பெரிய இருதயம் (கிரேட் ஹார்ட்)

Home

முந்திய பகுதி......அழகிய குமாரத்தியின் பணிகள்

பெரிய இருதயம் (கிரேட் ஹார்ட்) செய்யும் தனி ஆட்டுக்களுக்கான ஊழியம்

பெரிய இருதயம் (கிரேட் ஹார்ட்) பயணிகளை, எந்த இடத்தில் கிறிஸ்டியானின் சுமை விழுந்ததோ, அங்கே அழைத்துச் சென்று காண்பிக்கிறார். பின்பு கிறிஸ்டியானாவுடன், ஆவிக்குரிய காரியங்களை விளக்கிப் போதிக்கிறார். தேவ நீதியை குறித்தும், அதை எப்படி பெற்றுக்கொள்கிறோம் என்பதை விவரமாக எடுத்துச் சொல்லுகின்றார். கிறிஸ்டியான் சந்தித்த மூன்று உறங்கும் மனிதர்களான மூடன் (Simple), சோம்பேரி (Sloth), ஊகிப்பவன் (Presumption) எந்த இடத்தில் சங்கலிகளால் கட்டப்பட்டு இருந்தனரோ, அந்த இடத்தை, கிரேட் ஹார்ட் காண்பித்துக்கொடுக்கிறார். இந்த மூன்று மனிதர்களும் நல்ல உள்ளம் படைத்தவர்களாக இருந்தபோதிலும், மோட்ச பயணிகளாக விருப்பம் இல்லாதிருந்தனர் என்று அவர் கூறுகிறார். அவர்களின் பரிதாபமான முடிவை கூறி மனவருத்தம் அடைகிறார். பின்பு கிரேட் ஹார்ட் பயணிகளை கிறிஸ்டியான் சேர்ந்த கடின மலையைக் (Hill Difficulty) காண்பிக்கிறார். கிறிஸ்தியான், அங்கேயுள்ள நீரோடைக்குச் சென்று தெளிந்த நீரைப் பருகி, களைப்பு நீங்கியவனாக, இடுக்கமான பாதையின் வழியாக மலையேறத் துவங்கிய இடத்தையும் காண்பிக்கிறார். இடுக்கமான பாதை மலையேறும் கடினமான பாதையாக இருப்பதைக் கண்ட சம்பிரதாயன் (Formality), வெளி வேசக்காரன் (Hypocrisy) இருவரும் மற்ற இரண்டு பாதைகளிலும் தனித்தனியே பிரிந்து சென்றதையும் கூறுகிறார்.

கற்றுக்கொள்ளும் பாடம்

பெரிய இருதயம் (கிரேட் ஹார்ட்) போன்ற ஊழியக்காரர்கள் மிகவும் அவசியம். வெறும்மேடையிலிருந்து ஞாயிறு தோறும் மணிக்கணக்காக செய்தி கொடுத்தால் மாத்திரம் போதாது. தனிப்பட்ட முறையில் சத்தியங்கள் விளங்கும்படியாக போதிக்கவேண்டும். தனிப்பட்ட முறையில் ஒரு ஆட்டின் ஆவிக்குரிய பிரச்சனைகளை மேய்ப்பன் நன்கு அறிந்து இருக்கவேண்டும்.

எந்தந்த இடங்களில் தேவ மக்கள் வழிவிலகும் பாதைகள் இருக்கிறதோ அங்கே எச்சரிக்கையுடன் போகும்படி சபை மக்களுக்கு விசேஷித்த ஆலோசனைகளையும் போதனைகளையும் தனிப்பட்டமுறையில் எடுத்துரைக்கவேண்டும்.

மோட்சப்பாதையில் கடந்து மோட்சத்தை அடைந்த பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகளைச் சபைகளில் போதிக்கவேண்டும்.

தொடர்ந்து படிக்க....இளைப்பாறும் ஸ்தலம்