மரண இருளின் பள்ளத்தாக்கில்

Home

முந்திய பகுதி......உண்மையான மேய்ப்பனும் தேவனுடைய வீடும்

மரண இருளின்பள்ளத்தாக்கில்

பின்பு பயணிகள் அபொல்லியோனும் கிறிஸ்டியானும் சண்டை போட்ட இடத்தை பார்வையிடுகினர். அந்த இடத்தில் கிறிஸ்டியான் சிந்திய இரத்தத்தையும், சண்டையில் நொறுங்கிய கற்களையும் காண்கின்றனர். அப்பொல்லியோனின் ஈட்டியின் உடைந்து நொறுங்கிய பகுதிகளையும் காண்கிறார்கள். தன்னை ஹெர்குலியஸ் (Hercules) போல பலனுள்ள மனிதனாக காண்பித்ததையும் இந்த இடத்தில் ஒரு அடையாளமாக காண்கிறார்கள். அப்பொல்லியோன் இந்த இடத்தில் தோற்று மரண இருளின் பள்ளத்தாக்கிற்குத் தப்பி ஓடி விட்டானாம். இந்த யுத்தத்திற்கான சாட்சியமாக அங்கேயுள்ள தூண் காட்சியளிக்கிறது. பின்னர் பயணிகள் மரண இருளின் பள்ளத்தாக்கில் பிரவேசித்தபோது, பயங்கரமான சத்தங்கள், இறந்து போன மனிதர்களின் ஒப்பாரிகளும், பாம்பின் இரைச்சல் சத்தங்களையும் கேட்க தொடங்க, பயணிகள், விசேஷமாக பிள்ளைகள் பயந்து நடுங்கினர். எப்போது இந்த இடத்தை விட்டு நீங்குவோம் என்று பிள்ளைகள் கேட்டனர். இந்த பள்ளத்தாக்கு முந்திய பள்ளத்தாக்கைவிட நீளமாக இருந்தது. வழிகாட்டி "திடன் கொள்ளுங்கள்" என்றுரைத்தார். பயணிகளை தரையிலுள்ள குழிகளை பார்த்து மெதுவாக நடக்கவேண்டும் என்று எச்சரித்தார். ஜேம்ஸ் சுகவீனம் அடைய தொடங்கினான். கிறிஸ்டியானா அவனுக்கு மருத்துவர் Skill கொடுத்த மருந்துகளையும் பொருள்கூறுவர் (Interpreter) கொடுத்தனுப்பிய உணவையும் கொடுக்க, அவன் குணமானான்.

கிறிஸ்டியானா தான் இதுவரை காணாத ஒரு அசிங்கமான உருவத்தை பார்த்ததாக கூற, ஜோசப் பயந்து அது எங்கேயிருக்கின்றது என கேட்டான். கிறிஸ்டியானா, "அது சமீபமாயிருக்கிறது," என்கிறாள்.

வழிகாட்டி," பயப்படுபவர்கள் என்னண்டை வரட்டும்", என கூற, சிறிது நேரத்தில் அந்த உருவம் மறைந்துவிட்டது. "சாத்தானை எதிர்த்து நில்லுங்கள் அவன் ஓடிப்போவான்" என்ற வசனம் அவர்களின் ஞாபகத்தில் கொண்டுவரப்பட்டது.

பின்னர் சற்று தொலைவிற்கு பின், மேர்சி தன்னை ஒரு கர்ஜனை செய்யும் சிங்கம் பின் தொடருவதை உணருகிறாள். உடனே வழிகாட்டி பயணிகளை தன் பின் வருமாறு கூறி, அவர் தன் பட்டயத்தை எடுத்து முன் செல்கிறார். அவரை கண்டவுடன் சிங்கம் பின்வாங்கி ஓடிவிட்டது.

கற்றுக்கொள்ளும் பாடம்

நமக்கு இந்த பயணத்தின் வழிகாட்டியாக எப்போதும் கூடஇருப்பது பரிசுத்தாவியானவர்தான். அவர், கிரேட் ஹார்ட் போன்ற தேவ மனிதர்களை அனுப்பியும், நமக்கு வழி நடத்துகிறார். நாம் கிறிஸ்துவை தேடும் போது அவர் தன் வார்த்தைகள் மூலமாகவோ, சொப்பனங்கள் மூலமாகவோ, நமக்கு மரண இருளின் பள்ளத்தாக்கில் பாதை காட்டுகிறார். நம்மை சத்துருவானவன் பயமுறுத்துவானே தவிர, நமக்கு ஒரு தீங்கும் அவனால் செய்யமுடியாது. நம்மை நோய்கள் தாக்கும்போது, Mr Skill போன்ற வைத்தியர்கள் அளிக்கும் மருந்துகளை விசுவாசத்துடன், அருந்தலாம். ஆண்டவரின் வாக்குத்தந்த வசனங்களை நாம் ஆவிக்குரிய மருந்தாக எடுத்துக்கொள்ளலாம். இது கடந்துபோகும் ஒரு பள்ளத்தாக்குதான்! இங்கே அப்பொல்லியோன் தனது வித்தைகளை காண்பிப்பான். நம்மை பயமுறுத்துவான். வியாதிப்படும் நமது அன்பானவர்கள், மரித்துவிடுவார்கள் என பயமுறுத்துவான். இறந்துபோன மனிதர்களை ஞாபகப்படுத்தி, அவர்கள் அவதிப்படட சம்பவங்களை நமது ஞாபகத்தில் கொண்டுவருவான். தீய சக்திகள், (Evil Spirits) நமதருகில் வந்து, சர்ப்பங்களை போல, அவைகள் இரைச்சல் சத்தங்களை உண்டுபண்ணுவதை, நம் காதுகளில் அவன் கேட்க பண்ணுவான். சாதாரண சுகவீனங்களை புற்று நோய்கள், மற்ற பயங்கரமான வியாதிகள் போலவும் காட்டுவான். உங்கள் பிள்ளைகள் இருசக்கர வாகனங்களில் பிரயாணம் பண்ணும்போது, நீங்கள் தினசரி பத்திரிகைகளில் வாசிக்கும் விபத்துக்கள் அவர்களுக்கு நேரிடும் என ஒரு எண்ணத்தை உருவாக்குவான். நமது மனநிலையை அதிகமாக தாக்குவான்.

இந்த பள்ளத்தாக்கில் கடந்து போகும்போது, நாம் தனிப்பட்ட முறையில் ஜெபிக்கவும், ஆண்டவரின் வசனங்களை, தேடிப் படிக்கவும் வேண்டும்.

" நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்" ( சங்கீதம் 23:4). இந்த வசனத்தை மனப்பாடம் செய்துகொள்ளவேண்டும். "நான்" என்ற இடத்தில் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடக்கும் உங்களின் அன்பார்ந்தவர்களின் பெயர்களை வைத்துக்கொள்ளவும்.

தொடர்ந்து படிக்க..... மேகமும், இருளும் மூடும் பாதை