அழகிய மாளிகையை அடைதல்

Home

முந்திய பகுதி.....பயம் விளைவிக்கும் கடுமையான அரக்கன்

அழகிய மாளிகையை அடைதல்

போர்டர்ஸ் லாட்ஜ் (Porter’s Lodge) அல்லது அழகிய மாளிகை (Palace Beautiful) என்பது ஒரு விசேஷித்த தோழமை கூடல். இதையும் ஒரு சபைக்கு ஒப்பிடலாம். இது ஒரு தற்காலிக தங்கும் சத்திரம். இதை ஒரு அழகான மாளிகையாகவும் இருக்கிறது. கிரேட் ஹார்ட் (Great Heart) பயணிகளை இங்கே கொண்டுவந்து விட்டுவிட்டுத் திரும்பிப் போகிறார். அவருக்கு இங்கே வேலை இல்லை. இங்கே விசேஷித்த ஊழியர்கள் பணி விடை செய்கிறார்கள். இந்த சத்திரத்தின் தலைவரின் பெயர் கண்காணிப்பு (Watchful). கண்காணிப்பு பயணிகளை வரவேற்று அங்கேயுள்ள குமாரத்திகளை அழைத்து "தாழ்மை மனது" (Humble Mind) என்ற ஒரு குமாரத்தியிடம் இவர்களைப் பராமரிக்கும்படி சொல்லுகிறார். பயணிகள் யார் என்று அறிந்துகொண்டு, கிறிஸ்டியானின் மனைவி பிள்ளைகள் என்று அறிந்ததும், அந்த வீட்டில் ஒரு குதுகூலம் உண்டாகிறது. இங்கே "முன்யோசனை (Prudence), பக்தி (Piety), கருணை (Charity)" போன்ற குணாதிசயங்களை கொண்ட ஊழியர்கள் காணப்படுகிறார்கள்.

விவேகம் (Prudence) என்ற பெண்மணி கிரிஸ்டியாவின் பிள்ளைகளாகிய ஜேம்ஸ் மாத்தியூ ஜோசப் என்பவர்களுக்கு "வினா விடையாகக் கற்பிக்கப்படும்" பாடம் (Catechism) எடுக்கிறாள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

"கண்காணிப்பு' (Watchful) வீட்டின் உள்ளே கள்ள போதகர்களையும் கள்ள தீர்க்கதரிசிகளையும் வரவிடாமல் தடுத்துக் கொள்கிறார்.

இந்த வீட்டிற்கும் முன்பு ஒரு இரவு தங்கிய வீட்டிற்கும் (House of Interpreter) சில வித்தியாசங்கள் உண்டு. இந்த வீட்டில் அநேக நாட்கள் பயணிகள் தங்குகிறார்கள். முந்திய வீட்டில் ஒரு இரவு மாத்திரம் தங்கினர். இங்கே அவர்களுக்கு விசேஷவிதமாக பணிவிடை செய்யும் ஊழியர்கள் உண்டு. இவர்கள் வாலிப பிள்ளைகளுக்கு விசுவாசத்தில் உறுதி செய்ய, விவேகம் (Prudence) என்ற ஊழியரின் மூலமாக போதனைகள் (catechism) கொடுக்கப்படுகின்றது. அவர்களது கல்யாணம், படிப்பு காரணமாக உதவிகள் செய்யப்படுகிறது. முந்திய வீட்டில் பொருள்கூறுவர் மூலம் பயணிகள் சத்தியங்களை உவமானங்கள் (Parables) மூலம் கற்றுக்கொண்டனர். ஆனால் இந்த வீட்டில் - (i) விவேகம் (Prudence) என்ற ஊழியரின் மூலமாக கள்ள உபதேசங்களை பகுத்தறிவு செய்யும் (discernment) பயிற்சியும், கருணை ஊழியரின் மூலமாக தரித்திரரான பரிசுத்தவான்களுக்கு உதவி செய்யும் பயிற்சியும், ஏழைகளுக்கு உதவி செய்யும் பயிற்சியும் (ministry to poor saints and charity work),

(ii) பக்தி ஊழியரின் மூலமாக தேவனிடம் தனிப்பட்ட உறவு வைக்கும் (Personal devotion to God) பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

முந்திய வீட்டைப் பார்க்கிலும் இந்த வீட்டில் (இந்த அழகிய மாளிகையில்) சில விஷயங்கள் உண்டு. ஒவ்வொரு உள்ளூர் சபையும் நாளடைவில் பலன் கொண்டு ஒரு அழகிய மாளிகையாக மாறவேண்டும். இன்று நடப்பது என்ன? ஒரு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சபை எண்ணிக்கையில் மாத்திரம் வளர்ந்து ஒரு மெகா சபையாக (Mega Church) மாறிவிடுகிறது. தரத்தில் வளராமல் எண்ணிக்கையில் மாத்திரம் வளர்கிறது. இந்த அழகிய மாளிகையாக இருக்கும் சபையிலுள்ள ஊழியங்கள் இன்று நமது சபைகளில் கிடையாது. எல்லா காரியங்களையும் கவனிப்பது ஒரே போதகர் தான்! ஊழியத்தில் சபை மக்களுக்கு இதுவரை பயிற்சி அளிக்கப்படவில்லை. கள்ள போதகர்களை, கள்ள தீர்க்கதரிசிகளைப் பகுத்தறியும் போதனைகள் கொடுக்கப்படவில்லை.

சபை தரத்தில் வளராவிடில், விசுவாசிகளும் தங்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரமாட்டார்கள். எப்போதும் குழந்தைகளாகவே இருப்பார்கள். சீடர்களாக மாறமாட்டார்கள்.

தொடர்ந்து படிக்க.....அழகிய மாளிகையில் நடக்கும் பணிகள்

.