மரண நதியை கடப்பது

அதுவரை நம்பிக்கையையும், கிறிஸ்தியானும் கூட வந்த ஒளிவீசும் ஆடையனிந்தவர்கள் நீங்கள் அந்த வாசலை அடையவேண்டுமானால் இந்த ஆற்றைக் கடந்துதான் செல்லவேண்டும் என்று கூறிவிட்டார்கள். பயந்து நடுங்கியபடியே ஆற்றினுள் இறங்கினார்கள் இருவரும்! சிறிது நேரம் போவதற்குள்ளாக நீர்மட்டம் அவர்கள் தலைக்குமேல் வந்துவிட்டது! கிறிஸ்தியான் மூழ்கத்துவங்கினான்!ஐயோ, அமிழ்ந்து போகிறேனே! என்று புலம்பினான். கவலைப்படதே கிறிஸ்தியான். ஆழம் அதிகமில்லை! என் கால்களுக்குக் கீழாக கடினமான தரை தட்டுப்படுகிறது என்று தேற்றினான் நம்பிக்கை.

ஆனால் கிறிஸ்தியானோ, நான் சாகும் வேளை நெருங்கிவிட்டது. என்னால் பாலும் தேனும் ஓடும் மோட்ச பூமியைப் பார்க்க முடியாது என்ற அங்கலாய்ப்போடு நம்பிக்கையின்மீது சாய்ந்துவிழுந்தான். கிறிஸ்தியான் மூழ்கிவிடக்கூடாதே என்று மிகவும் கடினத்துடன் அவனைத் தாங்கிப் பிடித்தபடியே நீந்தினான் நம்பிக்கை.

அப்போது நம்பிக்கை விசுவாசத்தோடு, இயேசுவானவரே, எங்களைக் காப்பாற்றும் என்று வேண்டினான். இந்த வார்த்தைகள் கிறிஸ்தியானுக்கு உற்சாகத்தைக் கொடுத்தன. அவனும் புத்துணர்வோடு நீந்தத் துவங்கினான். இவ்வாறு முதல் சோதனையில் வெற்றிபெற்றார்கள்!

கற்றுக்கொள்ளும் பாடம்

வெள்ளை அங்கி தரித்த தேவதூதர்களும், மகிமையில் பிரவேசித்த பரிசுத்தவான்களும் தான், நாம் மரிக்கும் தருவாயில் மோட்சத்தைக் காண்பிப்பார்கள். அப்போதுதான் நமது ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படும். மோட்சமும் அங்கேயுள்ள ஆசீர்வாதங்களை தங்களின் ஆவியில் அனுபவிக்கும் அனுபவங்களை உணர்வார்கள். அநேக பரிசுத்தவான்கள் தாங்கள் மரிக்கும்போது பரவசமடைகிறார்கள். ஆனால் பாவியோ அங்கலாய்க்கிறான். நதியை கிடப்பது என்றால் மரணத்தின் போது ஏற்படும் சரீர பாடுகளை குறிக்கும்.

"சிறிது நேரம் போவதற்குள்ளாக நீர்மட்டம் அவர்கள் தலைக்குமேல் வந்துவிட்டது! கிறிஸ்தியான் மூழ்கத்துவங்கினான்!" இதுதான் பரிசுத்தவான்கள் தங்களின் மாமிச சரீரங்களை விட்டு ஆவிக்குரிய சரீரங்களை தரிக்கும் நேரம். இந்த இரண்டாவது சோதனையை கடந்து மோட்ச பட்டணத்தில் கால் எடுத்து வைப்பார்கள்.

Next.... மோட்சத்தை அடைந்தனர்