கிறிஸ்டினாவின் பயணம்

கிறிஸ்டியானாவின் கனவும், பயணமும்

கிறிஸ்டியானாவுக்கு தன் கணவன் மோட்சம் போய் சேர்ந்தவுடன், தனக்கு நிம்மதி இல்லை. ஒரு கனவில் தன் கணவன் ஒரு ஒளி நிறைந்த தேசத்தில் சந்தோஷமாக பாடிக்கொண்டு மற்ற பரிசுத்தவான்களுடன் இருப்பதை காண்கிறாள். பின்பு ஒரு தேவதூதன் அங்கே தோன்றி பரலோகத்திலிருந்து அவளுக்கு கொடுக்கப்பட்ட அழைப்புதல் கடிதத்தை கொடுக்கிறான். மோட்சப்பயணத்தில் கிறிஸ்டியானாவும் அவளது நான்கு குமாரர்களும், mercy என்ற அண்டை வீட்டு பெண்ணும், பரதேசிகளாக கிறிஸ்டியான் பாதையில் பின் துடர்ந்து செல்கிறார்கள். அயல் வீட்டுக்கார்கள் அவர்கள் பயணம் செய்வதை தடை செய்கிறார்கள். பின்பு தன் குமாரர்களை பரலோக பயணத்தை மேற்கொள்ளும்படி புரியவைத்து, எல்லாரும் சேர்ந்து, பயணத்தை மேற்க்கொள்ளுகிறார்கள். தன்னை கேலிசெய்த. பயந்தான்கொள்ளி என்ற அண்டை வீட்டுக்காரியுடன் தர்க்கம் பண்ணி, பயணத்தை தைரியமாக தொடருகிறாள். கற்றுக்கொள்ளும் பாடம் இதுபோல நாம் நமது குடும்பமாக இந்த உலகத்தில் பரதேசிகளாக வாழவேண்டும். இந்த உலகத்தையும் அதிலுள்ள பொருட்களின் மேலும் ஆசை வைக்காமல் ஜீவிக்க வேண்டும். நமது பிள்ளைகளுக்கும் குடும்பத்திலுள்ள எல்லாருக்கும் பரலோகத்தைக்குறித்து தரிசனம் கிடைக்க வழி நடத்தவேண்டும்.

தொடர்ந்து படிக்க.........கிறிஸ்டியானா நுழைவு வாசலில்