பயம் விளைவிக்கும் கடுமையான அரக்கன்

Home

முந்திய பகுதி ....இளைப்பாறும் ஸ்தலம் (Arbor)

பயம் விளைவிக்கும் கடுமையான அரக்கன்

தொடர்ந்து பயணம் செய்ய கிறிஸ்டியான் எந்த இடத்தில் சிங்கங்களை சந்தித்தானோ அந்த இடத்திற்கு கிரேட் ஹார்ட் பயணிகளை தைரியமாக வாள் ஏந்தி, எல்லா பாதுகாப்போடும், கொண்டுச் செல்கிறார். அப்போது "கடுமையான இரத்தம் தோய்ந்த மனிதன்" (Grim, or Bloody-man) என்ற பெயர்கொண்ட ஒரு அரக்கன், அங்கே வந்து பயணிகளை முன் செல்லவிடாமல் தடுக்கிறான். "இது ராஜாவின் நெடுஞ்சாலை; இதன்வழியாக போகும் பலவீனமான பயணிகளை சிங்கங்களை வைத்து, தடை செய்ய உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது," என்று அந்த அரக்கனை கிரேட் ஹார்ட் அதட்டினார். அப்போது ஒரு சண்டை நடக்க, கிரேட் ஹார்ட் தனது பட்டயத்தால் அவன் தலையில் அடிக்க, அவனது தலைக்கவசம் உடைகிறது. பின்பு அவனது கையை வெட்டினார். பயணிகள் பயந்து நடுங்க, வழிகாட்டி "சிங்கங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. என்னை பின்பற்றி வாருங்கள்; ஒரு தீங்கும் வராது," என்று உரைக்கிறார். கற்றுக்கொள்ளும் பாடம் இந்த அரக்கன் சாத்தானின் நிழல். இவனை மேற்கொள்ள கிரேட் ஹார்ட் போன்ற ஊழியர்கள் அவசியம். கிறிஸ்து தமது சீடர்களுக்கு கொடுத்த அதிகாரத்தை அறியாத தேவ மக்களுக்கு, கிரேட் ஹார்ட் போன்ற ஊழியர்கள் மிகவும் அவசியமே! இவர்கள் இருபுறமும் கூர்மையுள்ள பட்டயத்தை (Two edged sword of the Spirit) வைத்து இந்த அரக்கனோடு யுத்தம் பண்ணுகிறார்கள்.

இந்த அரக்கன் அப்பாவி தேவஜனத்தை பயத்தின் மூலமாக அழிக்கும்படிக்கு அவர்களின் மனதில் பயத்தை விளைவிக்கும்படி சிங்கங்களை போல சூழ்நிலைகளையும், தீய மனிதர்களையும் அனுப்பி வைக்கிறான்.

கிரேட் ஹார்ட் இந்த அரக்கனின் தலைக்கவசத்தையும் உடைக்கிறார். இதுபோல, பாதிக்கப்பட்ட தேவபிள்ளையின் வாழ்க்கையை நன்றாக புரிந்துகொண்டு சாத்தான் எப்படி பயத்தை விளைவிக்கிறான், சாத்தானின் தலைக்கவசம் எங்கே இருக்கிறது என்று பகுத்தறிந்து, ஊழியர்கள் அதனை உடைக்கவேண்டும். பின்பு எப்படி இந்த அப்பாவி தேவமக்கள் பயத்தினால் சாத்தானின் கைகளுக்குள் விழுகிறார்கள் என்று அறிந்து அவன் கைகளின் மூலமாக வரும் கிரியைகளை அழிக்க வேண்டும்.

சாத்தான், அநேக தேவ மக்களை சிங்கத்தைக் காண்பித்து, விசுவாசத்தில் பின்வாங்க செய்து விடுகிறான். சபை போதகர்கள் ஒவ்வொரு விசுவாசியின் உள்ளத்திலுள்ள உள்ளான போராட்டத்தை அறிந்துகொள்ளமால், எல்லாருக்கும் ஒரு பொதுவான செய்தியை கொடுத்துவிட்டு அனுப்பி வைப்பது வழக்கம். "சிங்கங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. என்னை பின்பற்றி வாருங்கள்; ஒரு தீங்கும் வராது", என்று அவர்களுக்கு தைரியம் அளிக்கும் ஊழியர்கள் தேவை. இப்படி விடுதலை ஊழியம் செய்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மற்றவர்கள் பின்பற்றும் படியாக ஒரு மாதிரியாக (Ensample) இருக்கவேண்டும்.

பொல்லாத ஆவிகள் பலவீனரான பெண்களை ஆட்கொள்கிறன. இவர்களுக்கென்று தனிப்பட்டமுறையில் ஊழியம் செய்து, இவர்களை ஊழியத்தில் நிலை நிறுத்தவேண்டும்.

மகதலேனா மரியாளிடமிருந்து இயேசு ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். இந்த பெண்மணி ஒரு வல்லமையுள்ள கிறிஸ்துவின் உயிர்தெழுததிலின் சாட்சியாக மாறிவிட்டாள் (மாற்கு 16:10).

எங்களது சபையில் ஒரு இந்து பிரமாணக்குலத்தை சேர்ந்த ஒரு வாலிப பெண்ணை அநேக பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தன. நாங்கள் விடுதலைக்காக ஜெபிக்கும்போது ஒரு பொல்லாத ஆவி எங்களோடு ஹிந்தியில் பேச ஆம்பித்து, "நான் இந்த பெண்ணை விட்டுவிட்டால், இவள் அநேக மக்களை என்னிடமிருந்து விடுவிப்பாள்" என்று சொல்லியது. பின்பு நாங்கள் போராடி ஜெபித்து தேவவசனத்தால் சாத்தானை மேற்கொண்டு அநேக மாதங்களுக்குப்பின்னால் , அவள் விடுவிக்கப்பட்டுவிட்டாள்.

தொடர்ந்து படிக்க........அழகிய மாளிகையை அடைதல்