிக்கப்படும். அழகிய மாளிகையில் அளிக்கப்படும், போதனைகளும் பயிற்சியும் வித்தியமானவைகள். முதலாவது காண்பித்த, உள்ளூர் சபையில் இப்படிப்படட விசேஷ ஊழியங்களை காண்பது அரிது.

பெரிய இருதயம் (Great Heart) போன்ற ஊழியர்கள் மிகவும் அவசியம். இவர்கள் தனிப்பட்ட முறையில் பெண்களை அல்லது பலவீனமான பயணிகளை உற்சாகப்படுத்தி, அப்பொல்லியோனின் பிடியிலிருந்து விடுவித்து, சரியான பாதையில் வழி நடத்துபவர்கள்!

தொடர்ந்து படிக்க........பெரிய இருதயம் (கிரேட் ஹார்ட்)