விளக்கவுரை எழுதிய ஆசிரியரின் கருத்து

'மோட்சப்பயணம்' (Pilgrims Progress) நூலை விளக்கவுரை அல்லது வியாக்கியானம் இல்லாமல் புரிந்து கொள்ளமுடியாது. இது வெளிப்படுத்ததலின் புத்தகத்தைப் போல ஒரு allegorical உவமைகள் நிறைந்த நூல். இந்த நூலில் அடங்கியிருப்பது ஜான் பண்ணியன் கண்ட சொப்பனங்கள், தரிசனங்கள் தான்! அவர் கண்ட மனிதர்கள், அரக்கர்கள் (நம்பிக்கையற்றவன் என்ற அரக்கன், பயம் விளைவிக்கும் கடுமையான அரக்கன், நல்லவர்களை அழிக்கும் அரக்கன்) மிருகங்கள், காட்சிகள், எல்லாவற்றிற்கும் பொருள் கூறவேண்டும்.

நான் இந்த விளக்கவுரையை எழுதும்போது, பரிசுத்தாவியானவர் எனது உள்ளத்தில் தெளிவான எண்ணங்களையும், கருத்துக்களையும் கொடுத்தார். நாம் அறியாமலே இந்த பயணத்தை மேற்க்கொண்டிருக்கிறோம். ஜான் பண்ணியன் குறிப்பிட்ட சோதனைகளை, போராட்டங்களை நம்மை அறியாமலே நாம் சந்திக்கிறோம். இரண்டு மாதிரி சபைகளையும், (House of Interpreter) இளைப்பாறும் வீடு & (Palace Beautiful) அழகிய மாளிகை), இரண்டு விதமான தனிப்பட்ட தேவமனிதர்களின் மாதிரி வீடுகளையும் (Gaius & Mnason) அவைகளின் சிறப்புக்களையும், பின்பு கிரேட் ஹார்ட் (Great Heart) போன்ற சிறப்பு ஊழியர்களைப் பற்றியும், நாம் அறிந்துகொள்கிறோம். இதேவிதமான மாதிரி சபைகளும், தனிப்படட தீர்க்கதரிசன ஊழியர்களின் கூடுகைகளும் நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். நாம் இன்று காணும் சபைகளும், ஆவிக்குரிய கூட்டங்களும் தேவ மக்களை சீடர்களாக மாற்றுவதற்கோ, பரிபூரணம் (Perfection) அடைவதற்கோ உதவுவது இல்லை. வெறும் மேடைகளிலிருந்து செய்திகளை அளிக்கும் அரங்கங்களாகவே காட்சியளிக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, எப்சிபா பியூலா தேசத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ளவேண்டும். நாம் இந்த உலகத்தில் இருக்கும்போதே, விசுவாசத்தால், இந்த தேசத்தில் பிரவேசிக்கவேண்டும். இந்த தேசத்திலிருந்து தான் நாம் ஊழியம் செய்யவேண்டும். நாம் வசியம் நிறைந்த பூமியைப்பற்றியும் அந்த பூமியை வசியப்படுத்தும் யேசபேல் என்ற கள்ள தீர்க்கதரிசியை பற்றியும் அவசியம் அறிந்திருக்கவேண்டும்.

கிறிஸ்டியான்தான் அப்பொலியோனோடு யுத்தம் செய்கிறான். ஆனால் அவன் மனைவியோ, Mercy யோ, பிள்ளைகளோ அவனுடன் யுத்தம் செய்யவில்லை.

கள்ள தீர்க்கதரிசகளைப்பற்றியும், கள்ள போதர்களைப்பற்றியும் அநேக இடங்களில் ஜான் பண்ணியன் எழுதியிருக்கிறார். எருசலேம் பட்டயம் (Jerusalem Blade) என்ற பதத்தை இருபுறமும் கருக்குள்ள வேத வசனத்திற்கு ஒப்பிடுகிறார். இந்த பட்டயத்தைத்தான், முதலாம் நூற்றாண்டில், ஏசுவும் அவரது சீடர்களும் உபயோகித்தனர். இதுதான் அசல் (Original) இருபுறம் கருக்குள்ள ஆவியின் பட்டயம் (Two-edged Sword of the Spirit). இந்த பட்டயத்தை வைத்துத்தான், Valiant For Truth மூன்றுவிதமான கொள்ளையர்களை விரட்டியடிக்கிறார். இந்த மூன்று கொள்ளையர்களின் முக்கியமான கொள்ளையர், நடைமுறையில் (Pragmatic) கிறிஸ்துவின் வல்லமையை நிரூபிக்க முயலும் "தெய்வீக சுகமளிக்கும் மேடை ஊழியர்" என அறிகிறோம். இன்று அநேக போதகர்கள், இந்த எருசலேம் பட்டயத்தை உபயோகிப்பதில்லை.

தயவு செய்து இந்த இணைய தளத்திலுள்ள செய்திகளைத் தைரியமாக பிரசுரிக்கலாம். எனது அனுமதி அவசியம் இல்லை. தங்களின் கருத்துக்களை Home Page லுள்ள Guest Book ல் பதிவு செய்ய மறக்கவேண்டாம்.

முதலாம் அதிகாரம் .......

யோபு அன்பழகன்

Email: jobanbalagan@gmail.com