குப்பைவாரியுடன் ஒரு மனிதன்

Home

முந்திய பகுதி.....இளைப்பாறும் வீடு

குப்பைவாரியுடன் ஒரு மனிதனும் ராஜாவின் அரண்மனையில் வசிக்கும் சிலந்திகளும்

சற்றுநேரம் கழித்து பொருள்கூறுபவர் ஒரு அறையில் ஒரு மனிதன் தன் கைகளில் ஒரு குப்பைவாரி வைத்துக்கொண்டு, கீழே பார்த்தவண்ணம் குப்பையையும் அழுக்கையும் சேர்த்துக்கொண்டிருப்பதை காண்பிக்கிறார். அவன் தலைக்கு மேலாக ஒரு தேவதூதன் ஒரு அழகிய கீரீடத்தை வைத்துக் கொண்டு நிற்பதை அவன் கவனியாமல் தரையை துப்புறவு பண்ணும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான். பொருள்கூறுபவர், "இந்த மனிதனின் இருதயமோ இந்த உலகத்துக்கு அடுத்துள்ள காரியங்களில்தான் இருக்கிறது. பரலோக மேன்மைகளைக் குறித்து அவனுக்கு அக்கறை இல்லை," என்றுரைக்க, கிறிஸ்டியானா தான் ஒருபோதும் இந்த மனிதனை போல் மாறக்கூடாது என வேண்டுகிறாள். விஷம் வாய்ந்த சிலந்தி பூச்சி அடுத்தக் காட்சியில், ஒரு ராஜா அரண்மனையில் கூடுகட்டும் ஒரு சிலந்தி பூச்சை பொருள்கூறுபவர் காண்பித்து, "இந்த விஷம் வாய்ந்த பூச்சி, ராஜாவின் அரண்மனையில் வசிக்கிறது. அனேக சிலந்திகள் ராஜாவின் அரண்மனையில் கைகளை வைத்து சுவற்றில் ஏறி, தொங்கிக்கொண்டிருக்கிறது. இதுபோல்தான் பாவமான விஷம், கிறிஸ்து ராஜாவின் அரண்மனையில் மறைந்து இருக்கிறது. நம்மை எப்போதுவேண்டுமானாலும் தாக்கும். கவனமாக இருக்கவேண்டும் என்று பொருள் சொன்னவுடன் பெண்களின் கண்களிலிருந்து தண்ணீர் வரத்தொடங்கியது.

கற்றுக்கொள்ளும் பாடம்

அழிந்து போகும் இந்த மண்ணிற்காக நாள்தோறும்

உழைக்காமல், அழியாததும் மகிமையானதுமான பரலோக காரியங்களுக்காக நாம் உழைக்கவேண்டும்.

ராஜாவின் அரண்மனையில் பிரவேசித்துவிட்டோம் இனி பயம் ஒன்றும் இல்லை என்று எண்ணாமல் பாவ விஷம் கொண்ட பாவமாகிய சிலந்திகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும்.

சபை போதகர்கள் இங்கே கூறப்பட்டுள்ள உவமைகளை மாதிரியாக வைத்து தங்களும் சிறிய உவமைகள் (Parables) மூலமாக சத்தியங்களை சபை மக்களுக்குப் போதிக்கவேண்டும்.

கலை கல்வி (Art Education) மூலம் நாம் போதிக்கவேண்டும். ஸ்கிரீனில் (Computer Screen) அல்லது மரப்பலகையில் (Black Board) படம் வரைந்து போதிக்கவேண்டும். இன்று, நமது போதகர்கள், அதிக வேத வசனங்களை சொல்லி கேட்பவரின் உள்ளத்தில் மனச்சலிப்பை உண்டுபண்ணுகிறார்கள். ஆவிக்குரிய சபை என்று பெயர்கொண்ட தில்லியில் ஒரு சபையில் ஒரு போதகர் தமிழ்நாட்டிலிருந்து வந்து ஒரு செய்தியை கொடுத்தார். வேத வசனங்களை அள்ளி அள்ளிக் கொட்டினார். அந்த சபையிலுள்ள விசுவாசிகள் முதல் தலைமுறை கிறிஸ்தவர்கள். அவர்கள் அவர் அளித்த செய்தியை புரிந்துகொண்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை. கிறிஸ்துவும் உவமானங்கள் மூலம் தான் மக்களுக்குப் போதித்தார்.

தொடர்ந்து படிக்க.... தாய்க்கோழியின் உவமானம்