கிறிஸ்தியனும் இளகிய நெஞ்சனும்

Home

முந்தின அதிகாரம்

கிறிஸ்தியானும் இளகிய நெஞ்சனும்

கிறிஸ்தியானும் இளகிய நெஞ்சனும் பேசியவாறே அந்தச் சமவெளியில் நடந்து செல்வதை என் கனவில் கண்டேன்.இளகிய நெஞ்சனே நல்லதுதான் நீ என்னுடனே வந்தாய். நாம் போகும் இடத்தை அடைய முடியாவிட்டால் நமக்குக் கிடைக்கப் போகும் நரக தண்டனையைப் பற்றி அறிந்திருந்தால் கடின நெஞ்சன் இப்வாறு திரும்பிப் போயிருக்கமாட்டான். பாவம்! என்றான் கிறிஸ்தியான்.அது இருக்கட்டும். நாம் போகிற இடத்திலுள்ள நித்திய மகிழ்ச்சியைப்பற்றி எனக்குக்கொஞ்சம் சொல்லமாட்டாயா? என்று ஆவலுடன் கேட்டான் இளகியநெஞ்சன். நான் சொல்லுவதைவிட அந்த மகிழ்ச்சியை அனுபவித்து உணர்வதே மேலானாதாக இருக்கும். என்றாலும் இந்தப் புத்தகம் அதைப் பற்றிக் கூறும் சில வசனங்களை வாசிக்கட்டுமா? என்றான் கிறிஸ்தியான்.அது சரி இந்தப் புத்தகத்தில் உள்ள வசனங்கள் எல்லாம் உண்மையானவை என்று உனக்குத் தெரியுமா? என்று சந்தேகத்தோடு கேட்டான் இளகிய நெஞ்சன். நிச்சயமாக! ஏனென்றால் பொய்யே கூறாத ஒருவரால் எழுதப்பட்டு புத்தகம் இது என்றான் கிறிஸ்தியான். அப்படியா? அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? நாம் நித்திய காலமாக சாகாமல் வாழக்கூடிய நித்திய ராஜ்யம் ஒன்று இருக்கிறது என்று இந்தப் புத்தகம் கூறுகிறது. அந்த இடம்தான் மோட்சம். மோட்சத்தை நோக்கிதான் இப்போது பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்றான் கிறிஸ்தியான். ரொம்பவும் மகிழ்ச்சி! மோட்சம் எப்படி இருக்கும்? என்று ஆவலாகக் கேட்டான் இளகியநெஞ்சன்.

அங்கே நாம் அணிந்துகொள்ள மகிமையின் கிரீடம் கொடுக்கப்படும். நமது உடைகள் சூரியனைப்போல் பிரகாசமாக இருக்கும். அங்கே அழுகையும,; கவலையும் கிடையவே கிடையாது. ஆண்டவரே நமது கண்ணீர் யாவையும் துடைப்பார் (வெளி 21:4) என்றான் கிறிஸ்தியான். நம்முடனே வேறு யார் அங்கே இருப்பார்கள்? என்று கேட்டான் இளகிய நெஞ்சன்.

ஒளிவீசும் தேவ தூதர்கள் அங்கே இருப்பார்கள். நமக்கு முன்பாக அங்கே போயிருக்கிற ஆயிரக்கணக்கான மனிதர்கள் அங்கே இருப்பார்கள். அவர்களில்அநேகர் ஆண்டவர்மீதுள்ள அன்பினாலும், அவருக்குக் கீழ்ப்படிந்ததின் நிமித்தமாகவும் அநேக துன்பத்தை அடைந்திருக்கிறார்கள். சிலர் வாளால் வெட்டுப்பட்டிருக்கிறார்கள். சிலர் நெருப்பில் சுட்டெரிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் காட்டு மிருகங்களுக்கு இரையாகப்போடப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களோ இன்று நித்திய வாழ்வு பெற்று மோட்சத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றான் கிறிஸ்தியான். நாமும் அந்த மகிழ்ச்சியைப் பெறுவது எப்படி என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டான் இளகிய நெஞ்சன்.

இந்தப் புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று சொல்லட்டுமா? நாம் ஆண்டவரை நோக்கி விருப்பத்தோடு கேட்டால் அவர் இவற்றை நமக்கு இலவசமாகத் தருவாராம் என்றான் கிறிஸ்தியான். அப்படியா? ரொம்பவும் மகிழ்ச்சி. வா, சீக்கிரமாகவே நாம் அங்கே போகலாம் என்று துரிதப்படுத்தினான். பொறு, பொறு. என் முதுகில் இருக்கிறதே பெரிய சுமை! என்னால் வேகமாக நடக்க முடியவில்லை என்று பரிதாபத்துடன் கூறிய கிறிஸ்தியான் அவன் பின்னே தள்ளாடியபடியே நடந்தான்.

கற்றுக்கொள்ளும் பாடம்

கடின நெஞ்சன் இளகியநெஞ்சன் போல இன்று அநேக கிறிஸ்தவர்களும் ஊழியக்காரர்களும் நம் மத்தியில் உண்டு. இவர்கள் நாம் மோட்ச பயணம் போக அவசியமில்லை, இந்த உலகத்திலேயே எல்லா ஆசீர்வாதங்களையும் ஆண்டவர் வைத்திருக்கிறார் என்று போதிக்கிறார்கள். இளகிய நெஞ்சன் சத்தியத்தை அறிந்திருந்தும் கள்ள தீர்க்கதரிசிகளின் சத்தத்திற்கு இடம்கொடுத்து அழிந்துபோகும் நரகத்திற்குப், பின் வாங்கி, சென்று விடுகிறான். கடின நெஞ்சனோ சத்தியத்திற்கு செவி கொடாமல் தன் மனதைக் கடினப்படுத்தி மோட்ச பயணம் போக முன் வரவில்லை. கிறிஸ்டியானின் முதுகில் உள்ள சுமை கள்ள போதர்களால் கொடுக்கப்பட்டது. இந்த சுமை நீங்கவேண்டுமானால் அவன் சிலுவை அண்டை போய் சிலுவையையும் காலியான கல்லறையையும் காணவேண்டும்.

குட்டையில் விழுந்தார்கள்

அவர்கள் இவ்வாறு சென்றுகொண்டிருக்கும் பொழுது பேச்சு சுவாரசியத்தில் வழியின் குறுக்கே இருந்த அவநம்பிக்கை என்ற குட்டையைக் கவனிக்கவில்லை! கால் தவறி இருவரும் அதில் விழுந்துவிட்டார்கள்! குட்டையைவிட்டு வெளியேற அங்குமிங்கும் புரண்ட போது அவர்கள் உடலெங்கும் சேறு அப்பிக்கொண்டது! கிறிஸ்தியானின் முதுகிலுள்ள சுமையினால் அவன் மெல்ல மெல்ல சகதியினுள் மூழ்கத் துவங்கினான்!என்ன இது? நாம் ஏன் இவ்வாற சிக்கிக்கொண்டோம்? ஏன்று கோபத்தோடு கேட்டான் இளகிய நெஞ்சன். எனக்குத் தெரியவில்லையே! என்றான் கிறிஸ்தியான் பரிதாபமான குரலில். இது தான் நீ கூறிய மகிழ்ச்சியா? ஆரம்பமே இப்படியிருந்தால் மோட்சத்தை அடைவதற்குள் இன்னும் எவ்வளவு ஆபத்துக்களைச் சந்திக்க வேண்டியிருக்குமோ! என்னால் முடியாதப்பா! நீயே போய் எனக்குள்ள மகிழ்ச்சியையும் சேர்த்து அனுபவித்துக் கொள். நான் எப்படியாவது இங்கிருந்து தப்பித்துச் செல்வேன் என்று கோபத்துடன் கத்திய இளகிய நெஞ்சன் குட்டையிலிருந்து வெளியேறக் கடுமையாக முயன்றான். இறுதியில் தான் விழுந்த பக்கமே கரையேறிவிட்டான்! நகரத்தை நோக்கி வேகமாக ஓடத்தொடங்கினான். அதன்பிறகு கிறிஸ்தியான் அவனைப் பார்க்கவேயில்லை! ஆனால் கிறிஸ்தியானோ இடுக்கமான வாசல் இருக்கும் திசைப்பக்கமாக மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றான். முதுகிலுள்ள சுமையின் பாரத்தினால் அவனால் கரையில் ஏற முடியாமல் தவித்தான்!

அப்போது சகாயர் என்ற ஒருவர் அங்கு வருவதை நான் என கனவில் கண்டேன். அவர் கிறிஸ்தியானைக் கண்டவுடன் நின்று, ஏனப்பா, என்ன ஆயிற்று? என்று அன்புடன் கேட்டார். நற்செய்தியாளர் என்ற மனிதர் நான் தண்டனைக்குத் தப்பும்படியாக இடுக்கமான வாசலைச் சென்றடைய வழிகாட்டினார். நான் அந்த வழியே செல்லும்போது தவறி இந்தக் குட்டைக்குள் விழுந்து விட்டேன் என்றான் கிறிஸ்தியான். நீ ஏன் கவனமாகப் போகக்கூடாது? இந்தக்குட்டையின் நடுவேதான் வரிசையாகக் கற்கள் போடப்பட்டுள்ளதே! அதை நீ பார்க்கவில்லையா? அவற்றின் மீது கால் வைத்து இந்தக் குட்டையை மிக எளிதாகக் கடந்திருக்கலாமே என்றார் சகாயர்.

நான் அவசரப்பட்டதால் அந்தக் கற்களைக் கவனிக்கவில்லை, ஐயா என்றான் கிறிஸ்தியான் வருத்தத்துடன்.

சரி சரி, உன் கையைக் கொடு என்று சொன்ன சகாயர் அவன் கையைப் பிடித்திழுத்து கரையில் சேர்த்தார்.

ஐயா, அழிவின் நகரத்திலிருந்து இடுக்கமான வாசல் செல்லும் வழியில் இந்தக் குட்டை இருக்கிறதே. இதனால் பயணம் செய்பவர்களுக்கு ஆபத்து வரக்கூடுமே. ஏன் இதுவரை இதை மூட வழி செய்யவில்லை? ஏன்று அக்கறையுடன் கேட்டான் கிறிஸ்தியான்.

இந்தக் குட்டையை மூடாமல் அப்படியே வைத்திருக்க வேண்டுமென்பது எங்கள் மன்னனின் விருப்பமல்ல. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக எத்தனையோ பேர் இதைச் சரிசெய்ய முயன்றிருக்கிறார்கள். ஆனாலும் இதைச் செப்பனிடமுடியவில்லை. ஏனென்றால் உலகிலுள்ள ஒவ்வொருவரும் தங்கள் இரட்சிப்பைக் குறித்து அவநம்பிக்கை கொள்ளும்போது அந்த எண்ணங்களே இந்தக் குட்டையை உருவாக்கின்றன. அவநம்பிக்கை எண்ணங்கள் பெருகி வருவதால் இந்தக் குட்டை எப்போதுமே நிரம்பி வழிகிறது. ஆனாலும்கூட விசுவாசத்தோடு இந்தக் குட்டையைக் கடக்க முற்படும்போது, நடுவில் போடப்பட்டுள்ள கற்களைக் கண்டுபிடித்து அதன் மூலம் மிக எளிதில் கடந்து செல்லலாம். இடுக்கமான வாசலை நெருங்குவதற்குள் பாதை சரியாகிவடும் என்ற சகாயர் கிறிஸ்தியானை வழியனுப்பி வைத்தார். இதற்குள்ளாக இளகிய நெஞ்சன் தனது கிராமத்தை அடைந்திருப்பதை நான் என் கனவில் கண்டேன். அவனுடைய நண்பர்கள் அவனைத் தேடி வந்தார்கள். சிலர் அவன் புத்தியோடு திரும்பி வந்ததற்காக அவனைப் பாராட்டினார்கள். வேறு சிலரோ அவன் துன்பங்களைக் சகிக்க முடியாமல் திரும்பி வந்ததற்காக அவனைக் கோழை என்று கூறி கேலி செய்தார்கள். சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த இளகிய நெஞ்சன் பிறகு தானும் அவர்களுடன் சேர்ந்து கிறிஸ்தியானைக் கேலி செய்யத்தொடங்கினான்!

கற்றுக்கொள்ளும் பாடம்

இந்தக் குட்டையை மூடாமல் அப்படியே வைத்திருக்க வேண்டுமென்பது தேவனின் விருப்பமல்ல. அவநம்பிக்கை என்ற குட்டை யார் உண்டுபண்ணினார்கள்? கள்ள போதகர்கள் தங்கள் மேல் நம்பிக்கை வைக்க விரும்பி கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைக்கத் தடை செய்கிறார்கள். 2000 வருடங்களாக சரியான சத்தியம் அறிவிக்கப்படாமல் நாளடைவில் கள்ள ஊழியர்கள் ஒரு குட்டையை உண்டு பண்ணிவிட்டார்கள். இதை சரிபண்ண அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசகளும் எழும்பி வரவில்லை. கிறிஸ்துவின் சபை ரோமன் கத்தோலிக்கரின் கைகளில் சிக்கிவிட்டு இதுவரை சரியான சத்தியத்திற்குத் திரும்பவில்லை. சீர்திருத்தம் முற்றிலும் வரவில்லை. பெந்தே கொஸ்து இயக்கமும் பழைய ஏற்பாட்டின் ஆசாரிய ஊழியத்திலுருந்து நம்மை விடுவிக்கவில்லை. மார்ட்டின் லூத்தரின் சீர்திருத்தம் முதலாம் நூற்றாண்டு சபைக்கு நம்மை இதுவரை கொண்டுசெல்லவில்லை. இந்த குட்டையிலிருந்து நாம் விடுபெறவேண்டுமானால் நாம் இதுவரை கற்றுக்கொண்ட போதனைகளை விட்டுவிட்டு, ஆதி அப்போஸ்தலர் காலத்திற்குத் திரும்பவேண்டும். "இந்தக்குட்டையின் நடுவேதான் வரிசையாகக் கற்கள் போடப்பட்டுள்ளதே! அதை நீ பார்க்கவில்லையா? அவற்றின் மீது கால் வைத்து இந்தக் குட்டையை மிக எளிதாகக் கடந்திருக்கலாமே என்றார் (Evangelist) சகாயர்". இந்த வரிசையாக போடப்படட கற்கள் அப்போஸ்தலரின் மூல உபேதேசங்கள் தான். நாம் வேதத்தை தியானித்தால் இவைகளைக் கண்டுகொள்ளலாம். ஆனால் நமது கண்களை கள்ள உபதேசிகள் குருடாக்கிவிட்டார்கள்.

உலக ஞானியைச் சந்தித்தல்

கிறிஸ்தியான் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது அவனை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற ஆவலோடு குறுக்கு வழியாக வேகமாக விரைந்துவரும் ஒருவனை என் கனவில் கண்டேன். அவன் பெயர் உலகஞானி. அவன் கிறிஸ்தியானின் ஊருக்குப் பக்கத்திலிருந்த உலகஞானம் என்ற ஊரைச் சேர்ந்தவன். கிறிஸ்தியான் சுமையைத் தூக்கிக்கொண்டு தள்ளாடியபடியே நடந்து செல்லவதைக் கண்ட உலகஞானி ஏனப்பா, இந்தப் பெரிய சுமையைத் தூக்கிக்கொண்டு எங்கே போகிறாய்? என்று அக்கறையுடன் கேட்பதுபோல விசாரித்தான். ஆமாம் பெரிய சுமைதான். உலகில் வேறு யாருக்குமே இவ்வளவு பெரிய சுமை இருக்காது என்று தான் தோன்றுகிறது. அதோ தொலைவில் இருக்கிற இடுக்கமான வாசலை நோக்கிச் செல்கிறேன். அங்கே சென்றால் என்னுடைய சுமையைத் தொலைக்கும் வழி சொல்லப்படுமாம் என்றான் கிறிஸ்தியான்.ஏனப்பா, உனக்கு மனைவி பிள்ளைகள் இருக்கிறார்களா? என்று கேட்டான் உலகஞானி. இருக்கிறார்கள். ஆனால் இந்தச் சுமை என்னை அழுத்துவதால் அவர்களைப் பற்றி என்னால் அக்கறைப்பட முடியவில்லை என்று அங்கலாய்த்தான் கிறிஸ்தியான். நான் உனக்கு ஒரு ஆலோசனை கூறுகின்றேன். நீ அதைக்கேட்பாயா? என்று கேட்டான் உலகஞானி. சொல்லும் ஐயா, நல்ல யோசனை என்றால் அதன்படி செய்யலாமே என்றான் கிறிஸ்தியான் ஆவலுடன். முதலில் நீ இந்தச் சுமையைத் தூக்கி எறிய வேண்டும். அப்போதுதான் ஆண்டவர் அளிக்கும் ஆசீர்வாதங்களை உன்னால் அனுபவிக்க முடியும் என்றான் உலகஞானி. அது சரிதான் ஐயா. அதை ஒழிக்கத்தானே நான் இவ்வாறு பயணம் செய்து கொண்டிருக்கிறேன் என்றான் கிறிஸ்தியான். அதுசரி, உனக்கு இந்தப் பாதையைச் சுட்டிக்காட்டியது யார்? என்று கேட்டான் உலக ஞானி. நற்செய்தியாளர் என்ற ஒருவர் தான் வழிகாட்டினார் என்றான் கிறிஸ்தியான்.

அடடா! அவர் உன்னை ஏமாற்றியிருக்கிறார்! இதைவிட அபாயகரமான பாதையை வேறு எங்குமே காண முடியாது! ஏற்கனவே நீ பல வேதனைகளை அனுபவித்திருக்கிறாய் போலிருக்கிறதே! அதோ, உன் ஆடையெல்லாம் சேறு! அவநம்பிக்கை குட்டையின் சேறுதானே இது? இதுதான் உன் சோதனைகளின் ஆரம்பம். நான் சொல்வதைக் கேள். நீ இன்னும் தொடர்ந்து இதே பாதையில் சென்றால் சோர்வு, வலி, பசி, கடுங்குளிர், காட்டு மிருகங்களின்அபாயம், காரிருள் போன்ற அபாயங்களைச் சந்திப்பதோடு உயிரையும்கூட இழக்க வேண்டியிருக்கும்! ஏன் யாரோ ஒருவருடைய பேச்சைக் கேட்டு உன் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்கிறாய்? என்று அனுதாபத்துடன் கேட்டான் உலகஞானி.

இந்த எல்லா வேதனைகளைக் காட்டிலும் என் சுமையே எனக்குப் பெரிய வேதனையாக இருக்கிறது ஐயா! என்றான் கிறிஸ்தியான் கவலையுடன். எல்லாம் சரிதான், ஆனால் இந்தச் சுமை எப்படி உன் முதுகில் வந்தது? என்று கேட்டான் உலகஞானி. இதோ என் கையிலிருக்கும் இந்தப் புத்தகத்தைப் படித்தபிறகுதான் என்றான் கிறிஸ்தியான். நினைத்தேன். இவ்வாறுதான் உன்னைப்போலப் பலரும் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு வேண்டாத பாதைகளில் சென்று சொல்லிமுடியாத துன்பங்களைப் பெற்றிருக்கிறார்கள். நீயாவது நான் சொல்வதைக்கேள். உன்னுடைய சுமையை மிக எளிதாகப் போக்குவதற்கான வழியை நான் கூறுகிறேன். இது மிகச் சுலபமான வழி. மிகவும் பாதுகாப்பானது! வழியெங்கும் மகிழ்ச்சிதான்! என்று ஆசைகாட்டினான் உலக ஞானி.

அப்படியா? அந்த வழியை எனக்குச் சொல்லுங்கள், ஐயா! என்று ஆவலுடன் கேட்டான் கிறிஸ்தியான். சொல்கிறேன் கேள். சற்றுத் தொலைவில் நல்லொழுக்கம் என்ற நகரம் உள்ளது. அங்கே நீதிமான் என்ற அறிஞர் வசிக்கிறார். உன்னைப்போல அநேகருடைய சுமைகளை அகற்ற அவர் வழிகாட்டியிருக்கிறார். உன்னுடைய மனக்குழப்பத்தையும் அவர் தீர்த்துவைப்பார். அவர் வீட்டில் இல்லாவிட்டால் அவரைப்போலவே புத்திசாலியான அவர் மகன் "மரியாதை" உனது பிரச்சனையைத் தீர்த்துவைப்பான். நீ திரும்ப ஊருக்குப் போக வேண்டியதில்லை. உனது மனைவியையும் பிள்ளைகளையும் வரவழைத்து அந்த நகரத்திலேயே மகிழ்ச்சியாக வாழலாம். அங்கே குறைந்த வருமானத்திலேயே காலம்தள்ள முடியும். மேலும் அங்குள்ளவர்கள் எல்லாருமே உத்தமர்களாயிருப்பதால் உனக்கு எந்தத் துன்பமும் வராது என்று விளக்கினான் உலக ஞானி.இந்தப் பெரியவர் கூறுவதுதான் சரியான வழி போலத் தெரிகிறது என்று நினைத்த கிறிஸ்தியான், ஐயா, அந்த நீதிமானின் வீட்டுக்கு எப்படிச் செல்வது? என்று உற்சாகமாகக் கேட்டான். அதோ தெரிகிறதே ஒரு மலைச் சிகரம். அதன் அடிவாரத்திலுள்ள வீடுகளில் முதல் வீடுதான் அவர் வீடு என்று சுட்டிக் காட்டினான் உலக ஞானி. கிறிஸ்தியான் அவனிடம் விடைபெற்று, மலைச்சிகரத்துக்குத் திரும்பிச் செல்வதை நான் என் கனவில் கண்டேன். அவன் அந்த அடிவாரத்தை நெருங்கியபோது மலைச்சிகரத்தை நிமிர்ந்து பார்த்தேன். சிகரம் சரிந்துபோய் அவன்மீது விழுந்துவிடுவதுபோலத் தோன்றியது! பயந்து நடுங்கினான் கிறிஸ்தியான்! அவனுடைய முதுகிலிருந்த சுமையின் எடை அதிகமாகி அவனை அப்படியே அழுத்தியது! கற்றுக்கொள்ளும் பாடம்

உலகஞானி போன்ற ஊழியர்கள். "நாங்கள் சொல்வதைக்கேள், இந்தப் புத்தகத்தைப் படித்து உன்னால் ஏதும் புரிந்துகொள்ள முடியாது, நாங்கள் அபிஷேகம் பெற்ற, தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவ ஊழியக்காரர்கள். நாங்கள் சொல்வதை கேட்டு அதன்படி நடந்தால் இந்த உலகத்தில் சந்தோஷமாக வாழலாம். மோட்சப்பட்டணத்திற்கு போக அவசியமில்லை. உனது மனைவியையும் பிள்ளைகளையும் வரவழைத்து அந்த நகரத்திலேயே மகிழ்ச்சியாக வாழலாம். இங்கே குறைந்த வருமானத்திலேயே காலம்தள்ள முடியும். மேலும் இங்குள்ளவர்கள் எல்லாருமே உத்தமர்களாயிருப்பதால் உனக்கு எந்தத் துன்பமும் வராது", என்று சொல்வார்கள். இவர்கள் குறுக்கு வழியாக வேகமாக விரைந்து வந்து உங்களைச் சந்திக்கிறார்கள். அதாவது கிறிஸ்துவின் மூலமாக வராமல் தங்களது சபையின் உபதேசம் மூலமாக உங்களை சந்திக்கிறார்கள்.

"மரியாதை" என்பவன் உங்களின் பிரச்சனையை மாத்திரம் தீர்த்துவைக்க முயற்சி செய்வான். இயேசு கிறிஸ்துவிடம் வழி நடத்தாமல் உங்களை நீங்கள் இது செய்யவேண்டும் இது செய்யக்கூடாது என்று சில சட்டதிட்டங்களை உங்களுக்குப்போதிப்பான்.

இந்த போதகர்கள், "நீ இன்னும் தொடர்ந்து இதே பாதையில் சென்றால் சோர்வு, வலி, பசி, கடுங்குளிர், காட்டு மிருகங்களின் அபாயம், காரிருள் போன்ற அபாயங்களைச் சந்திப்பதோடு உயிரையும்கூட இழக்க வேண்டியிருக்கும்!" எனக் கூறி உங்களை மோட்ச பாதையைவிட்டு வழி விலகி போகச் செய்வார்கள்.

"எங்கள் சபையிலே ஒழுங்காக வந்து தசம பாகம் கொடுத்து எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்று சந்தோஷமாக இந்த உலகத்தில் ஜீவிக்கலாம். உன்னுடைய சுமையை மிக எளிதாகப் போக்குவதற்கான வழியை நாங்கள் கூறுகிறோம்," என்று சொல்வார்கள்.

உலக ஞானி ஊழியர்கள் மலைச் சிகரத்தின் அடிவாரத்திலுள்ள வீடுகளில் முதல் வீட்டில் வசிக்கும் நீதிமான் என்ற அறிஞரை போல உள்ள ஊழியக்காரர்களிடம் வழி நடத்துகிறார்கள்.

இந்த அறிஞர்கள் தேவ மக்களுக்குச் சில கட்டளைகளைக் கொடுக்கிறார்கள். "இதை செய்யாதே! அதை செய்யாதே," என கூறி மலைப்பாதையின் வழி நடத்தி செல்கிறார்கள். உங்கள் முதுகிலிருந்த சுமையின் எடை குறைக்காமல் அதை அதிகரிக்கச் செய்கிறார்கள். வேதத்திலிருந்து சில வசங்களை அங்கும் இங்குமிருந்து கோர்த்து நல்லொழுக்கம் (Morality) தத்துவத்திற்கு, அதாவது கிறிஸ்து உதவி இல்லாமல் வெறும் நல்லஒழுக்க கட்டளைகளை பின்பற்ற வழி நடத்துகிறார்கள். உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவை வெளிப்படுத்தாமல் தங்களையே மேன்மை படுத்துகிறார்கள்.

நற்செய்தியாளருடன் இரண்டாம் சந்திப்பு

அப்போது அந்த வழியே நற்செய்தியாளர் வருவதைக் கண்டான் கிறிஸ்தியான். தான் செய்த தவறை உணர்ந்த அவன் வெட்கித் தலைகுனிந்தான்!

அவனைக் கண்டவுடன், கிறிஸ்தியானே, நீ இங்கே என்ன செய்கிறாய்? என்று கோபத்துடன் கேட்டார் நற்செய்தியாளர். ஒன்றுமே பதில்கூற முடியாமல் தலைகுனிந்தவாறே நின்றான் கிறிஸ்தியான். நான்தான் உன்னை இடுக்கமான வாசலை நோக்கிச் செல்லும் பாதையில் போகச் சொன்னேனே! நீ எப்படி வழிதவறி இங்கே வந்தாய்? என்று மீண்டும் கேட்டார் நற்செய்தியாளர்.தயங்கியவறே நடந்ததை விவரிக்கத் துவங்கினான் கிறிஸ்தியான். நற்செய்தியாளருடன் பல குறுக்குக் கேள்விகள் கேட்டு அனைத்தையும் அறிந்து கொண்டார். கிறிஸ்தியானே, நான் சொல்லப் போவதைக் கவனமாகக் கேள். உன்னை ஏமாற்றிய உலக ஞானி இது போலப் பலரையும் நேரான பாதையிலிருந்து வழிதவற வைத்து அழிவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். அவன் கூறும் பாதையில் சென்றால் கண்டிப்பாக அழிந்துதான் போகவேண்டும்! ஆண்டவரின் வார்த்தைகளை நம்பி அவர்காட்டும் பாதையில்தான் நீ செல்ல வேண்டும். அவருடைய வார்த்தைகளை வாசிக்கிறேன் கேள். பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்க மாட்டோமென்று விலகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில், பூமியியே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவih நாம் விட்டு விலகினால் எப்படித் தப்பிப் போவோம்? (எபி.12:25 ). எனவே பரலோகத்திலிருந்து பேசுகிற ஆண்டவருக்கே நீ செவி கொடுக்க வேண்டும். இதோ இன்னொரு வசனம் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப் போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார் (எபி. 10:38 ). கிறிஸ்தியனே, நீ உன் பாதையிலிருந்து பின்வாங்கிப் போயிருக்கிறாய். இது ஆண்டவருக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்காது என்று வலியுறுத்தினார் நற்செய்தியாளர்."ஐயா, நான் தவறு செய்துவிட்டேனே" என்று கிழே விழுந்து கதறி அழுதான் கிறிஸ்தியான். நற்செய்தியாளர் கைகொடுத்து அவனைத் தூக்கி விட்டார். பயப்படாதே கிறிஸ்தியான். எந்தப் பாவமும் எந்தத் தூசணமும் மனுசருக்கு மன்னிக்கப்படும்.... அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு (மத்தேயு 12:31 , யோவான் 20:27 ). உலக ஞானியைப் பற்றி ஓரிரு உண்மைகளை நான் பற்றி நல்ல அறிவு உடைவயன்தான் நல்ல குணமுடையவன்தான் நல்லொழுக்கத்துடன் வாழ்பவன்தான். ஆனாலும் அவன் சிலுவiயைப் பற்றியும், இரட்சிப்பைப் பற்றியும் கூறப்படும் போதனைகளுக்குச் செவிகொடுக்காதபடியால் அவன் ஆண்டவருக்கு விரோதமானவனே. அவனது போதனையில் மூன்று தவறுகள் காணப்படுகின்றன. முதலாவது அவன் உன்னைச் சரியான பாதையிலிருந்து வழிதவற வைத்தான். இரண்டாவது சிலுவையை நீ வெறுத்துப் புறக்கணிக்கும்படி செய்தான். மூன்றாவது மரணத்துக்குச் செல்லும் பாதையில் உன்னைச் திசை திருப்பிவிட்டான் என்று விளக்கினார் நற்செய்தியாளர்.

கிறிஸ்தியான் முகத்தை மூடிக்கொண்டு அழுதான்.

"ஐயா, நான் அவனுடைய முட்டாள்தனமான யோசனையைப் பின்பற்றி சரியான பாதையிலிருந்து விலகி வந்துவிட்டேனே"! என்று கதறினேன். தன்னைக் காப்பற்றும்படி கெஞ்சினான்! "கவலைப்படாதே, கிறிஸ்தியான். நீ உண்மையாகவே உன் தவறுகளை உணர்ந்தால் ஆண்டவர் உன்னை நிச்சயமாக மன்னிப்பார். வா ஜெபம் செய்வோம் என்று நற்செய்தியாளர் கூறவே இருவருமாகவே முழங்காற்படியிட்டனர். கிறிஸ்தியான் தனது தவறுகளை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்டான்.

அதன்பிறகு நற்செய்தியாளர் அவன் செல்ல வேண்டிய சரியான பாதையைச் சுட்டிக்காட்டி, அவனை அன்போடு வழியனுப்பி வைத்தார். கிறிஸ்தியான் அங்குமிங்கும் பார்க்காமல் வேகமாக நடந்துசென்றான். எதிரே வருபவர்களிடம் அவன் பேச்சுக் கொடுக்கவேயில்லை! சரியான பாதையை அடைந்தவுடன் இன்னும் வேகமாக நடக்கத் துவங்கினான்!

இறுதியில் இடுக்கமான வாசலை நெருங்கிவிட்டான் கிறிஸ்தியான்! வாசல் கதவின்மீது தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்கத் திறக்கப்படும் (மத்.7:7) என்று எழுதப்பட்டிருந்தது!

கிறிஸ்தியான் அதன்படி கதவைத் தட்டினான்! தயாளன் என்ற பெயருடைய நல்ல மனிதர் கதவைத் திறந்தார். "யாரப்பா நீ? எங்கிருந்து வருகிறாய்? உனக்கு என்ன வேண்டும்?" என்று அன்புடன் கேட்டார்.

"ஐயா, நான் அழிநகரத்திலிருந்து வரும் ஒரு பாவி. பெயர் கிறிஸ்தியான். வருங்கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ள நான் சீயோன் மலைக்குச் செல்லவேண்டும். அதற்கு இந்த வழியாகத்தானே போக வேண்டும்?" என்று கேட்டான். "ஆமாம், உள்ளே வா" என்று கூறிய தயாளன் கதவை அகலமாகத் திறந்தார். கிறிஸ்தியானின் கையை வேகமாகப் பற்றி உள்ளே இழுத்தார். கதவை மீண்டும் படாரென்று மூடித் தாளிட்டார்.

கற்றுக்கொள்ளும் பாடம்

"கிறிஸ்தியான்! நான்தான் உன்னை இடுக்கமான வாசலை நோக்கிச் செல்லும் பாதையில் போகச் சொன்னேனே! நீ எப்படி வழிதவறி இங்கே வந்தாய்? என்று மீண்டும் கேட்டார்", நற்செய்தியாளர்.

உண்மையான நற்செய்தியாளர்கள் நம்மை சரியான நேரத்தில் சந்தித்து மோட்சப் பாதைக்கு நேராகப் போகும் இடுக்கமான வாசலை நோக்கிச் செல்லும் பாதையில் போகச் சொல்வார்கள். உங்களது பணத்தின் மேல் அவர்கள் கண் இருக்காது. எந்தவிதமான பரிசளிப்பையோ எதிர்பார்க்க மாட்டார்கள். "கிறிஸ்தியானே, நீ இங்கே என்ன செய்கிறாய்?" என்று கோபத்துடன் உங்களை கேட்பார்கள்.

உண்மையான நற்செய்தியாளர் இப்படித்தான் எச்சரிப்பார், "உன்னை ஏமாற்றிய உலக ஞானி இது போலப் பலரையும் நேரான பாதையிலிருந்து வழிதவற வைத்து அழிவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். அவன் கூறும் பாதையில் சென்றால் கண்டிப்பாக அழிந்துதான் போகவேண்டும்! ஆண்டவரின் வார்த்தைகளை நம்பி அவர்காட்டும் பாதையில்தான் நீ செல்ல வேண்டும். அவருடைய வார்த்தைகளை வாசிக்கிறேன் கேள்," என்று தேவ வார்த்தைக்கு நேராக உங்களை இழுத்துக்கொண்டு போவார்.

"உலக ஞானியைப் பற்றி ஓரிரு உண்மைகளை பற்றி நல்ல அறிவு உடைவயன்தான் நல்ல குணமுடையவன்தான் நல்லொழுக்கத்துடன் வாழ்பவன்தான். ஆனாலும் அவன் சிலுவiயைப் பற்றியும், இரட்சிப்பைப் பற்றியும் கூறப்படும் போதனைகளுக்குச் செவிகொடுக்காதபடியால் அவன் ஆண்டவருக்கு விரோதமானவனே. அவனது போதனையில் மூன்று தவறுகள் காணப்படுகின்றன. முதலாவது அவன் உன்னைச் சரியான பாதையிலிருந்து வழிதவற வைத்தான். இரண்டாவது சிலுவையை நீ வெறுத்துப் புறக்கணிக்கும்படி செய்தான். மூன்றாவது மரணத்துக்குச் செல்லும் பாதையில் உன்னை திசை திருப்பிவிட்டான் என்று விளக்கினார் நற்செய்தியாளர்". எது எவ்வளவு உண்மை!

இன்றைக்கு அநேக போதர்கள் தங்கள் சபைக்கு தசம பாகம் கொடுத்து, சபைக்கு தவறாமல் வந்து செய்தி கேட்டுவிட்டுப் போனால் போதும். உங்களது கஷ்டங்களை சபையில் தேவனிடத்தில் சொல்லிவிடுங்கள் என்று கூறி பின்பு கிறிஸ்துவைச் சாராமல், ஒரு சன்மார்க்க ஜீவியத்திற்கு உங்களை வழி நடத்துகிறார்கள். அதாவது உங்களை ஒரு நல்லொழுக்க ஜீவியத்திற்கு நேராக வழி நடத்துகிறார்கள். கிறிஸ்துவின் இடத்தில் போதகமார்கள் தங்களை மேன்மைப்படுத்திக் காண்பித்து அவர்களின் ஜெபத்தின் மேல் நம்பிக்கை வைத்து உங்களை கர்த்தரின் மேலுள்ள விசுவாசத்திலிருந்து பிரித்துவிடுகிறார்கள். நீங்கள் எந்த காரியத்திற்கும் போதகரை நம்பி ஜீவிக்கும்படியாக உங்களை ஒரு கைப்பாவைகளாக மாற்றிவிடுகிறார்கள். இவ்விதமாக சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவை நீங்கள் புறக்கணிக்கப் பண்ணுகிறார்கள்.

இந்த போதகர்களின் செய்திகள் எல்லாம் தசம பாகத்தின் மூலம் ஆசிர்வாதம், வேறு எந்த சபைகளுக்கும் போகக்கூடாது என்றும், ரகசிய வருகையில் நீங்கள் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்றும் தான் இருக்கிறது. கிறிஸ்து உங்களிடம் இல்லை என்ற மனப்பானையை உருவாக்கி பாஸ்டரிடம் தான் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் அல்லது பேசுகிறார் என்ற ஒரு எண்ணத்தை உங்களுக்குள் உருவாக்கி உங்களை கிறஸ்துவின் சீடராக உருவாக்காமல், ஒரு விசுவாசி என்ற தப்பான கொள்கையை உங்கள் உள்ளத்தில் விதைத்து, உங்களை எப்போதும் சபை போதகரையே நம்பி ஜீவிக்கும் ஒரு தப்பான வழிக்கு உங்களை வழி நடத்துகிறார்கள்.

இவர்கள் சீயோன் மலைக்குச் செல்ல ஆயத்தமாகும் அழிநகரத்திலிருந்து வரும் ஒரு பாவி என்று உங்களுக்குப் போதியாமல் 'நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் கிடைத்து ஒரு பரிசுத்தவனாக மாறிவிட்டீர்கள், பாடு மரணங்கள் இனி கிடையாது, எனென்றால் கிறிஸ்து உங்கள் எல்லா பாடுகளையும் சிலுவையில் ஏற்றுக்கொண்டார் என்று வேதத்தை ஒரு கோணத்திலிருந்து போதிப்பார்கள். ஆனால் நீங்கள் தவறாமல் சபைக்கு வந்து தேவ வார்த்தைகளை கேட்கவேண்டும் என்று உரைப்பார்கள்.

நீங்கள் ஒரு "சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்" என்று I பேதுரு 2:9 என்ற வசனத்தின் கடைசி பகுதியை மாத்திரம் போதித்து முன் பகுதியான "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட..." என்பதைப் போதிக்கமாட்டார்கள். நீங்கள் இந்த புண்ணியங்களை அறிவிக்கும் ஆண்டவரின் ஊழியர்கள் என்பதை அழுத்தத்தோடு உங்களுக்கு கூறமாட்டார்கள், எனென்றால் அவர்களுக்கு நீங்கள் தசம பாகம் கொடுக்கும் விசுவாசிகளே! உண்மையாவே, நீங்கள் இயேசுவின் ரத்தத்தின் மூலமாக பரிசுத்தவான்களாக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஒரு மீட்கப்படட பாவி என்பதை மறக்கக் கூடாது. இவர்கள் வேதத்தை ஒரு கோணலாக மட்டும் பிரசிங்கிப்பார்கள். வேதம் ஒரு இரு புறம் கூறுள்ள பட்டயம் என்பதை மறக்கக்கூடாது. சாத்தான் யேசுவையை வனாந்தரத்தில் சோதிக்கும்போது வேதத்தை ஒரு பக்கத்திலிருந்து தான் போதித்தான். இன்றும் அதுதான் நடக்கிறது.

கிறிஸ்தியானைப் போல அங்குமிங்கும் பார்க்காமல் வேகமாக எதிரே வருபவர்களிடம் பேச்சுக் கொடுக்காமல் உண்மையான நற்செய்தியாளரின் செய்தி கேட்டு அல்லது உங்கள் கையிலுள்ள சுருளில் எழுதப்பட்டதை தியானித்து, சரியான பாதையை நோக்கி ஓடவும்.

மூணாம் அதிகாரம்

இடுக்கமான வாசல் கோட்டையில் கிறிஸ்தியான்